வியாழன், 26 மார்ச், 2015

கலையாத கனவுகள் - 16வது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469009c00b48f9c

10 கருத்துகள்:

  1. So it's going to be Laurus then.... poor Chaitanya, after all this time now only he started feeling something for Rithanya.... or like his friend said that he started realizing his feelings which he already had since his college days..... poor guy it will be hard on him, but I'm sure he won't show it like he always did...... Laurus is also a good person and like his character very much but I dont know why but I favor Chaitanya and feel sorry for him ...... :( :(

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சம்யுக்தா,
    உங்கள் கதையை அப்‌டேட் செய்துவிட்டேன்.

    சைதன்யா - ஒரு சராசரி ஆண்மகன். குடும்பத்துக்காக வாழ்பவன். இப்படி பட்ட ஒருவனிடத்தில் காதலை சொன்ன ரியாவின் நேரம் சரியில்லை. சைதன்யாக்கு தன் குடும்பம் தான் முதல் பின்னர் தான் அவன் தனிப்பட்ட வாழ்க்கை. ரியாவின் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கிறது ஆனால் அது காதலா என்று அவனுக்கு புரியவுமில்லை உணரவும் இல்லை. ரியா இல்லை தியா என்றாலும் சைதன்யாக்கு ஒன்றுமில்லை. அவன் தந்தை சொன்னதினால் தான் அவனுக்குள் இருந்த ஒரு சின்ன சலனம், என் தந்தையே சொல்லிவிட்டாரே ஏன் ரியாவை திருமணம் செய்யக்கூடாது என்பது அவனின் தற்போதைய மனநிலை.


    லாரஸ் - இந்த கதையின் கதாநாயகனாக இருக்கவேண்டிய அனைத்து அம்சங்களும் கொண்டு உள்ள Mr.Right.
    ஒரு புரியதலோடு ரியாவை அரவணைத்துக் காக்கும் ஒரு உற்ற தோழனாக இருக்கிறான். அவனுக்குள் இருக்கும் காதல் அவளிடம் சொல்லிவிட்டாலும் அவள் பிடிக்கவில்லை என்றவுடன் வரம்பு மீறாமல் கண்ணியம் காப்பவன்.
    (நீ ரொம்ப நல்லவண்டா, அது என்னமோ தெரியலை லாரஸ் நல்லவனை எல்லாம் பொம்பள பிள்ளைங்களுக்கு பிடிப்பதே இல்லைடா, ஆனா என்னை பொருத்த வரையில் இந்த பிசாசு ரியா கிட்ட உன் வாழ்க்கையை கொடுத்து வீணாக்கிடாததேடா  என்னமோ போடா மாதவா)

    ரியா - ஒரு குழப்பவாதி தான்..
    பதிம வயதில் வந்த ஒரு ஈர்ப்பு அவள் இத்தனை ஆண்டுகளாக பிடித்துக் கொண்டுயிருக்கிறாள். அவளுக்கே இன்னும் புரியவில்லை. இது காதாலா அல்லது சைதன்யாவின் நிராகரிப்பினால் அவள் அடைந்த அவமானம் தான் அவனின் நினைவுகளா என்று.

    அவள் தந்தை சொன்னது போல சைதன்யாவை கைப் பிடித்தால் கண்டிப்பாக பல கம்ப்ரைஸ் பண்ண வேண்டி வரும். கம்ப்ரைஸ் விட அவள் பல ஏமாற்றங்களை தாங்கிக்கொள்ள வேண்டிவரும்.. அவளை மட்டும் தான் சைதன்யாவின் வாழ்க்கையில் பிரதானமாக இருக்க வேண்டும் என ரியா நினைத்தால் பாவம் அவள், அவனுக்கு அவன் தந்தை பாட்டி, அக்கா, அக்காவின் பிள்ளைகள், அவன் வீட்டு நாய்க்குட்டிக்கு பிறகு தான் ரியா.... சைதன்யாவிடம் மாற்றம் ஏற்பட்டாலும் அவனின் இயல்பு மாறப்போவதில்லை.

    ரியாவின் நிலை கவலைக்கிடம் தான். இரண்டு சாய்ஸ்... ரெண்டுமே அவளை பொருத்த மட்டில் பெஸ்ட்.
    ஆனால் அவள் மனது சமன்படாமால் திருமண பந்தத்தில் நுழைந்தால் அவளை திருமணம் செய்பவன் வாழ்க்கை அம்பேல் தான்.

    ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும் என நினைத்தவன் சைதன்யா, தன் தந்தையின் சொற்களால் மாறுபவன், எப்படி ஒரு நியாயவாதியாக இருக்க முடியும். ஒரு நிலைப்பாடற்ற சிந்தைகளை கொண்ட சைதன்யா வாழ்க்கை பயணத்தை ஸ்தரத்தன்மையோடு நடத்த முடியுமா? காதல் என்ற ஒரு உணர்வு தானாக வர வேண்டும் தவிர அது ஒரு convenience க்காக இருக்கக்கூடாது, அந்த விதியின் அடிப்படையில் பார்த்தால் சைதன்யா ஔட் ஆஃப் the கேம்.
    ஆனா இந்த பொம்பள புள்ளைங்க பாருங்க தான் ஆசைப்பட்டவன் எப்படி இருந்தாலும் சரி அவன் எம்புட்டு ஏமாற்றங்கள் தந்தாலும் சரி நான் சந்தோஷமா தான் இருக்கிறேன்னு பீலா விடுங்க... என்னமோ போடா மாதவா !!!!!

    சாம்யுக்தா நான் ஜெட் வேகத்தில் பயணிக்கிறேன் நீங்கள் தான் இப்போது தாமதமாக வருகிறீர்கள் :-) ஹ ஹா...

    சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தை பதியுங்கள்.
    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஹாய் பொற்செல்வி

    தங்களுடைய வரவிற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிப்பா..

    கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்றான்னு சொல்லிட்டீங்க... சைதன்யனோட நிலை அப்படித்தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஜாஸ்

    எக்ஸ்ப்ரஸ் வேகத்தில படிச்சு முடிச்சிட்டீங்க... என்னோட மகளுக்குப் பள்ளி விடுமுறை, அதனால பேசஞ்சர் வேகத்தில கூட வர முடியலை... வீடு முழுக்கக் காகிதங்களாவும், விளையாட்டுப் பொருட்களாவும் பறந்திட்டிருக்கு...

    உங்களோட விரிவான அலசலுக்கு ரொம்ப நன்றி ஜாஸ்... இந்த வாரத்தில கதையை முடிச்சிடுவேன், ஒரு முறை படிச்சுப் பார்த்திட்டு க்ளைமேக்ஸ் டைப் பண்ணணும்னு நினைச்சேன், அதுக்கு வேலையில்லாம செய்யற மாதிரி அலசி ஆராய்ச்சி பண்ணிட்டீங்க :)

    //ஆனா என்னை பொருத்த வரையில் இந்த பிசாசு ரியா கிட்ட உன் வாழ்க்கையை கொடுத்து வீணாக்கிடாததேடா  என்னமோ போடா மாதவா) /// ஹ ஹ ஹா லாரஸ் கிட்ட உங்க அட்வைஸை சொல்லிடறேன்பா..

    மிக்க நன்றிப்பா

    பதிலளிநீக்கு
  6. ஹாஹா.... யெஸ்..... காதல் இருந்தா விட்டுக் கொடுக்கும், தவறுகளை மன்னிக்கும், ஏமாற்றங்கள் இருப்பினும் ஒரு நிறைவைக் கொடுக்கும்....
    ரிது சைதுவை மன்னிப்பாளா, அந்த பழைய போன் அழைப்புக்கும் அவனுக்கும் சம்பந்தமில்லை, அவன் நண்பனின் மிஸ்ச்சீஃப் அது என்பது அவளுக்கு தெரிந்ததா...?!??

    பதிலளிநீக்கு
  7. ஹ ஹா உலகமெங்கும் passenger வேகத்துக்கு ஒரே காரணம் தான் போல.. என் வீட்டு இளவரசிக்கு ஒரு வார பள்ளி விடுமுறை அதற்காக அவள் தந்தையும் விடுமுறை எடுத்துக்கொண்டார், அப்போ passenger வேகமென்ன நடைமேடையிலிருந்து வண்டி நகரவே இல்லை எனக்கு, இரண்டு பிள்ளைகளை சமாளிக்க வேண்டியதாகி போய்விட்டது ஹ ஹா...

    பதிலளிநீக்கு
  8. பொற்செல்வி...

    சைதன்யனோட சைட்ல யாருமே பேச வேண்டாம்பா.. நீங்க ஒருத்தங்க போதும்... உங்க கேள்விக்கு அப்புறமா ரியா சொல்லுவா... இப்படி சொல்லி இப்போதைக்கு எஸ்கேப் ஆகறேன்... நன்றிப்பா

    பதிலளிநீக்கு
  9. உலகமென்ன ஜாஸ், வேற்றுக் கிரகத்திலிருக்கும் குழந்தைகள் கூட இப்படித் தான் இருப்பார்கள்... நம் பெற்றோர்களைப் படுத்திய பாட்டிற்கு நாமும் பட வேண்டுமல்லவா...

    அவர்களுக்கு ஈடு கொடுக்க நம்மால்தான் முடிவதில்லை... ஹி ஹி வயதாகிக் கொண்டே இருக்கிறது. (இது எனக்கு மட்டும்தான் ;)

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு