சனி, 17 அக்டோபர், 2015

கண் தீண்டி உறைகிறேன் - 21வது அத்தியாயம்



8 கருத்துகள்:

  1. ஹாய் சிஸ்டர்,
    இவ்ளோ நாளா பேர் மட்டுமே தெரிந்த
    கேரக்டர் இன்று நேரில் வந்து அதிரடி
    அறிமுகம். ...ஏன் தர்க்ஷினிய ஆர்வமா பார்க்கறாங்க!!ஆமைகள் காப்பாற்ற இரவில்
    வேலை செய்றாங்க சூப்பர். ..
    நன்றி சிஸ்டர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு நன்றி மணிமேகலை.
      ஜொனாதரோட ஆர்வத்துக்குக் காரணத்தைச் சீக்கிரமே சொல்றேன்

      நீக்கு
  2. சம்யுக்தா ,
    நீங்க எல்லா கதைளையும் ஒரு புது சப்ஜெக்ட் எடுத்து அத ஆழமா படிக்கிறிங்க போல. இந்த கதைல oceanography+ marine life ன்னு நினைக்குறேன் . எப்படி தான் உங்களால வெறும் கதைக்காக ஒரு புது துறைய பத்தி படிக்க முடியுதோ. படிச்சதோட இல்லாம , அத மேலோட்டமா புல்லு மேயுற மாதிரி தராம, கொஞ்சம் ஆழமாவே எங்களுக்கு தரிங்க. சூப்பர்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன ரதி இப்படி சொல்லிட்டீங்க! படிக்க வேண்டியதையே படிக்காம இருக்கேன். கதைக்காகப் புதுத் துறையைப் படிச்சா, மண்டையைப் பிச்சுக்கணும். தமிழ்நாட்டுப் பொண்ணுங்க அதிகம் படிக்காத கோர்ஸ் ஒண்ணு தேவைப்பட்டுச்சு. எதையும் யோசிக்கக் கூடாதுன்னு எனக்குப் பிடிச்ச ஓஷனோகிராபியை உள்ள நுழைச்சிட்டேன். அவ்வளவுதான். .
      கருத்துகளுக்கு ரொம்ப நன்றிப்பா

      நீக்கு
  3. வணக்கம் சம்யுக்தா,
    கதையின் கேட்டலிஸ்ட் வந்தாச்சா?? மூவரின் மையப் புள்ளி எங்கே எப்போது ஆரம்பமானது, தர்ஷு போல நானும் கவனிக்க விட்டுவிட்டேனா!!!

    ஒரு வகையில் கேபி சுயநலமாக இருக்கிறான், அவனை சுற்றி சுயநல பேய்கள் இருந்ததினாலோ, இதில் மாட்டிக்கொண்டது தர்ஷு.. சொத்துக்காக பெண் என்ற பெயர் பிடித்தமில்லாமல் இருப்பவன் ஒரு பெண்ணை எப்படி திருமணம் செய்துக் கொண்டான், சொத்துக்காக என்றால், அவனின் பெற்றோர்களின் சாயலில் இருக்கிறது இவனின் செயல். எதோ ஒன்றுக்காக யாரையோ பலியிடுவது...

    கேபிக்கு இந்த கதையில் நெகடிவ் ஷெட் இருந்திருந்தாலும் அவன் மேல் ஒரு அனுதாப உணர்வு இருந்திருக்கும், ஹீரோ வேற, சொல்லவா வேண்டும், எது செய்தாலும் தர்ஷு போல நாங்களும் மன்னிப்போம்ல :-D

    தன் பிள்ளைக்காக வரும் தாய், பரம்பரை சொத்துக்காக இவனிடம் வரும் தந்தை, அவர்கள் மறக்க நினைப்பது இவனை மட்டுமே.. ஆகா மொத்தம் கேபி அவர்கள் வாழ்கையின் பை-ப்ராடெக்ட் .. தேவை இல்லாததை தூக்கி எரிந்து விட்டார்கள்.. இவனும் அவர்களால் வரும் சொத்து, சொந்தம் மற்றும் உரிமை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டான்.. ஆனால் சொத்துக்காகவும் தாத்தா என்ற ஒரு சொந்ததுக்காகவும் ஒருத்தியை வருத்தப்பட வைக்கிறான் என்று எப்போது உணர்வான்???

    எல்லாமே கடந்து வந்தவனால் வெற்றிடத்தில் தர்ஷு நிரப்ப வந்து இருக்கிறாள் என்ன உணரவில்லை... பார்போம் அமைதியாக இருந்துக்கொண்டே எந்த ஜதியில் எப்படி நர்த்தனம் பிடித்து கேபியை ஆட வைக்கப்போகிறாள் அவனின் பப்லி !!!!

    அடுத்த பதிவு எப்போது???

    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜாஸ்

      மூவரோட மையப்புள்ளியைப் பத்தி நான் சொல்லவே இல்லை. இனிமேல்தான் சொல்லணும்.

      இந்தக் கதையில எல்லாருமே ஒரு விதத்தில சுயநலவாதிகள் ஜாஸ். தர்ஷினி, அவளோட பேரண்ட்ஸ், கே.பி, அவனோட பேரண்ட்ஸ், தாத்தா எல்லாருமேதான். சுயநலத்தோட அளவு வேறுபடுது, அவ்வளவுதான்.

      கே.பி. சொத்துக்காக கல்யாணத்துக்கு சம்மதிக்கலைப்பா. அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல அது வரும்.

      அடுத்தடுத்த பதிவுகளைக் கொடுக்க முடியலைப்பா. பல வேலைகளோட நெருக்கடியில மாட்டிட்டிருக்கேன். கதையைப் பத்தி நினைக்கவே முடிய மாட்டேங்குது. சீக்கிரம் வரேன்

      விரிவான கருத்துகளுக்கு மிக்க நன்றிப்பா.

      நீக்கு