செவ்வாய், 17 மார்ச், 2015

கலையாத கனவுகள் - 13வது அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469a9b600d999d3

4 கருத்துகள்:

  1. பாவம் ரிதன்யாவே குழம்பி போய் இருக்கிறாள். அவளை மேலும் மேலும் குழப்ப என்றே ஒருவர் மாற்றி ஒருவர் ஏதாவது செய்து கொண்டு இருக்கிறார்கள்.
    நான் ஏற்கனவே சொன்னது போல் அவள் வாழ்க்கை லாரசோடு தான் நல்ல விதமாக அமையும். அவள் சைதன்யனோடு சேர்ந்தால், அவள் பல காம்ப்ரமைஸ் செய்ய வேண்டி வரும். அவள் வாழ்க்கை முறையே மாறியாக வேண்டும். இவள் எண்ணங்கள் சைதன்யன் வீட்டில் உள்ளவர்களோடு ஒத்து போவது கஷ்டம். இதில் யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. அவரவர் வாழ்க்கை முறை, அப்படி.
    விட்டுகொடுத்தால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆனால் அவளின் சுயத்தையே இழந்து அதை பெற்றால், அந்த சந்தோஷம் நீடிக்குமா ?? சைதன்யனுக்கும் அதே நிலைமை தான்.

    இன்னொரு காரணமும் உண்டு.... ஒவ்வொரு பெண்ணிற்கும், அவள் முதல் ஹீரோ அவள் தந்தையே. அதுவும் ரிதன்யாவின் தந்தை , ஒரு தந்தையாக மட்டுமில்லாமல் தாயாகவும் , நண்பனாகவும் இருக்கிறார். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் பல இடங்களில் பிரச்சனைக்கு உள்ளாவதே, தன கணவரை தன தந்தையுடன் ஒப்பிடும் போது தான். அந்த எதிர்பார்ப்பு பொய்த்தால் , நிம்மதி தொலையும். அதனால், அவள் மன நிறைவுடன் வாழ லார்ஸ் தான் அவளுக்கு சரியானவன்.

    சம்யுக்தா,
    என் சார்பாக ரிதன்யாவிடம், என்னுடைய கருத்தை தெரிவித்து, நல்ல முடிவாக எடுக்க சொல்லுங்கள் :-)

    பதிலளிநீக்கு
  2. ஹாய் சம்யுக்தா,

    அவளுக்கு கெடு வைச்சாச்சு.பிள்ளையை ரொம்ப குழப்புறீங்களே.

    நீங்க யாரை ;-) சேர்த்து வைக்கப்போறீங்க ன்னு பார்க்க ஆவலாக இருக்கு.

    அழகாக நகருகிறது.முந்தைய கதைகளுக்கு பின்னூட்டம் போட முடியவில்லை.இந்த கதைக்கு போட முயலுகிறேன்- தேவி பிரபா

    பதிலளிநீக்கு
  3. ஹாய் ரதி

    உங்க கருத்துக்களைப் படிச்சதுமே எனக்கு சர்ப்ரைஸா இருந்தது... இதெல்லாம் லாரஸோட அம்மா ரிதன்யாகிட்ட சொல்லப் போறதா யோசிச்சு வச்சிருந்தேன்... சூப்பர் பவரை யூஸ் பண்ணி பின்னால வர்ற அத்தியாயத்தை கெஸ் பண்ணிட்டீங்க...

    நீங்க சொன்னது எல்லாமே எதார்த்தமான கருத்துக்கள் ரதி... கட்டாயம் இதெல்லாம் யோசிச்சே ஆகணும்...

    அழகாவும், ரொம்பத் தெளிவா லாரஸுக்கான காரணங்களை அடுக்கீட்டீங்க... நிச்சயம் ரிதன்யாகிட்ட சொல்லிடறேன்...

    உங்களோட கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி ரதி...

    பதிலளிநீக்கு
  4. ஹாய் தேவி...

    ரொம்பக் குழப்பினாதான் தெளிவாக்க முடியும்பா...

    இந்தக் கதையைப் பொறுத்த வரைக்கும் யாரை வேணும்னாலும் சேர்த்து வைக்கலாம்பா... கடைசி அத்தியாயம் வரைக்கும் இதே தான் சொல்லப் போறேன்.. ;)

    உங்களோட கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் ரொம்ப நன்றி தேவி...

    நேரம் கிடைக்கும் போது கருத்துக்களைப் பகிர்ந்துக்கங்க...

    பதிலளிநீக்கு