செவ்வாய், 15 ஏப்ரல், 2014

மாயத்தூரிகை - முழு நாவல்

http://en.calameo.com/read/0028834693d533b7a7883

14 கருத்துகள்:

  1. THANK YOU.... படிச்சுட்டு சொல்கிறேன்....

    பதிலளிநீக்கு
  2. மாயதூரிகை ----- நிவி கேரக்டர் ரொம்ப அழகா விளக்கி இருப்பிங்க ..உறவுகளின் அரவணைப்பு தேவை யான வயதில் அவை கிடைக்காமல் தன்னை தன்னுள் புதைத்து கொண்டு மருகும் நிவி யின் உணர்வுகள் ரொம்ப நல்லா எழுதி இருந்திங்க ..அவள் மீட்க்க துடிக்கும் வருண் , சுமி எனக்கு ரொம்ப பிடித்தது ..

    தூரிகா --நந்தா , நிவி - கிஷோர் காதல் யாரை குற்றம் சொல்வது என்று சொல்ல முடியாத குழப்பம் .... நிவி தனுக்குள் சொல்லி கொள்வது போல அவள் காதலின் ஆழம் அவளை கிஷோரிடம் சேர்க்கிறது - வருண் மூலம் ...உண்மையான அன்பு என்றும் தோற்காது என்பதை அழகா சொல்ல்லிட்டிங்க ..

    கிஷோர் தனக்கு நிவி மேல் ஏற்படும் ஈர்ப்பை உணர்வதும் சூப்பர் ....நான் தொடர் கதையா படித்தேன்...படிக்கும் பொது எப்போ கிஷோர் புரிஞ்சிக்க போறான் , தெரிந்ததும் என்ன செய்வான் என்று ரொம்ப ஆர்வம் இருந்தது .... ரொம்ப எதிர்ப்பார்த்தேன் ..அப்போ எனக்கு கிஷோர் நிவி தான் தனக்கு படங்கள் வரைந்து அனுப்பினால் என்பதை தெரிந்த பிறகு வரும் காட்சியை நீங்க சுருக்கமா முடிச்சிட்ட உணர்வு ..தெரியல நான் ரொம்ப எதிர் பார்த்துட்டேன் போல ...ஏன்னா நிவியின் கிஷோர் மேல் உள்ள காதல் ஒரு தவம் போல அவளவு ஆழமானது..அதற்க்கு கிஷோரே வெளிபாடு சாதரணமா இருந்ததோ ஒரு எண்ணம்..

    என் மனதில் பட்டதை சொன்னேன் ..தப்பா இருந்தா மன்னிச்சிடுங்க ...

    எனக்கு ரொம்ப பிடித்தது ...திரும்ப படிக்கணும் என்று ஆசையை தூண்டும் novel ...கடைசி நாலு ஐந்து அப்டேட் இரண்டு மூன்று தடவை படித்தேன் ..என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ...உங்க அடுத்த கதைக்கு ஆவலா காத்திருக்கேன் ...

    பதிலளிநீக்கு
  3. ஹாய் உமா,

    உங்களுடைய கருத்துக்களுக்கும், விமர்சனத்திற்கும் மிக்க நன்றி....

    நிறைகளை விட குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள் உமா, இதில் தவறாக நினைப்பதற்கு எதுவுமில்லை, என்னுடைய எழுத்தை வளப்படுத்த மிகவும் உதவும்...

    உண்மையைச் சொல்லப் போனால், நிவியின் உணர்வுகளை என்னால் எளிதாக கற்பனை செய்து எழுத முடிந்தது, ஆனால் ஓர் ஆணின் உணர்வுகளை அந்த அளவு என்னால் கற்பனையில் கொண்டு வர முடியவில்லை... நீங்கள் சொல்லும் இடம் எனக்கும் திருப்தியில்லை, சில நாட்களுக்குப் பிறகு அதில் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தோன்றியதை எழுதிவிட்டேன்...

    நன்றி உமா...

    பதிலளிநீக்கு
  4. உங்களின் முதல் நாவல் இரு துருவங்கள் படிச்சேன்... அருமையான கதை களம்.... அதை நீங்கள் கொண்டு சென்ற விதமும் அருமை.....

    மாயதுரிகை இனிமேல் தான் படிக்க போறேன்.... இன்னும் எத்தனை நாளுக்கு லிங்க் இருக்கும்....?? டெலீட் செய்துடாதீங்க....

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான காதல் காவியம் மாயத்தூரிகை...நிதாவின் உணர்வுகளின் வெளிபாடு அற்புதம்..அப்படியே ஐம்பது நாவெல்கள் எழுதிய அனுபவ முதிர்ச்சி உங்களின் ரெண்டு கதைகளிலும் தெரிகிறது..இது ரெண்டாவது கதை என்று என்னால நம்ப முடியவில்லை..எழுத்துநடை சூப்பர்..கற்பனைவளம் அருமை..திரும்ப திரும்ப படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது..கிஷோரின் உணர்வுகளின் வெளிபாடு இன்னும் மெருகேற்றி இருக்கலாம் என்று தொன்னுகிறது..ஏன் என்னில் நிதாவிடம் இன்னும் முழ காதலை எதிர் பார்க்காமல் வாழ்வையும் தொடங்கிவிட்டான்..அந்த நேரத்தில் அவன் ரமேஷ் தான் காதலன் என்று சந்தேகப் பட்டு இருந்ததால் அவளின் உணர்வை சரியாக புரிந்து கொண்டானா என்று தாங்கள் இன்னும் சிறிதுவிளக்கி இருக்கலாம்....மேலும் அவளின் ஓவியத்திற்கு அவனின் பதிலும் சரியாக சொல்லப்படவில்லை என்று தோன்றுகிறது சம்யுக்தா..தவறு இருந்தால் மன்னிக்கவும் சம்யு..உங்களின் இருகதைகளும் என் பெட்டகத்தில் சேமித்து வைத்து உள்ளேன்..மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு வருகிறேன்..அற்புதமான கதைக்கு என் பாராட்டுக்கள் சம்யு...அடுத்து கதையை விரைவில் எதிர் பார்க்கும் உமா மனோஜ்

    பதிலளிநீக்கு
  6. Hi Samyu
    கிஷோர் நிதாவின் காதலுக்கு justify பண்ணவில்லை என்று தோன்றுகிறது. last 3 episodes வேகமாக முடிந்தது போல் ஒரு feeling.

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றி வெண்ணிலா...
    லிங்க் இப்படியேதான் இருக்கும், நேரம் கிடைக்கும் போது படியுங்கள்...

    உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி உமா மனோஜ்... தவறாக நினைப்பதற்கு இதில் ஒன்றும் இல்லைப்பா... என்னுடைய எழுத்தை மெருகேற்றத்தானே உதவுகிறீர்கள்...

    சில இடங்களில் கிஷோரின் உணர்வுகளைச் சரியாகச் சொல்லாமல் விட்டிருக்கிறேன்... ஆனால், வாழ்வைத் தொடங்கும் இடத்தில் முழுக்காதலையும் எதிர்பார்க்காமல் தொடங்குவதாகத்தான் முதலிலேயே முடிவு செய்திருந்தேன்...

    நீங்கள் சொன்னது போல இறுதியில் சில விளக்கங்கள் சொல்லியிருக்கலாம்... இனிமேல் மாற்றம் செய்துகொள்கிறேன்...நன்றி

    நன்றி vai sri
    கதை வளவளவென்று நகர்கிறதோ என நினைத்து, முதலிலேயே படிப்பவர்களுக்குத் தெரிந்ததுதானே என்று வேகமாக முடித்ததால் வந்த விளைவு... பொறுமையாக முழு நாவலையும் படித்துப் பார்த்து எடிட் செய்திருந்தால் தவிர்த்திருக்கலாம்... இப்போது சில இடங்களில் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. சில இடங்களில் கதை சரி செய்து எடிட் செய்தபின் அந்த லிங்க் தருவிங்களா சம்யு?எப்படி இருக்கு என்று அதையும் படிக்க ஆர்வம்பா..

    பதிலளிநீக்கு
  9. Hi Samyuktha,
    உங்க ரெண்டு கதையும் ரொம்ப நல்லா இருந்தது. உங்க அடுத்த கதைகாக காத்திருக்கிறேன்.அடுத்த கதை எப்ப ஆரம்பிக்க போறீங்க? ஆவலா காத்திருக்கிறேன் படிப்பதற்கு.Thanks a lot for the Super stories.
    Malar.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஹாய் சம்யுதா , உங்களோட மாயத்தூரிகை நாவல் படித்தேன். ஹப்பா அதோட தாக்கம் இன்னுமே என் மனசை விட்டு போகவே இல்லை. அவ்வளவு தாக்கம்.........

    நிவேதிதாவில் துவங்கும்
    பயணம்......., வார்த்தைகளே பேசாமல், உணர்வுக் குவியலாக ஒரு பெண்ணை மாற்ற முடியுமா? உங்க எழுத்து அந்த மாயத்தை செய்திருக்கிறது.

    ஒருவனை எவ்வளவு அதிகமாக நேசிக்க முடியுமோ, அவ்வளவு அதிகமாக நேசித்து, அந்தக் காதல் நிறைவேறாது என்பதில் தவித்து, தனிமையில் துடித்து......., ஹப்பா அவளோட வலியை எங்களை உணரவைத்த உங்களின் எழுத்து....., சான்சே இல்லை.

    கிஷோர்...., முதல் சந்திப்பிலேயே நிவேதிதாவின் மனதில் காதல் விதையையும், நம்பிக்கையையும், கற்கும் ஆர்வத்தையும் அவளுக்குள் விதைத்துவிட்டு, விலகிச் சென்றவன்.

    தூரிகா....., வாழ்க்கையை எதார்த்தமாக எதிர்கொள்ளும் துணிவுள்ளவள். அவளது நந்தனும், கிஷோரும் ஒரே ஆள் என அறிந்து துடிக்கும் நிவேதிதாவின் தவிப்பும் துடிப்பும்......, கதையின் முதல் பக்கம் துவங்கி, இறுதி பக்கம் வரைக்கும் கதையின் அழுத்தம் குறைவே இல்லாமல் செல்கிறது.

    சொந்தங்கள் இருந்தும் தனிமையில் வாடும், வளரும் ஒரு பெண்ணின் மனநிலை இப்படித்தான் இருக்கும் என்பதை கண்முன் கொண்டு வந்துட்டீங்க.

    அதிலும் தன் உள்ளத்தில் இருக்கும் எந்த விஷயத்தையுமே, வார்த்தையில் வடிக்க முடியாமல் அவள் தடுமாறும் இடங்கள், தவிக்கும் இடங்கள்........, சம்யுதா........ omg........ படிக்கும்போது நான் உணர்ந்த விஷயத்தை வார்த்தையில் வடிக்க கூட எனக்குத் தெரியலை. அவ்வளவு அருமை.

    நட்புக்கு இலக்கணமாக சுமித்ரா......, அருமையான தோழி......, நிவேதிதா அவளுக்கு அந்த அளவு உண்மையாக இல்லை என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு விஷயத்திலும் சுமி நிவேதிதாவை அரவணைக்கப் பார்க்க, தன் நெருங்கிய தோழியிடம் கூட மனம் திறக்காமல்........, அவ்வளவு அழுத்தமாக.........

    நிவேதிதாவை சில நேரம் என்ன செய்யலாம் என்ற கோபம் கூட வந்தது......., ஹப்பா ஆனாலும் ஒரு வழியா நம்ம டாக்டர் அவ மனதில் இருப்பதை கண்டுபிடித்து, அவளை கிஷோருடன் சேர்க்க எடுக்கும் முயற்சி....., அட்டகாசம்.

    சொந்த பெரியம்மாவே அவள் காதலுக்கு எதிரியாகும் விந்தை. தான் வரைந்த ஓவியங்களும், அலைபேசி அழைப்புகளையும் கிஷோர் தூரிகாவோடு இணைத்துப் பார்த்ததை விதி இல்லாமல் வேறென்ன என்று மனதுக்குள் துடிக்கும் நிவேதிதா......., இவ்வளவு தடைகளையும் மீறி...., அவர்கள் காதலை நீங்க இணைத்தது சூப்பர்.

    கிஷோருடன் சேர்ந்த பிறகு கூட தன் காதலைச் சொல்ல தைரியம் இல்லாமல் இருக்கும் நிவேதிதா...... ஒரு வழியா தோழி மூலமாக அவனுக்கு தெரிய வைத்து, தன் சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றிகொள்ளும் அழகு தனி.......

    ரொம்பவே அழகான, அருமையான, அழுத்தமான கதை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஹாய் உமா மகேஸ்வரி

    கடைசி மூன்று அத்தியாயங்களில் சிறிது மாற்றம் செய்திருக்கிறேன் உமா... முழுமையாகச் செய்ய நேரம் கிடைக்கவில்லை... இன்னும் சேர்க்க வேண்டியது இருக்கிறது... பொறுமையாகச் செய்து கொள்ளலாம் என்று எடுத்து வைத்துவிட்டேன்... அதனால் இப்போதைக்கு லிங்க் கொடுப்பது சிரமம்பா...

    ஹாய் மலர்

    மிக்க நன்றி... உறவினர்கள் வருகை அதிகமாக இருப்பதால் டைப் செய்ய நேரம் கிடைக்கவில்லை... அடுத்த வாரம் முயற்சிக்கிறேன் மலர்.

    ஹாய் இன்ஃபா

    உங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி...
    ஒரு அத்தியாயத்தின் அளவு, இவ்வளவு பெரிய கமெண்ட்டை எதிர் பார்க்கவில்லை... நன்றி.

    பதிலளிநீக்கு