கதை கொஞ்சம் மெதுவாக செல்வது போல் தோன்றினாலும் ,ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொருவரின் மனநிலையையும் அவரவர் பார்வையில் விளக்கி இருப்பது அருமை. அதே போல் ஒவ்வொருவரின், மற்றவர்களின் மீது இருக்கும் எண்ணம் கூட அழகாக சொல்லி இருக்குறீர்கள். ஒருவர் கூட இந்த கதையில் கெட்டவர்களோ, ஏன் சுயநலவாதிகளோ கூட அல்ல.
சைதன்யன் மேல் இருந்த கொஞ்சநஞ்ச குறைகளும் இந்த அத்தியாயத்தில் போக்கி விட்டீர்கள். அவன் தன் குடும்பத்தை முன்னிறுத்தி, தனக்கு வரப்போகும் மனைவி தனக்கு மட்டும் வரும் புது உறவல்ல, தன குடும்பத்துக்கே வரும் புது உறவு என்று யோசித்திருப்பது, கொஞ்சம் பழமை வாதம் கலந்த சுயநலமோ என்று முதலில் எண்ண தோன்றியது. ஆனால் அது தான் நம் இந்திய கலாச்சாரத்தின் அச்சாணியே என்று நினைவுறுத்தி, புதுமை / சுதந்திரம் / சுய மரியாதை என்று நாம் நியாயம் பேசிக்கொண்டு பாரம்பரியத்தில் இருந்து வெகுவாக விலகி விட்டோமோ என்று யோசிக்கவைக்கிறது.
லாரசின் தவிப்பு, இப்போது தான் தொடங்கி இருக்கிறது. இவ்வளவு நாள் இருந்த மனஉறுதி கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது. இரண்டு ஆண்களின் மனதை பாடுபடுத்திவிட்டு, இவள் மற்ற குடும்பத்து பஞ்சாயத்தை பார்த்துகொண்டிருக்கிறாள். ஐயோ பாவம். அவர்களை மட்டுமா படுத்துகிறாள், எங்களையும் அல்லவா சேர்த்து காக்கவைக்கிறாள்:-)
கதை சீக்கிரம் முடியபோகிறது என்று சொல்லிவிட்டீர்கள். சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தை போட்டு இந்த குழப்பத்திற்கு விடை அளியுங்கள், Samyuktha.
புதுமை / சுதந்திரம் / சுய மரியாதை என்று நாம் நியாயம் பேசிக்கொண்டு பாரம்பரியத்தில் இருந்து வெகுவாக விலகி விட்டோமோ என்று யோசிக்கவைக்கிறது----- சூப்பர் ரதி...!!!! மூடப் பழக்கங்கள்/கொள்கைகள் ஒழிந்து ஒரு விழிப்புணர்வு வரவேண்டுமென்று கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தற்போது ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலில் (தமிழில் ???) செல்லுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது..... சைதன்யா கேரக்டர் என்னைப் பொறுத்தவரை மிகவும் appreciable என்றே சொல்வேன்... எல்லாவிதத்திலும் சிறந்தவனாகவே நினைக்கத் தோன்றுகிறது (except, ரிதுவிடம் காட்டிய கடினத்தைத் தவிர்த்திருக்கலாம், may be அவன் அன்று இருந்த சூழலில், அப்படிப்பட்ட வெறுப்பைக் காட்டினால் அவள் இவனை வெறுத்து/மறந்து சென்றுவிடுவாள் என்றுகூட நினைத்திருக்கலாம்...) இன்று இந்த நிலைக்கு அவன் வருவதற்கு தியாகங்கள்/ஏமாற்றங்கள் என்று பலவற்றையும் கடந்தே வந்திருப்பான், ரிது இப்போது இவனை மறுத்தால் அதையும் கடந்து செல்லுவான்தான், ஆனால் இப்போது அவள்மீது ஒரு ஈர்ப்பு வந்தநிலையில் அவன் நிலை சற்று சிரமம்தான்.... like I said, poor Chaitanya...!!! :(
பொற்செல்வி, அவன் ரிதுவிடம் காட்டிய கடினம் கூட, அவனின் அப்போதையே நிலையே காரணம். அவன் குடும்ப சூழல், தன் மேல் சுமத்தப்பட்ட பாரம், தன் லட்சியம் அனைத்தும் அவனுக்கு கடிவாளம் கட்டிய குதிரை போல சலனங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடமளிக்காமல் இரும்பு மனிதனாக ஆக்கி இருந்தது. அவன் தன் கடமைகள் / இலட்சியங்கள் நிறைவேற்றிய பின் , ஆள் மனதில் புதைந்த மெல்லிய உணர்வுகள், ரிதுவால் மீண்டும் சலனப்பட்டு மேல் எழுகிறது.
அவன் காதலில் ஆழமாக புதைவதர்க்குள் ரிது பதிலை சொல்லிவிட்டால் தேவலை . பாவம் அவனே இப்போது தான் தனக்காக வாழ ஆரம்பித்திருக்கிறான். அவளின் மறுப்பு கண்டிப்பாக அவனுக்கு சரியான அடியாக இருக்கும். அதற்குள் அவன் மனது பக்குவப்பட்டுவிட்டால் பரவாயில்லை. As you said poor Chaitanya :(
வணக்கம் சம்யுக்தா, கதை நிறைவை நோக்கி பயணிக்கிறதென்று சொல்லி விட்டீர்கள், யார் அந்த மங்கையின் மணாளன்?
சைதன்யா- முன்பே சொன்னது போல சராசரி ஆண். அவன் குடும்பத்தார் பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒரு டெம்ப்லேட் உருவாகி கொடுத்துள்ளனர், அதையே சைதன்யாவும் கட்டிக் கொண்டு அழுதான், ஆனால் தன் தந்தையின் மாற்று கருத்தை கேட்டவுடன் அவனுக்கு இருக்கும் ஒருகோட்பாடு மாறுகிறதா? அந்த வீட்டின் மருமகளின் பிம்பத்தை தந்தை மாற்றிவிட்டதால் ரியாக்கு ஒரு வாய்ப்பா?? எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை.
"சைதன்யாவின் மாற்றம் அடுத்தவரின் தூண்டுதலினாலே அவனுக்கு விரைவாக நிகழ்ந்தது" இல்லையென்றால் நடந்து இருக்கலாம் அல்லது காலம் தாழ்ந்து மனம் மாறியிருக்குமோ.
அவனுக்கு கல்லூரி காலத்தில் வந்த சலனம் வலுப்பெற்று காதலாக மாறி, எந்த ஒரு நிர்பந்தமில்லாத காதலாக இருக்குமானால் தன் தந்தையிடம் தனக்கு ரியாவை பிடித்தி இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தி இருப்பான், கண்டிப்பாக அவன் தந்தையிடம் பேசி அவரை சமாதனம் செய்து திருமணத்துக்கு அனுமதி வாங்கி இருப்பான். அவனுக்குள் ஒரு தெளிவற்ற ஒரு நிலை.. சைதன்யா என் ஆதரவு உனக்கில்லை.. தெரியவில்லை எனக்கு ஏன் சைதன்யா மேல் இவ்வளவு கோவம் வருகிறதென்று. ஒரு வேலை தன் சௌகரியத்துக்காக கொஞ்சம் சுயநலத்தோடு காதலும் திருமண பந்தத்தை பார்க்குறான் என்பதினாலா? சைதன்யா பாவம் என் வாயில் மிதிப்படுகிறான் :-D
அவர் அவருக்கு ஒரு காரணம், சூழ்நிலை, அதற்கேற்ப தான் தான் நியாயங்களும் தர்மங்களும். யாரையும் குறை சொல்ல முடியாது.
நம்ம ஹீரோ சார் பத்தி பேசுவோமா!! எனத்தை பேசுறது... ரியா ரியா தவிர வேறு ஒன்றுமில்லை இந்த உலகத்தில போல இருக்கிறான்..
சம்யுக்தா, அடுத்த தடவை லாரஸ் ஊருக்கு அவன் தாத்தா பாட்டியை பார்க்க வரும் போது கொழாந்தண்ணி (அதாங்க cologne புதுவை வழக்கு மொழியில் சொன்னேன்) வாங்கிட்டு எனக்கு டோர் டெலிவவரி பண்ண சொல்லுங்க :-D
அடுத்த அத்தியாயத்தில் உங்கள் தீர்ப்பை எதிர் பார்க்கிறேன்.
நல்ல கதை... நம் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதெல்லாம் காணாமல் போய்விட்டதுன்னு நினைக்கிற நேரத்துல "சைதன்யா" என்ற அருமையான கேரக்டரை உருவாக்கி... அது எல்லாம் அழிந்து போகவில்லை... சில காலங்களுக்கு நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போய் இருக்கிறது என்பதை சொன்னதற்கு ஒரு சபாஷ்.
அதேபோல லாரஸ் -- நட்புக்கு இலக்கணம்.. ஆனாலும் அதன் எல்லைக்கோட்டை தாண்டி காதலுக்குள் நுழைந்தது ஒத்துக்க முடியலை.
ரியா -- எதையும், அனைவரையும் அனுசரித்து போகும் அருமையான குணம் கொண்ட பெண்... அழகு, அறிவு எல்லாம் இருந்தும்..., லாரஸ் & சைதன்யன் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு ஏன் இந்த போராட்டம்... தடுமாற்றம்...!!
வணக்கம் சம்யுக்தா, ஹ ஹா நான் மட்டும் தான் ஆட் வுமன் ஔட் :-D போல கருத்துப் பகுதியில். வரும் கருத்துக்கள் எல்லாம் சைதன்யாக்கு தான் ஆதரவு கூடுகிறது. இறுதிப் பகுதிப் படித்திவிட்டு கண்டிப்பாக கருத்து சொல்லாதவர்கள் கூட அவனுக்கு ஒரு fan page ஆரம்பித்து விட்டாலும் விடலாம். நான் மட்டும் தனியே அவனை திட்டி கொண்டு இருப்பேன் போல ஹா ஹா.
சில சமயங்களில் நாம் நேரில் பழகும் நபர்களை போல கதையில் பார்த்தோமானால் கண்டிப்பா வெளியே சொல்ல முடியாதவை அங்கே கொட்டுவோம் அது போல தான் இதுவும் ..... நேரில் சண்டைப் போட்டாலும் தீராது போல என் மன ஆற்றாமை :-D பாவம் எனக்கு வாய்தவர் ஹி ஹீ. ..... சைதன்யா மாட்டிக் கொண்டான், நல்ல மொக்கு மொக்குன்று மொத்திவிட்டேன்...
உங்களுக்கு மட்டும் தான் படபடப்பா :( :( எனக்கும் தான்பா... கதையை எப்ப முடிப்பேன்னு இருக்கு... உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி...
இந்தக் கதை எழுத ஆரம்பிக்கும் போது சைதன்யனின் கதாபாத்திரத்தை நெகட்டிவ் என்றுதான் நினைத்தேன்... ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களை, அவ்வளவாகப் பிடிக்காது என்று நினைத்தேன்... அப்போதே என் கணவர், சைதன்யனைத்தான் நிறையப் பேருக்குப் பிடிக்கப் போகிறது பார் என்று சொன்னார்... கடைசியில் அவர் சொன்னதுதான் உண்மையாகப் போயிற்று :(
சைதன்யனுடைய பேச்சுக்களைப் பற்றி எழுதிய அத்தியாயத்தில், அவன் ஹீரோ இல்லை ஜீரோ என்றே நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள்... இந்தக் கதாபாத்திரத்தை எப்படித் தூக்கி நிறுத்தப் போகிறேனோ என்ற கவலை இருந்தது... உங்களுடைய ஆதரவைப் பார்த்ததும் என்னுடைய கவலை காணாமல் போய்விட்டது... அவனைப் பற்றி மிகத் துல்லியமாகக் கணித்துவிட்டீர்கள்.
உங்களுடைய விரிவான அலசலுக்கும், தொடர்ந்து அளிக்கும் கருத்துக்களுக்கும், மிக்க நன்றி நன்றி...
உங்களுடைய கருத்துக்களைப் படிக்கப் படிக்க, எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறீர்கள்... நீங்கள் சொல்லியிருக்கும் சில கருத்துக்களையும் நானும் நினைத்தேன்... தெளிவான தமிழ் உங்களுடையது... சொல்ல நினைப்பதை நேர்த்தியாகச் சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது...
கதையை நன்றாக கெஸ் செய்து விட்டீர்கள்...
//ஒருவர் கூட இந்த கதையில் கெட்டவர்களோ, ஏன் சுயநலவாதிகளோ கூட அல்ல. // மூன்று பேருமே சுயநல வாதிகள்னு கதையோட கடைசில அந்தந்தக் கதாபாத்திரங்களே சொல்ற மாதிரி டைப் செய்து வைத்திருக்கிறேன்...
அடுத்த அத்தியாயம் போட்டாலும், உங்களுடைய குழப்பம் தீராது... ;) வருகின்ற கமெண்ட்ஸ்களையெல்லாம் படித்து நானே குழம்பிப் போய்விட்டேன்... அதனால் இப்போதைக்குத் தெளிவு கிடையாது... அடுத்த அத்தியாயத்தில் தெளிவு படுத்தி விடுகிறேன்...
//Just wanted to check with you, if the comments can be opened in the same page where the episode update is// மாற்றம் செய்ய எனக்குத் தெரியாது ரதி... கூகுள் பிளாக்ஸ்பாட் சும்மா ஆரம்பித்தேனே ஒழிய, இன்னும் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை... நேரம் கிடைக்கும் போது, கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்... இந்தக் கதை முடித்ததும், மாற்றம் செய்யமுடிந்தால் நிச்சயம் செய்கிறேன்... யாருக்கு பதில் கொடுத்தேன், கொடுக்கவில்லை என்று எனக்கே புரியாமல் உள்ளது :( தெரிவித்தமைக்கு நன்றிப்பா
வாங்க வாங்க... தீர்ப்பு சொல்லச் சொல்கிறீர்களே... கடைசியில் தீர்ப்பை மாற்றிச் சொல்லுன்னு சொல்ல மாட்டீங்க தானே.... ;)
விரிவான அலசல் ஜாஸ்... அருமையான சந்தேகங்கள், சைதன்யனின் குறைபாடுகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விட்டீர்கள்... மிக்க மிக்க நன்றி...
//அந்த வீட்டின் மருமகளின் பிம்பத்தை தந்தை மாற்றிவிட்டதால் ரியாக்கு ஒரு வாய்ப்பா?? எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை. // வரப்போகும் அத்தியாயத்தில் சைதன்யனே ஏறக்குறைய இது போலச் சொல்வான்பா... அதை டைப் செய்து விட்டுப் பார்த்தால் அதே கேள்வியைத் தாங்கியிருக்கிறது உங்கள் கமெண்ட்.... காலத்தைக் கணிப்பது போல, கதையையும் கணிக்கிறீர்கள்...
//அடுத்த தடவை லாரஸ் ஊருக்கு அவன் தாத்தா பாட்டியை பார்க்க வரும் போது கொழாந்தண்ணி // கொழாந்தண்ணிங்கற வார்த்தை புரியாமல் நீங்கள் பின்னால் டைப் செய்ததை கவனிக்காமல் விழித்துக் கொண்டு நின்று விட்டேன்.. பாண்டிச்சேரி என்றாலே ஒரே ஒரு தண்ணி தான் நினைவிற்கு வரும்... அதுதான் ஆரம்பத்தில் எனக்கும் வந்தது... ;) ஹ ஹ ஹா... நிச்சயம் லாரஸிடம் சொல்கிறேன் ஜாஸ்...
சைதன்யனுக்கு இவ்வளவு பேர் சப்போர்ட் செய்வார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை...
//நேரில் சண்டைப் போட்டாலும் தீராது போல என் மன ஆற்றாமை :-D பாவம் எனக்கு வாய்தவர் ஹி ஹீ. ..... சைதன்யா மாட்டிக் கொண்டான், நல்ல மொக்கு மொக்குன்று மொத்திவிட்டேன்... //ஹ ஹ ஹா... இப்படியொரு காரணம் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை... திட்டக் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்...
என்ன தீர்ப்பு சொன்னாலும், வாங்கிக் கட்டிக் கொள்வேன் போல... பேசாமல் இரண்டு பேரையும் விட்டுவிட்டு, வேறு யாருக்காவது ஜோடி சேர்த்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது... விழப் போகும் அடிகளை நினைத்து அந்த யோசனையைத் தவிர்த்து விடுகிறேன்...;)
எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி தேனு
//அதேபோல லாரஸ் -- நட்புக்கு இலக்கணம்.. ஆனாலும் அதன் எல்லைக்கோட்டை தாண்டி காதலுக்குள் நுழைந்தது ஒத்துக்க முடியலை.// நட்பு என்பதை விட, சிறு வயதிலிருந்தே அவனுக்கு மிகவும் பிடித்த பெண் ரியா... ஆரம்பம் முதலே காதலில் அவன் தெளிவாகத்தான் இருக்கிறான்... ரிதன்யா மட்டும் தான் நண்பனாக நினைக்கிறாள்... இதைத் தெளிவாக சொல்லவில்லை போல... அடுத்த அத்தியாயத்தில் இன்னும் தெளிவு படுத்தி விடுகிறேன்... நன்றி தேனு
ரொம்ப நல்லா இருக்கேன்.... நீங்க எப்படி இருக்கீங்க...?
உங்க கதை முடிந்தவுடன் தான் படிக்கணும்னு நினைத்தேன்... ஆனாலும் என்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல், படித்து விட்டேன்... இப்போது மூவரின் நிலையம் பார்த்து குழம்பி இருக்கேன். லாரஸ் ஆரம்பத்தில் இருந்தே காதலித்ததாக வரலையே...! வீட்டின் பெரியவர்கள் பேசியதை வைத்து தான், அவள் மேல் ஒரு உணர்வு வந்ததாக படித்தேன்... நான்தான் சரியாக புரிந்து படிக்கவில்லையோ...!
லாரசும் பாவம்... சைதன்யனும் பாவம்... நீங்களே உங்கள் பதிலில் சொன்னது போல, யாருமே கெட்டவர்கள் இல்லை... சூழ்நிலை கைதிகள் தான்...!!
ரியா சைதன்யன் மேல் இருக்கும் கோபத்தில், லாரசை மணக்கும் முடிவை எடுக்க கூடாது... அப்படி செய்தால் அவனின் காதலுக்கு செய்யும் துரோகம்... உண்மையாகவே அவன் மேல் காதல் இருந்தால் அவள் அந்த முடிவை எடுக்கட்டும்...!
ஆனால் அதற்கு முன் சைதன்யனுடன் தெளிவாக பேசி... அவனோட பக்க நியாயங்களையும் கேட்டுவிட்டு, அதன்பிறகு முடிவெடுத்தால் இன்னும் சந்தோஷம்...!!

//வீட்டின் பெரியவர்கள் பேசியதை வைத்து தான், அவள் மேல் ஒரு உணர்வு வந்ததாக படித்தேன்... // அவன் காதலிக்க ஆரம்பித்த பின் தான் பெற்றோர்களுக்கு அது மாதிரி எண்ணம் இருக்கிறதே தெரியும்னு எழுதிருந்தேன்... அதுவுமில்லாம, ரியாதான் நண்பன்னு எப்பவும் சொல்வா, அதைத் தாண்டிதான் எப்பவும் யோசிச்சான்...
//அவனுடைய மனதில் வந்த காதல், திடீர் மாற்றமாக ஒரு நொடியிலோ, ஒரு நிமிடத்திலோ, ஒரு மணி நேரத்திலோ, ஏன் ஒரு மாதத்திலோ வந்தது இல்லை. மண்ணிற்குள் ஆழப் புதைந்து கிடக்கும் விதை போல, மனதிற்குள் அவளுடைய நினைவுகளும் புதைந்து கிடந்தன. உரிய பருவம் வந்ததும், தன் மீதிருக்கும் தடைகளையெல்லாம் துடைத்தெறிந்து, முட்டி மோதி முளைக்கும் விதை போலத்தான், புதைந்து கிடந்த அன்பும் ஒரு கட்டத்தில் துளிர்விட்டது. அந்த அன்பு, எப்போது ஈர்ப்பு என்ற நிலையை அடைந்ததென்று அவனுக்குத் தெரியாது. அந்த ஈர்ப்பு, எப்போது நேசமாக நெஞ்சில் மையம் கொண்டதென்றும் தெரியாது. அந்த நேசம், எப்போது காதலாகக் கனிந்ததென்றும் தெரியாது. மனதிற்குள் விதையாகத் தூவப்பட்டவளின் நினைவுகள், காலங்கள் கனிய ஈர்ப்பு என்ற உணர்வில் மெல்ல மெல்ல வளர்ந்து, நேசம் என்ற உணர்வில் மனதை நெகிழ வைத்து, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே காதல் என்ற மலராக மலர்ந்து மணம் வீசுகிறது.// லாரஸோட காதலைப் பத்தி சொல்லும் போதே இப்படித்தான் சொல்லிருப்பேன்பா...
ரியா பொருத்த மட்டில் இரண்டும் பெஸ்ட் சாய்ஸ் என்று எழுதும் போது எனக்கு என் எண்ணத்தின் ஓரத்தில் தோன்றிய ஒரு படத்தின் முடிவு தான் ஞாபகத்துக்கு வந்தது, "காதல் தேசம்" ... ஆக மூன்றாம் நபரின் வருகையை புகுத்த போகுறீர்களா?? நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க - சொல்லிப் பார்த்துக்கொள்கிறேன்.
காதல் தேசம் படத்தில ரெண்டு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கிற மாதிரி வருமென்று நினைக்கிறேன் ஜாஸ்... நம்ம ஆட்கள் ரெண்டு பேருமே ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் தானே... அதனால் இருவரில் ஒருவர் தான் ஜாஸ்...
Jass, //நான் மட்டும் தான் ஆட் வுமன் ஔட்// எங்களுக்கு இருப்பது வெறும் அனுதாப ஓட்டு தான். இப்போ திருப்தியா :-) சைதன்யா கெட்டவனாக தெரிவதற்கு காரணமே லாரஸ் தான். யாருமே இல்லாவிட்டால் சைதன்யா ஒரு சிறந்த ஹீரோவாக நினைக்கப்பட்டிருப்பான். ஏன் , இதை விட -ve shade கதாநாயகர்களை பார்த்திருக்கோம். அப்போதெல்லாம் ஏற்றுக்கொண்ட மனம் இப்போது ஏற்காதிருப்பதுக்கு காரணம், ஒப்பீடு தான். ஒரு பொருள் நமக்கு சிறந்ததாக தெரியும்... அதைவிட சிறந்த ஒன்று வரும் வரை. அது போல் தான் சைதன்யா நிலை. அதே போல் ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ தீர்வு செய்வது அவன் வளர்ந்த + வாழ்ந்த சூழ்நிலையே.
உங்களை சைதன்யாவின் பக்கம் இழுக்க எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கிறது;-)
சம்யுக்தா, என் எழுத்தை பாராட்டியதற்கு நன்றி. எது நடந்தாலும் கொஞ்சம் சேதாரம் கம்மியாகுற மாதிரி பார்த்துகோங்க. ஏன்னா ரெண்டு பேரும் ரொம்ப பாவம்:-(
உங்க ப்ளாக் layout பற்றி நான் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. மாற்றத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
தேனு, //அதேபோல லாரஸ் -- நட்புக்கு இலக்கணம்.. ஆனாலும் அதன் எல்லைக்கோட்டை தாண்டி காதலுக்குள் நுழைந்தது ஒத்துக்க முடியலை.// நட்பு ஏன் காதலாக கூடாதா? இதில் எனக்கு தவறு இருப்பது போல் தோன்றவில்லை. நட்பு காதலாகலாம். காதல் தான் நட்பாக முடியாது(மெல்லிய சலனம்/ உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்). சைதன்யனுக்கோ / லாரஸ்க்கோ வரப் போகும் நிலை. தவறிருந்தால் மன்னிக்கவும்.
இல்லை ரதி.... எனக்கு என்னவோ இந்த பாய்ன்ட் கொஞ்சம் உறுத்துது... ஒரு நல்ல நட்பு கடைசிவரை நட்பாக மட்டுமே இருக்கணும்... அதில் காதலுக்கு இடமில்லை...! பெண்-பெண் , ஆண்-ஆண் நட்பு போல... ஆண்-பெண் நட்பும் இருக்கவேண்டும் என்று எனக்கு தோணுது... அது சரியா தப்பான்னு தெரியவில்லை...!
ஹாஹா... அப்படியே உங்களுக்கு உல்டாவா நான் சொல்லுறேன்... காதலுக்கு பின் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகும்.. அது சாத்தியம் தான்..! ஒரு கணவனுக்கு மனைவி தான் நல்ல தோழியாக இருக்கமுடியும்... அதேபோல மனைவிக்கு கணவன் தான் நல்ல தோழனாக இருக்கமுடியும்... இதை எங்கோ படித்த நியாபகம்..!
மன்னிக்கவும், நான் குறிப்பிட நினைத்தது " காதல் இல்லை என்றானதர்க்கு பின்". அதாவாது "காதல் இல்லையன்றால் என்ன, நட்பாகவாவது இருப்போம் " என்ற நிலை சாத்தியமில்லை என்பது என் கருத்து.
கண்டிப்பா ரதி, எப்போதும் சாய்ஸ் கொடுத்தால் மனிதனுக்கு எது பெஸ்ட் னு தான் தேட தோணும் அது மனித இயல்பு.. சைதன்யா வின் fan page கு என்னை இழுத்தற்கு நன்றி, நான் லைக் போட்டுட்டேன் பா.
அது ஒன்றும் இல்லை ஆண்டி ஹெரோ மட்டும் கதையில் இருந்தால் அவனுக்கு வக்காலத்து வாங்கி இருப்பேன்.. ஹ ஹா. லாரஸ் மாதிரி ஆள் இருப்பதினால் ஹே ஹீ அவனுக்கும் ஒரு ஆதரவு கொடுக்க வேண்டும் தானே..
கொஞ்சம் படபடப்பாதான் இருக்கு.....
பதிலளிநீக்குபாவம் சைது.... :( :'(
கதை கொஞ்சம் மெதுவாக செல்வது போல் தோன்றினாலும் ,ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொருவரின் மனநிலையையும் அவரவர் பார்வையில் விளக்கி இருப்பது அருமை. அதே போல் ஒவ்வொருவரின், மற்றவர்களின் மீது இருக்கும் எண்ணம் கூட அழகாக சொல்லி இருக்குறீர்கள். ஒருவர் கூட இந்த கதையில் கெட்டவர்களோ, ஏன் சுயநலவாதிகளோ கூட அல்ல.
பதிலளிநீக்குசைதன்யன் மேல் இருந்த கொஞ்சநஞ்ச குறைகளும் இந்த அத்தியாயத்தில் போக்கி விட்டீர்கள். அவன் தன் குடும்பத்தை முன்னிறுத்தி, தனக்கு வரப்போகும் மனைவி தனக்கு மட்டும் வரும் புது உறவல்ல, தன குடும்பத்துக்கே வரும் புது உறவு என்று யோசித்திருப்பது, கொஞ்சம் பழமை வாதம் கலந்த சுயநலமோ என்று முதலில் எண்ண தோன்றியது. ஆனால் அது தான் நம் இந்திய கலாச்சாரத்தின் அச்சாணியே என்று நினைவுறுத்தி, புதுமை / சுதந்திரம் / சுய மரியாதை என்று நாம் நியாயம் பேசிக்கொண்டு பாரம்பரியத்தில் இருந்து வெகுவாக விலகி விட்டோமோ என்று யோசிக்கவைக்கிறது.
லாரசின் தவிப்பு, இப்போது தான் தொடங்கி இருக்கிறது. இவ்வளவு நாள் இருந்த மனஉறுதி கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளது. இரண்டு ஆண்களின் மனதை பாடுபடுத்திவிட்டு, இவள் மற்ற குடும்பத்து பஞ்சாயத்தை பார்த்துகொண்டிருக்கிறாள். ஐயோ பாவம். அவர்களை மட்டுமா படுத்துகிறாள், எங்களையும் அல்லவா சேர்த்து காக்கவைக்கிறாள்:-)
கதை சீக்கிரம் முடியபோகிறது என்று சொல்லிவிட்டீர்கள். சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தை போட்டு இந்த குழப்பத்திற்கு விடை அளியுங்கள், Samyuktha.
புதுமை / சுதந்திரம் / சுய மரியாதை என்று நாம் நியாயம் பேசிக்கொண்டு பாரம்பரியத்தில் இருந்து வெகுவாக விலகி விட்டோமோ என்று யோசிக்கவைக்கிறது----- சூப்பர் ரதி...!!!!
பதிலளிநீக்குமூடப் பழக்கங்கள்/கொள்கைகள் ஒழிந்து ஒரு விழிப்புணர்வு வரவேண்டுமென்று கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தற்போது ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலில் (தமிழில் ???) செல்லுவதாகவே நினைக்கத் தோன்றுகிறது.....
சைதன்யா கேரக்டர் என்னைப் பொறுத்தவரை மிகவும் appreciable என்றே சொல்வேன்... எல்லாவிதத்திலும் சிறந்தவனாகவே நினைக்கத் தோன்றுகிறது (except, ரிதுவிடம் காட்டிய கடினத்தைத் தவிர்த்திருக்கலாம், may be அவன் அன்று இருந்த சூழலில், அப்படிப்பட்ட வெறுப்பைக் காட்டினால் அவள் இவனை வெறுத்து/மறந்து சென்றுவிடுவாள் என்றுகூட நினைத்திருக்கலாம்...)
இன்று இந்த நிலைக்கு அவன் வருவதற்கு தியாகங்கள்/ஏமாற்றங்கள் என்று பலவற்றையும் கடந்தே வந்திருப்பான், ரிது இப்போது இவனை மறுத்தால் அதையும் கடந்து செல்லுவான்தான், ஆனால் இப்போது அவள்மீது ஒரு ஈர்ப்பு வந்தநிலையில் அவன் நிலை சற்று சிரமம்தான்....
like I said, poor Chaitanya...!!! :(
Samyuktha,
பதிலளிநீக்குJust wanted to check with you, if the comments can be opened in the same page where the episode update is.
It would be much easier for the readers like me to read the comments in the same page.
Pls consider this as a request / suggestion.
Thanks.
பொற்செல்வி,
பதிலளிநீக்குஅவன் ரிதுவிடம் காட்டிய கடினம் கூட, அவனின் அப்போதையே நிலையே காரணம். அவன் குடும்ப சூழல், தன் மேல் சுமத்தப்பட்ட பாரம், தன் லட்சியம் அனைத்தும் அவனுக்கு கடிவாளம் கட்டிய குதிரை போல சலனங்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் இடமளிக்காமல் இரும்பு மனிதனாக ஆக்கி இருந்தது. அவன் தன் கடமைகள் / இலட்சியங்கள் நிறைவேற்றிய பின் , ஆள் மனதில் புதைந்த மெல்லிய உணர்வுகள், ரிதுவால் மீண்டும் சலனப்பட்டு மேல் எழுகிறது.
அவன் காதலில் ஆழமாக புதைவதர்க்குள் ரிது பதிலை சொல்லிவிட்டால் தேவலை . பாவம் அவனே இப்போது தான் தனக்காக வாழ ஆரம்பித்திருக்கிறான். அவளின் மறுப்பு கண்டிப்பாக அவனுக்கு சரியான அடியாக இருக்கும். அதற்குள் அவன் மனது பக்குவப்பட்டுவிட்டால் பரவாயில்லை.
As you said poor Chaitanya :(
வணக்கம் சம்யுக்தா,
பதிலளிநீக்குகதை நிறைவை நோக்கி பயணிக்கிறதென்று சொல்லி விட்டீர்கள், யார் அந்த மங்கையின் மணாளன்?
சைதன்யா- முன்பே சொன்னது போல சராசரி ஆண். அவன் குடும்பத்தார் பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற ஒரு டெம்ப்லேட் உருவாகி கொடுத்துள்ளனர், அதையே சைதன்யாவும் கட்டிக் கொண்டு அழுதான், ஆனால் தன் தந்தையின் மாற்று கருத்தை கேட்டவுடன் அவனுக்கு இருக்கும் ஒருகோட்பாடு மாறுகிறதா? அந்த வீட்டின் மருமகளின் பிம்பத்தை தந்தை மாற்றிவிட்டதால் ரியாக்கு ஒரு வாய்ப்பா?? எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை.
"சைதன்யாவின் மாற்றம் அடுத்தவரின் தூண்டுதலினாலே அவனுக்கு விரைவாக நிகழ்ந்தது" இல்லையென்றால் நடந்து இருக்கலாம் அல்லது காலம் தாழ்ந்து மனம் மாறியிருக்குமோ.
அவனுக்கு கல்லூரி காலத்தில் வந்த சலனம் வலுப்பெற்று காதலாக மாறி, எந்த ஒரு நிர்பந்தமில்லாத காதலாக இருக்குமானால் தன் தந்தையிடம் தனக்கு ரியாவை பிடித்தி இருக்கிறது என்பதை தெளிவுப்படுத்தி இருப்பான், கண்டிப்பாக அவன் தந்தையிடம் பேசி அவரை சமாதனம் செய்து திருமணத்துக்கு அனுமதி வாங்கி இருப்பான்.
அவனுக்குள் ஒரு தெளிவற்ற ஒரு நிலை..
சைதன்யா என் ஆதரவு உனக்கில்லை.. தெரியவில்லை எனக்கு ஏன் சைதன்யா மேல் இவ்வளவு கோவம் வருகிறதென்று. ஒரு வேலை தன் சௌகரியத்துக்காக கொஞ்சம் சுயநலத்தோடு காதலும் திருமண பந்தத்தை பார்க்குறான் என்பதினாலா? சைதன்யா பாவம் என் வாயில் மிதிப்படுகிறான் :-D
அவர் அவருக்கு ஒரு காரணம், சூழ்நிலை, அதற்கேற்ப தான் தான் நியாயங்களும் தர்மங்களும். யாரையும் குறை சொல்ல முடியாது.
நம்ம ஹீரோ சார் பத்தி பேசுவோமா!! எனத்தை பேசுறது... ரியா ரியா தவிர வேறு ஒன்றுமில்லை இந்த உலகத்தில போல இருக்கிறான்..
சம்யுக்தா, அடுத்த தடவை லாரஸ் ஊருக்கு அவன் தாத்தா பாட்டியை பார்க்க வரும் போது கொழாந்தண்ணி (அதாங்க cologne புதுவை வழக்கு மொழியில் சொன்னேன்) வாங்கிட்டு எனக்கு டோர் டெலிவவரி பண்ண சொல்லுங்க :-D
அடுத்த அத்தியாயத்தில் உங்கள் தீர்ப்பை எதிர் பார்க்கிறேன்.
அன்புடன்
Jass
ஹாய் சம்யுக்தா
பதிலளிநீக்குநல்ல கதை... நம் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப உறவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதெல்லாம் காணாமல் போய்விட்டதுன்னு நினைக்கிற நேரத்துல "சைதன்யா" என்ற அருமையான கேரக்டரை உருவாக்கி... அது எல்லாம் அழிந்து போகவில்லை... சில காலங்களுக்கு நம் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போய் இருக்கிறது என்பதை சொன்னதற்கு ஒரு சபாஷ்.
அதேபோல லாரஸ் -- நட்புக்கு இலக்கணம்.. ஆனாலும் அதன் எல்லைக்கோட்டை தாண்டி காதலுக்குள் நுழைந்தது ஒத்துக்க முடியலை.
ரியா -- எதையும், அனைவரையும் அனுசரித்து போகும் அருமையான குணம் கொண்ட பெண்... அழகு, அறிவு எல்லாம் இருந்தும்..., லாரஸ் & சைதன்யன் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு ஏன் இந்த போராட்டம்... தடுமாற்றம்...!!
சீக்கிரம் அடுத்த ud கொடுங்க...pls
வணக்கம் சம்யுக்தா,
பதிலளிநீக்குஹ ஹா நான் மட்டும் தான் ஆட் வுமன் ஔட் :-D போல கருத்துப் பகுதியில்.
வரும் கருத்துக்கள் எல்லாம் சைதன்யாக்கு தான் ஆதரவு கூடுகிறது. இறுதிப் பகுதிப் படித்திவிட்டு கண்டிப்பாக கருத்து சொல்லாதவர்கள் கூட அவனுக்கு ஒரு fan page ஆரம்பித்து விட்டாலும் விடலாம். நான் மட்டும் தனியே அவனை திட்டி கொண்டு இருப்பேன் போல ஹா ஹா.
சில சமயங்களில் நாம் நேரில் பழகும் நபர்களை போல கதையில் பார்த்தோமானால் கண்டிப்பா வெளியே சொல்ல முடியாதவை அங்கே கொட்டுவோம் அது போல தான் இதுவும் ..... நேரில் சண்டைப் போட்டாலும் தீராது போல என் மன ஆற்றாமை :-D பாவம் எனக்கு வாய்தவர் ஹி ஹீ. ..... சைதன்யா மாட்டிக் கொண்டான், நல்ல மொக்கு மொக்குன்று மொத்திவிட்டேன்...
சீக்கிரம் வாங்க சம்யுக்தா....
அன்புடன்
Jass
ஹாய் பொற்செல்வி
பதிலளிநீக்குஉங்களுக்கு மட்டும் தான் படபடப்பா :( :(
எனக்கும் தான்பா... கதையை எப்ப முடிப்பேன்னு இருக்கு...
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி...
இந்தக் கதை எழுத ஆரம்பிக்கும் போது சைதன்யனின் கதாபாத்திரத்தை நெகட்டிவ் என்றுதான் நினைத்தேன்... ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களை, அவ்வளவாகப் பிடிக்காது என்று நினைத்தேன்... அப்போதே என் கணவர், சைதன்யனைத்தான் நிறையப் பேருக்குப் பிடிக்கப் போகிறது பார் என்று சொன்னார்... கடைசியில் அவர் சொன்னதுதான் உண்மையாகப் போயிற்று :(
சைதன்யனுடைய பேச்சுக்களைப் பற்றி எழுதிய அத்தியாயத்தில், அவன் ஹீரோ இல்லை ஜீரோ என்றே நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள்... இந்தக் கதாபாத்திரத்தை எப்படித் தூக்கி நிறுத்தப் போகிறேனோ என்ற கவலை இருந்தது... உங்களுடைய ஆதரவைப் பார்த்ததும் என்னுடைய கவலை காணாமல் போய்விட்டது... அவனைப் பற்றி மிகத் துல்லியமாகக் கணித்துவிட்டீர்கள்.
உங்களுடைய அலசல்களுக்கு நன்றிப்பா...
ஹாய் ரதி...
பதிலளிநீக்குஉங்களுடைய விரிவான அலசலுக்கும், தொடர்ந்து அளிக்கும் கருத்துக்களுக்கும், மிக்க நன்றி நன்றி...
உங்களுடைய கருத்துக்களைப் படிக்கப் படிக்க, எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறீர்கள்... நீங்கள் சொல்லியிருக்கும் சில கருத்துக்களையும் நானும் நினைத்தேன்... தெளிவான தமிழ் உங்களுடையது... சொல்ல நினைப்பதை நேர்த்தியாகச் சொல்லும் விதம் மிக அழகாக இருக்கிறது...
கதையை நன்றாக கெஸ் செய்து விட்டீர்கள்...
//ஒருவர் கூட இந்த கதையில் கெட்டவர்களோ, ஏன் சுயநலவாதிகளோ கூட அல்ல. //
மூன்று பேருமே சுயநல வாதிகள்னு கதையோட கடைசில அந்தந்தக் கதாபாத்திரங்களே சொல்ற மாதிரி டைப் செய்து வைத்திருக்கிறேன்...
அடுத்த அத்தியாயம் போட்டாலும், உங்களுடைய குழப்பம் தீராது... ;) வருகின்ற கமெண்ட்ஸ்களையெல்லாம் படித்து நானே குழம்பிப் போய்விட்டேன்... அதனால் இப்போதைக்குத் தெளிவு கிடையாது... அடுத்த அத்தியாயத்தில் தெளிவு படுத்தி விடுகிறேன்...
//Just wanted to check with you, if the comments can be opened in the same page where the episode update is// மாற்றம் செய்ய எனக்குத் தெரியாது ரதி... கூகுள் பிளாக்ஸ்பாட் சும்மா ஆரம்பித்தேனே ஒழிய, இன்னும் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை... நேரம் கிடைக்கும் போது, கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன்... இந்தக் கதை முடித்ததும், மாற்றம் செய்யமுடிந்தால் நிச்சயம் செய்கிறேன்... யாருக்கு பதில் கொடுத்தேன், கொடுக்கவில்லை என்று எனக்கே புரியாமல் உள்ளது :( தெரிவித்தமைக்கு நன்றிப்பா
வணக்கம் ஜாஸ்....
பதிலளிநீக்குவாங்க வாங்க... தீர்ப்பு சொல்லச் சொல்கிறீர்களே... கடைசியில் தீர்ப்பை மாற்றிச் சொல்லுன்னு சொல்ல மாட்டீங்க தானே.... ;)
விரிவான அலசல் ஜாஸ்... அருமையான சந்தேகங்கள், சைதன்யனின் குறைபாடுகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விட்டீர்கள்... மிக்க மிக்க நன்றி...
//அந்த வீட்டின் மருமகளின் பிம்பத்தை தந்தை மாற்றிவிட்டதால் ரியாக்கு ஒரு வாய்ப்பா?? எனக்கு இந்த கருத்தில் உடன்பாடு இல்லை. // வரப்போகும் அத்தியாயத்தில் சைதன்யனே ஏறக்குறைய இது போலச் சொல்வான்பா... அதை டைப் செய்து விட்டுப் பார்த்தால் அதே கேள்வியைத் தாங்கியிருக்கிறது உங்கள் கமெண்ட்.... காலத்தைக் கணிப்பது போல, கதையையும் கணிக்கிறீர்கள்...
//அடுத்த தடவை லாரஸ் ஊருக்கு அவன் தாத்தா பாட்டியை பார்க்க வரும் போது கொழாந்தண்ணி // கொழாந்தண்ணிங்கற வார்த்தை புரியாமல் நீங்கள் பின்னால் டைப் செய்ததை கவனிக்காமல் விழித்துக் கொண்டு நின்று விட்டேன்.. பாண்டிச்சேரி என்றாலே ஒரே ஒரு தண்ணி தான் நினைவிற்கு வரும்... அதுதான் ஆரம்பத்தில் எனக்கும் வந்தது... ;) ஹ ஹ ஹா... நிச்சயம் லாரஸிடம் சொல்கிறேன் ஜாஸ்...
சைதன்யனுக்கு இவ்வளவு பேர் சப்போர்ட் செய்வார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை...
//நேரில் சண்டைப் போட்டாலும் தீராது போல என் மன ஆற்றாமை :-D பாவம் எனக்கு வாய்தவர் ஹி ஹீ. ..... சைதன்யா மாட்டிக் கொண்டான், நல்ல மொக்கு மொக்குன்று மொத்திவிட்டேன்... //ஹ ஹ ஹா... இப்படியொரு காரணம் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை... திட்டக் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்...
என்ன தீர்ப்பு சொன்னாலும், வாங்கிக் கட்டிக் கொள்வேன் போல... பேசாமல் இரண்டு பேரையும் விட்டுவிட்டு, வேறு யாருக்காவது ஜோடி சேர்த்து விடலாமா என்று கூடத் தோன்றுகிறது... விழப் போகும் அடிகளை நினைத்து அந்த யோசனையைத் தவிர்த்து விடுகிறேன்...;)
ஹாய் தேனு...
பதிலளிநீக்குஎப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய கருத்துக்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி தேனு
//அதேபோல லாரஸ் -- நட்புக்கு இலக்கணம்.. ஆனாலும் அதன் எல்லைக்கோட்டை தாண்டி காதலுக்குள் நுழைந்தது ஒத்துக்க முடியலை.// நட்பு என்பதை விட, சிறு வயதிலிருந்தே அவனுக்கு மிகவும் பிடித்த பெண் ரியா... ஆரம்பம் முதலே காதலில் அவன் தெளிவாகத்தான் இருக்கிறான்... ரிதன்யா மட்டும் தான் நண்பனாக நினைக்கிறாள்... இதைத் தெளிவாக சொல்லவில்லை போல... அடுத்த அத்தியாயத்தில் இன்னும் தெளிவு படுத்தி விடுகிறேன்...
நன்றி தேனு
ஹாய் சம்யுக்தா
நீக்குரொம்ப நல்லா இருக்கேன்.... நீங்க எப்படி இருக்கீங்க...?
உங்க கதை முடிந்தவுடன் தான் படிக்கணும்னு நினைத்தேன்... ஆனாலும் என்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல், படித்து விட்டேன்... இப்போது மூவரின் நிலையம் பார்த்து குழம்பி இருக்கேன். லாரஸ் ஆரம்பத்தில் இருந்தே காதலித்ததாக வரலையே...! வீட்டின் பெரியவர்கள் பேசியதை வைத்து தான், அவள் மேல் ஒரு உணர்வு வந்ததாக படித்தேன்... நான்தான் சரியாக புரிந்து படிக்கவில்லையோ...!
லாரசும் பாவம்... சைதன்யனும் பாவம்... நீங்களே உங்கள் பதிலில் சொன்னது போல, யாருமே கெட்டவர்கள் இல்லை... சூழ்நிலை கைதிகள் தான்...!!
ரியா சைதன்யன் மேல் இருக்கும் கோபத்தில், லாரசை மணக்கும் முடிவை எடுக்க கூடாது... அப்படி செய்தால் அவனின் காதலுக்கு செய்யும் துரோகம்... உண்மையாகவே அவன் மேல் காதல் இருந்தால் அவள் அந்த முடிவை எடுக்கட்டும்...!
ஆனால் அதற்கு முன் சைதன்யனுடன் தெளிவாக பேசி... அவனோட பக்க நியாயங்களையும் கேட்டுவிட்டு, அதன்பிறகு முடிவெடுத்தால் இன்னும் சந்தோஷம்...!!
ஹாய் சம்யுக்தா
நீக்குரொம்ப நல்லா இருக்கேன்.... நீங்க எப்படி இருக்கீங்க...?
உங்க கதை முடிந்தவுடன் தான் படிக்கணும்னு நினைத்தேன்... ஆனாலும் என்னை கன்ட்ரோல் செய்ய முடியாமல், படித்து விட்டேன்... இப்போது மூவரின் நிலையம் பார்த்து குழம்பி இருக்கேன். லாரஸ் ஆரம்பத்தில் இருந்தே காதலித்ததாக வரலையே...! வீட்டின் பெரியவர்கள் பேசியதை வைத்து தான், அவள் மேல் ஒரு உணர்வு வந்ததாக படித்தேன்... நான்தான் சரியாக புரிந்து படிக்கவில்லையோ...!
லாரசும் பாவம்... சைதன்யனும் பாவம்... நீங்களே உங்கள் பதிலில் சொன்னது போல, யாருமே கெட்டவர்கள் இல்லை... சூழ்நிலை கைதிகள் தான்...!!
ரியா சைதன்யன் மேல் இருக்கும் கோபத்தில், லாரசை மணக்கும் முடிவை எடுக்க கூடாது... அப்படி செய்தால் அவனின் காதலுக்கு செய்யும் துரோகம்... உண்மையாகவே அவன் மேல் காதல் இருந்தால் அவள் அந்த முடிவை எடுக்கட்டும்...!
ஆனால் அதற்கு முன் சைதன்யனுடன் தெளிவாக பேசி... அவனோட பக்க நியாயங்களையும் கேட்டுவிட்டு, அதன்பிறகு முடிவெடுத்தால் இன்னும் சந்தோஷம்...!!
நானும் நலம் தேனு...
நீக்கு//வீட்டின் பெரியவர்கள் பேசியதை வைத்து தான், அவள் மேல் ஒரு உணர்வு வந்ததாக படித்தேன்... // அவன் காதலிக்க ஆரம்பித்த பின் தான் பெற்றோர்களுக்கு அது மாதிரி எண்ணம் இருக்கிறதே தெரியும்னு எழுதிருந்தேன்... அதுவுமில்லாம, ரியாதான் நண்பன்னு எப்பவும் சொல்வா, அதைத் தாண்டிதான் எப்பவும் யோசிச்சான்...
//அவனுடைய மனதில் வந்த காதல், திடீர் மாற்றமாக ஒரு நொடியிலோ, ஒரு நிமிடத்திலோ, ஒரு மணி நேரத்திலோ, ஏன் ஒரு மாதத்திலோ வந்தது இல்லை.
மண்ணிற்குள் ஆழப் புதைந்து கிடக்கும் விதை போல, மனதிற்குள் அவளுடைய நினைவுகளும் புதைந்து கிடந்தன.
உரிய பருவம் வந்ததும், தன் மீதிருக்கும் தடைகளையெல்லாம் துடைத்தெறிந்து, முட்டி மோதி முளைக்கும் விதை போலத்தான், புதைந்து கிடந்த அன்பும் ஒரு கட்டத்தில் துளிர்விட்டது.
அந்த அன்பு, எப்போது ஈர்ப்பு என்ற நிலையை அடைந்ததென்று அவனுக்குத் தெரியாது.
அந்த ஈர்ப்பு, எப்போது நேசமாக நெஞ்சில் மையம் கொண்டதென்றும் தெரியாது.
அந்த நேசம், எப்போது காதலாகக் கனிந்ததென்றும் தெரியாது.
மனதிற்குள் விதையாகத் தூவப்பட்டவளின் நினைவுகள், காலங்கள் கனிய ஈர்ப்பு என்ற உணர்வில் மெல்ல மெல்ல வளர்ந்து, நேசம் என்ற உணர்வில் மனதை நெகிழ வைத்து, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே காதல் என்ற மலராக மலர்ந்து மணம் வீசுகிறது.// லாரஸோட காதலைப் பத்தி சொல்லும் போதே இப்படித்தான் சொல்லிருப்பேன்பா...
அருமையான விளக்கம் சம்யுக்தா
நீக்குஏற்றுக்கொண்டேன்.... இதைவிட அழகா லாரஸ் கூட சொல்லியிருக்க மாட்டான்.
உங்கள் விளக்கத்துக்கு நன்றி.
ரியா பொருத்த மட்டில் இரண்டும் பெஸ்ட் சாய்ஸ் என்று எழுதும் போது எனக்கு என் எண்ணத்தின் ஓரத்தில் தோன்றிய ஒரு படத்தின் முடிவு தான் ஞாபகத்துக்கு வந்தது, "காதல் தேசம்" ...
பதிலளிநீக்குஆக மூன்றாம் நபரின் வருகையை புகுத்த போகுறீர்களா??
நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க - சொல்லிப் பார்த்துக்கொள்கிறேன்.
காதல் தேசம் படத்தில ரெண்டு நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கிற மாதிரி வருமென்று நினைக்கிறேன் ஜாஸ்... நம்ம ஆட்கள் ரெண்டு பேருமே ஒருவருக்கொருவர் அறிமுகமற்றவர்கள் தானே... அதனால் இருவரில் ஒருவர் தான் ஜாஸ்...
நீக்குJass,
பதிலளிநீக்கு//நான் மட்டும் தான் ஆட் வுமன் ஔட்//
எங்களுக்கு இருப்பது வெறும் அனுதாப ஓட்டு தான். இப்போ திருப்தியா :-) சைதன்யா கெட்டவனாக தெரிவதற்கு காரணமே லாரஸ் தான். யாருமே இல்லாவிட்டால் சைதன்யா ஒரு சிறந்த ஹீரோவாக நினைக்கப்பட்டிருப்பான். ஏன் , இதை விட -ve shade கதாநாயகர்களை பார்த்திருக்கோம். அப்போதெல்லாம் ஏற்றுக்கொண்ட மனம் இப்போது ஏற்காதிருப்பதுக்கு காரணம், ஒப்பீடு தான். ஒரு பொருள் நமக்கு சிறந்ததாக தெரியும்... அதைவிட சிறந்த ஒன்று வரும் வரை. அது போல் தான் சைதன்யா நிலை. அதே போல் ஒருவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ தீர்வு செய்வது அவன் வளர்ந்த + வாழ்ந்த சூழ்நிலையே.
உங்களை சைதன்யாவின் பக்கம் இழுக்க எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கிறது;-)
சம்யுக்தா,
என் எழுத்தை பாராட்டியதற்கு நன்றி.
எது நடந்தாலும் கொஞ்சம் சேதாரம் கம்மியாகுற மாதிரி பார்த்துகோங்க. ஏன்னா ரெண்டு பேரும் ரொம்ப பாவம்:-(
உங்க ப்ளாக் layout பற்றி நான் சொன்ன கருத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. மாற்றத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
தேனு,
//அதேபோல லாரஸ் -- நட்புக்கு இலக்கணம்.. ஆனாலும் அதன் எல்லைக்கோட்டை தாண்டி காதலுக்குள் நுழைந்தது ஒத்துக்க முடியலை.//
நட்பு ஏன் காதலாக கூடாதா? இதில் எனக்கு தவறு இருப்பது போல் தோன்றவில்லை. நட்பு காதலாகலாம். காதல் தான் நட்பாக முடியாது(மெல்லிய சலனம்/ உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்). சைதன்யனுக்கோ / லாரஸ்க்கோ வரப் போகும் நிலை. தவறிருந்தால் மன்னிக்கவும்.
இல்லை ரதி....
நீக்குஎனக்கு என்னவோ இந்த பாய்ன்ட் கொஞ்சம் உறுத்துது... ஒரு நல்ல நட்பு கடைசிவரை நட்பாக மட்டுமே இருக்கணும்... அதில் காதலுக்கு இடமில்லை...! பெண்-பெண் , ஆண்-ஆண் நட்பு போல... ஆண்-பெண் நட்பும் இருக்கவேண்டும் என்று எனக்கு தோணுது... அது சரியா தப்பான்னு தெரியவில்லை...!
ஹாஹா... அப்படியே உங்களுக்கு உல்டாவா நான் சொல்லுறேன்... காதலுக்கு பின் அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு உருவாகும்.. அது சாத்தியம் தான்..! ஒரு கணவனுக்கு மனைவி தான் நல்ல தோழியாக இருக்கமுடியும்... அதேபோல மனைவிக்கு கணவன் தான் நல்ல தோழனாக இருக்கமுடியும்... இதை எங்கோ படித்த நியாபகம்..!
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நீக்குரதி... மாத்தி மாத்தி ரெண்டு பேருக்கு சப்போர்ட் பண்றதைப் பார்த்து, சேதாரம் குறைவா நான் தப்பிச்சாப் போதும்னு இருக்கு...
நீக்குதேனு,
நீக்கு//காதலுக்கு பின் நட்பு. //
மன்னிக்கவும், நான் குறிப்பிட நினைத்தது " காதல் இல்லை என்றானதர்க்கு பின்". அதாவாது "காதல் இல்லையன்றால் என்ன, நட்பாகவாவது இருப்போம் " என்ற நிலை சாத்தியமில்லை என்பது என் கருத்து.
சம்யுக்தா,
நல்லா புரிஞ்சிகிட்டீங்க உங்க நிலமைய ;-)
ஓஒ.... அது சரிதான் ரதி...
நீக்குமன்னிக்கவும்... நான் வேறு மாதிரி நினைத்துவிட்டேன்.
கண்டிப்பா ரதி, எப்போதும் சாய்ஸ் கொடுத்தால் மனிதனுக்கு எது பெஸ்ட் னு தான் தேட தோணும் அது மனித இயல்பு.. சைதன்யா வின் fan page கு என்னை இழுத்தற்கு நன்றி, நான் லைக் போட்டுட்டேன் பா.
பதிலளிநீக்குஅது ஒன்றும் இல்லை ஆண்டி ஹெரோ மட்டும் கதையில் இருந்தால் அவனுக்கு வக்காலத்து வாங்கி இருப்பேன்.. ஹ ஹா. லாரஸ் மாதிரி ஆள் இருப்பதினால் ஹே ஹீ அவனுக்கும் ஒரு ஆதரவு கொடுக்க வேண்டும் தானே..
ஹ ஹ ஹா ஜாஸ் இதென்ன இப்படி சைதன்யனுக்கு லைக் போட்டுட்டீங்க... இப்படி லாரஸை அம்போன்னு விட்டுட்டுப் போயிடக் கூடாது... மாத்தி யோசிங்க ;)
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குசம்யுக்தா,
நீக்குஉங்க கணவர் சொன்னது போல் சைதன்யனுக்கு ஆதரவு குவியுது. அவர் முக்காலம் உணர்ந்த ஞானி போல. தப்பித்தவறி இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள்:-)
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு