செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கண் தீண்டி உறைகிறேன் - 14வது அத்தியாயம்

http://en.calameo.com/read/00288346949c209c70e2d

10 கருத்துகள்:

  1. இனிமே தான் ஹீரோ பற்றி
    நம்ம தர்க்ஷியும் படிக்கற வாசகர்கள்
    எல்லாரும் தெரிஞ்சுக்க போறாங்க.
    இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
    அடுத்த பதிவுக்காக வெயிட்டிங்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹீரோவை கொஞ்சம் ஒதுக்கி வச்சிருந்தேன்.
      இனிமேல் சுவாரசியத்தோட வந்திடுவான்பா.
      நன்றி மணிமேகலை.

      நீக்கு
  2. கிருஷ்ணாவும் அவள் சார்ந்த துறையிலேயே இருக்கானோ ? அதுவும் அவளுடையே ரோல் மாடலான ஆளே அவன் தானோ என்று சந்தேகம் வருகிறது. சீக்கிரம் ரகசியத்தை உடையுங்கள் சம்யுக்தா. மண்டை காய்கிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களால யூகம் செய்ய முடியாத மாதிரி கதைகளை எழுத முடியுமா ரதி. ஹ ஹ ஹா.
      ரகசியத்தை தர்ஷினிதான் கண்டுபிடிக்கணும். அவ எப்ப கண்டு பிடிக்கிறாளோ அப்பதானே உடைக்க முடியும். :p
      ஆர்வத்தோட படிக்கறதுக்கு நன்றி ரதி.

      நீக்கு
  3. வணக்கம் சம்யுக்தா ,
    உங்களுக்கும் இந்த வலைப்பக்கத்தின் வாசர்களுக்கும் எனது விநாயகர் தின வாழ்த்துக்கள்.
    நலமா?
    ஓர் சின்ன இடைவெளிக்கு பிறகு கதை படிக்க தொடங்கிவிட்டேன், ஹ ஹா , பாடினா வாயும் ஆடின காலும் நிக்காதுல !!!

    அதிதி படித்த இடத்திலேயே இருக்கிறது, எப்போது அந்த கதையின் முடிவை படிப்பென்று தெரியவில்லை, படித்தால் கண்டிப்பாக கருத்துக்களை கூறுகிறேன்.

    அப்படா எனக்கு விருப்பமான கதை கருக்குள் ஓன்று தானா.
    8 வகை கதைகளில் எந்த கதை படித்தாலும் அலுக்கப்போவதுயில்லை எனக்கு :-)
    9 ஆவது வகை ஒன்று உள்ளது சம்யுக்தா, அதாவது கதாசிரியர் எழுவதை யுகம் செய்வதும் அதை கதையாகி மனதில் படிப்பதும் ஒரு வகையே :-)

    கிருஷ்ண பிரசாத், பெயர் காரணமென்னவோ தெரியவில்லை :- D தாய் தந்தையின் சுயநலமான முடிவில் பாதிகப்படவனின் இறுக்கம் கண்டிப்பாக இலகுவது சற்று கடினம் தான். அவர் அவர் எடுக்கும் முடிவுகள் தங்களுக்கு மட்டும் சாதகமாக தான் பார்கிறார்கள், பாதிக்க்கபடுவோர் பற்றி யோசிப்பது இல்லை. சில நேரங்களில் நானும் யோசிப்பேன் அப்படி சுயநலமாக முடிவுகள் இடுபவர்கள் தான் வாழ்கையில் வெற்றிப் பெறுகிறார்களோ என்று.. ஆனால் அந்த வெற்றியின் கழிப்பை எப்படி, எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. கண்டிப்பாக அந்த வெற்றியில் அமைதியும் நிம்மதியும் இருக்காது


    கிருஷ்ணா ப்ராஜெக்ட் மட்டுமே சொல்லி தர்ஷுவின் கற்பனை குதிரைக்கு வேலை கொடுக்கிறான், பாவம் எவ்ளவு அப்பாவி சாப்ட்வேர் இன்ஜினர் நினைத்துக்கொள்கிறாள் :-D ... அவளுக்கு கெஸ்ட் லெக்சரராக வரும் பொது தெரிந்துக் கொள்வாளா அவனின் படிப்பும் இவள் எடுத்துக்கொண்ட பாடப் பிரிவின் காரணத்தையும் !!!
    ஆஸ்திரேலியாவில் கிரேட் பெரியர் ரீஃப்பின் பாதுகாப்புக்காக நடந்த முக்கியமான தீர்ப்பின் பின்னால் இருந்த இயற்கை ஆய்வாளர்களின் பட்டிலில் கிருஷ்ணாவும் இடம் பெறுகிறானா????

    தாத்தா கதாபாத்திரம், அனுபவத்தின் சாயலும், ஏமாற்றத்தின் பாதிப்பும், பேரனின் பொறுப்பும் கொண்டு நிதானமான முடிவுகள் எடுத்து பேரனின் வாழ்கையில் மகிழ்ச்சி வரவைக்கப் பார்கிறார். பேரனோ தாத்தாவிடம் பாசம் வைத்தவன், கொண்டவளிடம் வைக்க மாட்டேன் என்கிறானே.... தாத்தாவின் அலை சருக்கின் அடிப்படை தத்துவத்தை அழகாகக் கோடிட்டு காட்டுகிறார் தர்ஷுவிடம், அவள் எப்படி அதை நடைமுறைப்படுத்தி கிருஷ்ணாவை திரும்பிப் பார்க்க வைக்கப் போகிறாளோ.. அதுக்குள் அவளுடைய படிப்பு முடிந்துவிடுமா, டினா தான் அந்த கட்டளிஸ்டா இருவருக்கும் நடக்கப் போகும் ரசாயன மாற்றத்துக்கு ????

    சிறு வயதில் ஒன்றாக வளர்ந்தவர்கள் எப்படி பிரிந்தார்கள்? கிருஷ்ணாவிற்கு இன்னொரு செல்ல பெயர் இருக்கிறதா??? புத்தகத்தில் ஆட்டோகிராப் போட்டவனுக்கே தான் கையெழுதிட்டதை மறந்துவிட்டாதா?????
    தர்ஷுவின் ஜாதகப்பெயர் ராதிகா சரவணா அல்லது ராதிகா மட்டுமா?? ராதிகா சரவணன் உங்க அம்மா பெயர் என்று தாதா சொன்னதாக படித்தேன்!!!!!!! குடும்ப பேரோட அடுத்தவர்களுக்கு வைக்க மாட்டார்கள். தானே? நான் தான் தூக்கலகத்தில் படித்து விட்டேனா =))


    தர்ஷு செமையா சைட் அடிக்கிரா, பயப்புள்ள தான் கண்டுக்கவே மாட்றான் !!! சிக்குவான் எங்க போகபோறான், ஆனா கடைசில நீ தானே மகனே அவளிடம் கெஞ்ச போறே அதுக்கு முன்னாடி கெத்து குறையாம சமாதானம் ஆகிடு!!!
    வெய்டிங் 
    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜாஸ்

      அனைவருடைய சார்பிலும் வாழ்த்துகளுக்கு நன்றி. நான் நலமா இருக்கேன் ஜாஸ், நீங்கள் நலமா?
      நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கீங்க. காணாமல் போனவர்களின் பட்டியலில் ஜாஸை சேர்த்துத் தேடணும்னு இருந்தேன்.

      யூகிக்க முடியாத சுப முடிவு கொண்ட காதல் கதை இருக்கிறதா என்ன? ஜாஸின் மனதிற்குள் கதை ஓடி முடிந்து விட்டது போல ஹ ஹ ஹா.

      கிருஷ்ண பிரசாத்தின் பெயர் காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. தாத்தா பேரனுக்கு வைக்கும் போது, கொஞ்சம் பழைய பெயராக இருக்கலாமென்று நினைத்து வைத்தேன்.

      ஆஸ்திரேலியா என்றதும் கிரேட் பேரியர் ரீஃபுக்கு போய்விட்டீர்களா? இன்னும் உங்களுடைய கற்பனைக் குதிரை கதையின் இறுதிக்கே ஓடிவிட்டது, இதற்கு பதில் :) இந்த ஸ்மைலி தான். :p

      கேட்டலிஸ்ட் டீனா இல்லை ஜாஸ். ஜொனாதன். அவன் வந்த பிறகுதான் ரசாயன மாற்றம் வருவது போல காட்சி அமைப்புகளைச் சேர்க்க நினைத்திருக்கிறேன்.

      //தர்ஷுவின் ஜாதகப்பெயர் ராதிகா சரவணா அல்லது ராதிகா மட்டுமா?? ராதிகா சரவணன் உங்க அம்மா பெயர் என்று தாதா சொன்னதாக படித்தேன்!!!!!!!//
      ஜாஆஆஆஆஆஆஅஸ்ஸ்ஸ்... ;((
      ராதிகா, கிருஷ்ண பிரசாத்தின் அம்மா பெயர்.
      ஒரு கதையா ரெண்டு கதையா நிறைய கதை படித்தால் இப்படித்தான் ஆகும். ஹ ஹ ஹா.

      விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றிப்பா. நேரம் கிடைக்கும் போது அப்பப்ப வந்துட்டுப் போங்க. :)

      நீக்கு
  4. //தர்ஷுவின் ஜாதகப்பெயர் ராதிகா சரவணா அல்லது ராதிகா மட்டுமா?? ராதிகா சரவணன் உங்க அம்மா பெயர் என்று தாதா சொன்னதாக படித்தேன்!!!!!!!//

    இதை எழுதும் போது கண்டிப்பாக தூக்க கலக்கம் தான் ... ராதிகா சரவணன் உன் அம்மாவின் பெயர், கிருஷ்ணாவின் தாத்தா கிருஷ்ணாவிடம் அப்படியா சொன்னாரா என்று கேட்க நினைத்து அது மொழிமாற்றம் செய்த சதி !!!!!! எங்கத கதை படிக்க படிகிறதே ரெண்டே ரெண்டு அதுக்கு டைம் மானேஜ்மென்ட் செய்ய தெரியவில்லை :-)

    கண்டிப்பாக காணமல் போக மாட்டேன், உங்களை எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் விட மாட்டேன், ஹ ஹா, இம்சிக்க ஒரு ஆள் வேணும்ல.... கண்டிப்பாக வருவேன் சம்யுக்தா, ஸ்மால் வால் டாங்கி தான்..

    கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம், அது என்னையும் அல்லவா இழுத்துக்கொண்டு செல்கிறது!!!! ஸ்மைலி புரிந்துவிட்டது ஹஹா ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாராளமா இம்சை பண்ணுங்கஜாஸ்... எனக்கும் இம்சை செய்ய ஒரு கிடைக்குமே :p

      எத்தனை கதைகள் படிக்கிறோம்,யூகம் பண்றது நமக்குக் கஷ்டமா என்ன? கடிவாளமில்லாம கறபனைக் குதிரையைப் பறக்க விடுங்க.. கடைசி வரை பறந்திடுச்சுன்னா, கதை எப்ப முடியும்னு கேட்க மாட்டீங்க :p

      நீக்கு
  5. சம்யுக்தா என்பது தமிழ் பெயரா ? என்று கூறுங்களேன். எனது தங்கை குழந்தை க்கு பெயர் சூட்ட எண்ணுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்யுக்தா என்பது தமிழ் பெயரா? பதில் கிடைத்ததா..?

      நீக்கு