வெள்ளி, 10 ஏப்ரல், 2015

கலையாத கனவுகள் கதைக்கான நிறை, குறைகளைத் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!

சைதன்யனுக்கு ஆதரவாக சிலர், லாரஸிற்கு ஆதரவாக சிலர்... முக்கோணக் காதல் கதையில் அனைவரையும் திருப்தி செய்வது இயலாத காரியம். பருவ வயதில் முடிவெடுப்பதென்றால் சைதன்யனின் பக்கம்தான் கதை நகர்ந்திருக்கும். ஆனால், அலசி ஆராயும் வயது, லாரஸின் காதல் அனைத்தையும் மீறி சைதன்யனுடன் சேர்ந்து வைப்பது எதார்த்தமானதாக இல்லை.

ரிதன்யாவை சுயநலவாதி என்று சொல்வதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலையும் உணராத போது, யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது. கல்லூரி நாட்களில் ஆசையை வளர்த்துக் கொண்டதற்கு, சைதன்யன் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. அது போலத்தான், அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல்,  ஆசையை வளர்த்துக் கொண்ட சைதன்யனுக்கும், அவள் பொறுப்பாக முடியாது என்று நினைக்கிறேன்.
 
 வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் வளர்ந்த இரண்டு நபர்களைக் கவரக்கூடிய குணநலன்கள் கொண்டவள் சுயநலவாதியாக மட்டும் இருக்க முடியாது என்றும் தோன்றுகிறது. பார்வைகள் பலவிதம், அதனால் கருத்துக்களும் பலவிதமாகத்தான் இருக்க முடியும். 

ஆரம்பத்தில் யார் யாரெல்லாம் சைதன்யனைத் திட்டினார்களோ, கதை முடிந்த பிறகு, இந்த முடிவிற்காக என்னைத் திட்டுகிறார்கள். இதைத்தான் கதையின் வெற்றியாக நினைக்கிறேன். சைதன்யனுக்கு வேறு ஒரு ஜோடியையாவது காட்டுங்கள் என்று பலர் மெயிலில் தெரிவித்திருந்தீர்கள். அது சரிப்பட்டு வருமென்று தோன்றவில்லை. சைதன்யனின் கதாபாத்திரம் குறைகள் இருந்தாலும் அழுத்தமாகப் பதிவது கதையின் முடிவால்தான். மறைமுகமாக அவனுக்கும் சுபம் போட்டு, கொஞ்சம் மட்டும் சேர்த்திருக்கிறேன். சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு அடுத்த கதையோடு வருகிறேன். நன்றி!!!

கலையாத கனவுகள் - முழுக்கதைக்குமான லிங்க்:

http://en.calameo.com/read/002883469ee24ee83fe4a




15 கருத்துகள்:

  1. வணக்கம் சம்யுக்தா ,
    சைதன்யாவை திட்ட எனக்கு இன்னுமொரு வாய்ப்பா !!!!
    ஒரு சின்ன திருத்தம் சைதண்யா க்கு பலர் அதரவு தருகிறார்கள். ;-)
    பிறகு வருகிறேன்.

    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜாஸ் இங்கேயுமா ஹ ஹ ஹா...
      திட்டுங்க திட்டுங்க, ஆதரவு தந்தாலும் திட்டுங்க, இதெல்லாம் சகஜம்பா

      நீக்கு
  2. Samyuktha,
    Is there any changes in this final full script? Will we miss anything if we skip this full version?

    பதிலளிநீக்கு
  3. கடைசி இரண்டு அத்தியாயங்களை மூன்றாக்கியுள்ளேன் ரதி... பெரிதாக வேறுபாடு தெரியாது... சில பத்திகள் இணைப்பு, வரிகள் மாற்றம், இருந்த சொதப்பல்கள் நீக்குதல் இது போலதான்... சைதயனுடைய வீட்டில் பார்த்த பெண், ரிதன்யாவை வந்து பார்த்ததாக எழுதியுள்ளேன்... அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  4. ரிதன்யாவின் மேல் இருந்த சிற்சில குறைகள், லாரஸ் உடனான தெளிவான உரையாடல் மூலம், இந்த இறுதி படைப்பில் நீங்கியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் படித்தீர்களா!!! மிக்க நன்றி ரதி.

      நீக்கு
    2. illai Samyuktha.....kadaisi moondru athiyaayangal mattume padiththen.

      நீக்கு
    3. அப்படித்தான் நினைத்தேன் ரதி... சும்மா கேட்டேன் ;)

      நீக்கு
  5. Hi samyuktha,

    unfortunately all comments missing ....I don't know what mistake I am doing ...let me try this message is displaying or not ...

    பதிலளிநீக்கு
  6. Hi samyuktha,

    Its working now,.....

    நான் கதை படித்ததும் கமெண்ட் போட்டேன் அது display ஆகல ....preview போயிட்டு click பண்ணா தான் display ஆகுது ..

    எனக்கு கதை ரொம்ப பிடித்தது ...கதை முழுக்க ரிதன்யா , சைதன்யா , லாரஸ் இவங்களோட மன உணர்வுகளை மட்டும் பிரதிபலிக்கற மாதிரி அழகா எழுதி இருக்கீங்க ..முக்கியமான விஷயம் சுவாரிஷ்யம் குறையாமா , கதையோட வேகம் குறையாமா கொண்டு போனது சூப்பர் ..என்னுடைய பாராட்டுக்கள்..

    எனக்கு இதில் சைதன்யா ரொம்ப பிடித்தது ..காரணம் அவன் அவனாவே "நான் இப்படி தான்" என்று இருக்கான் ...லாரஸ் அடுத்து பிடித்தது ...அவனோட broad mind , அவனோட நிதானம் , அவனோட காதல் இப்படி ...பொறுமையா புரிய வைத்து வெற்றி அடையறான் ..

    ரிதன்யா அவளுடைய ஈர்ப்பு, பின்பு சைதன்யன் வார்த்தைகள் கொடுத்த கோபம் , தன மனநிலை தெளிய திரும்ப வருவது , லாரஸ் காதலை ஏற்று கொள்ள தயங்குவது என்று அவள் உணர்வுகளை அழகா சொல்லி இருந்திங்க ...

    சைதன்யா கடைசியா அன்பிடம் பேசும் போது full ஸ்கோர் பண்ணிடற மாதிரி தோணுச்சி ..எனக்கு ரொம்ப பிடித்தது இந்த பகுதி ..அவன் பேசுவது அனைத்தும் அவளோ யதார்த்தம் ..அவன் வளர்ந்த விதம், அவன் குடும்ப சூழலில் , அவன் வளர்ச்சி என்று எனக்கு ரொம்ப பிடித்தது ..(கடைசியில் மனசு கஷ்டமா போசசி ..முழு லிங்க் ல படித்ததும் ..happy)

    நம்ம காலாச்சாரத்தில் நிறைய சைதன்யாவை பார்க்கலாம் ஆனா லாரஸ் பார்ப்பது கஷ்டம் ..லாரஸ் வளர்ந்த சூழல் அவனுக்கு இதை நிதானமா அணுகுற பக்குவத்தை கொடுத்திருக்கு ..இதை ரொம்ப அழகா கதைல சொல்லி இருக்கீங்க ..

    ரிதன்யா தடுமாற்றம் புரிந்தாலும் ..அன்பு சொல்வது போல இரண்டாம் முறை வந்து அவள் மனம் தெளிய சைதன்யாவை குழப்பி விட்டு , பழிவாங்கிட்டா என்று தான் தோணுது ...

    மிக அழகான கதை சம்யுக்தா ..அருமையான முடிவு ..வாழ்த்துக்கள் .....

    உங்க அடுத்த கதைக்கு ஆவலா காத்திருக்கேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் உமா

      உங்களுடைய கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றிப்பா...

      சைதன்யன் உங்களையும் கவர்ந்து விட்டானா.. ஹ ஹ ஹா... நிறையப் பேர் சைதன்யனின் பக்கம்தான் உமா...

      கதை மாந்தர்களின் குணாதியங்களை அலசியதற்கு மிக்க நன்றிப்பா...

      வேலைப் பளுவிற்கு நடுவில் அடுத்த கதையைத் தொடங்குவது சற்று சிரமமாக இருக்கிறது... முடிந்தவரை விரைவில் வருகிறேன்பா.

      நீக்கு
  7. ஹாய் சம்யு,

    ஸாரி.முழுசா படிக்க முடியலை.பின் பகுதி பதிவுகளை படித்தேன்.நல்லாயிருக்கு.நேரம் கிடைக்கறப்போ முழுசையும் படிக்கணும்.

    அடுத்த கதையை பத்தி,நீங்க சொன்ன outlineவச்சு நான்கைந்து வகை மனிதர்கள் நினைவுக்கு வராங்க.கதை வரப்போ என் யூகம் சரியான்னு பாக்குறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் தேவி,

      நேரம் கிடைக்கும் போது படிங்க...

      நான்கைந்து வகை மனிதர்கள் நினைவுக்கு வராங்களா.. அசத்தறீங்க.. அப்ப நான்கைந்து கதைக் கருக்கள் உங்ககிட்ட இருக்கு.
      திங்கட்கிழமை தொடங்கிடுவேன். உங்க யூகம் சரியான்னு பார்க்க நானும் ஆவலா இருக்கேன். அதுக்காகவே கதைக்கருவைப் பத்தி சொல்லாமலேயே போஸ்ட் பண்ணிடறேன் ;)

      நீக்கு
  8. ஹாய் சம்யூ,

    நன்றி.கருவெல்லாம் இல்லை.மனுசங்க தான்.வெயிட்டிங்.வாங்க வாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துட்டேன் தேவி... முதல் அத்தியாயத்தில கெஸ் பண்றது கஷ்டம்... அடுத்த அத்தியாயம் முடிஞ்சதுமே சொல்லிடுவீங்க... :)

      நீக்கு