தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! கலையாத கனவுகள் கதை இந்த அத்தியாயத்தோடு முடிவடைகிறது நண்பர்களே!
தொடர்ந்து கதையைப் படிப்பவர்கள், மனதில் தோன்றிய குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்றம் செய்து முழுக் கதைக்குமான லிங்க் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
படிக்க ஆரம்பிக்காதவர்கள், மாற்றம் செய்து முழுக் கதையையும் கொடுத்த பின் படியுங்கள்... நன்றி!
கலையாத கனவுகள் - இறுதி அத்தியாயம்
http://en.calameo.com/read/0028834693f6072e950d0
சூப்பர் சம்யுக்தா!!!
பதிலளிநீக்குநான் நினைத்த கிளைமாக்ஸ் தான். நீங்கள் எனக்கு சில துப்புகள் கிடைத்தது என்று சொன்னனே அது என்னவென்றால்....
- ரொமான்ஸ் அளவுக்கு அதிகமாக சென்றுவிட்டது அதை சரி பண்ணி அடுத்த பதிவை போடுவதாக சொன்னீர்கள் .
அப்பவே எனக்கு தெரிஞ்சிருச்சி அது கண்டிப்பா லார்ஸ் தான் என்று. அவன் தான் இவ்ளோ நாள் அவன் காதலை செயல்களில் காட்டாமல், எல்லை மீறாமல், தன்னை கஷ்டப்பட்டு கட்டுபடுத்தி கொண்டு இருந்தான். அது மட்டுமில்லை, சைதன்யன் இயல்பால் அவனுக்கு அவ்வளவாக காதலை வெளிப்படுத்த தெரியாது.
-சைதன்யன் இறுதியில் படிப்பவர்கள் மனதில் உயர்ந்து நிற்பான் என்று உங்கள் கணவர் சொன்னதாக சொன்னீர்கள்.....
சைதன்யன் எங்கள் மனதில் நிற்க வேண்டுமானால், அவன் ரியாவை விட்டு கொடுத்து விலகினால் மட்டுமே சாத்தியம். அவன் ஏதோ ஒரு வகையில் ரியாவை லாரஸ் மீதான காதலை உணரவைத்து அவனிடம் சேர ஒரு தூண்டுதலாக இருப்பான் என்று நினைத்தேன்.
மூன்று பெரும் தாங்கள் சுயநலமாக இருப்பதாக உணர்வார்கள் என்று சொல்லி இருந்தீர்கள். லாரஸ் எப்படி சுயநலவாதியாக தன்னை யோசித்திருப்பான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கான விளக்கம் அருமை.
சைதன்யன் தான் கடைசியில் நெஞ்சில் நிற்கிறான்.
- என்னோடது ஆழமான காதலாக இருந்திருந்தால் கண்டிப்பாக போராட தோணியிருக்கும்.
- நேரத்துக்கும் சூழ்நிலைக்கும் தகுந்த மாதிரி மாத்திக்கரதுக்குப் பேர் காதல் இல்லை. நமக்கு பெட்டரா இருக்கும்னு தோணினா சரிங்கறதும், ஒத்து வரலைனா ஒதுக்கிறதும் காதல் இல்லை. அதே மாதிரி வேற யாரோட தூண்டுதலால் வர்ற உணர்வும் காதல் இல்லை.
- அவ மனசுல இருந்து லாரஸ்ஸ நிச்சயமா மறக்க வைக்க என்னால முடியாது..... ஆனா என்னோட நினைவுகளே இல்லாம செய்ய லாரஸால முடியும்.
(செம்ம நச் வசனங்கள் )
அதே மாதிரி அவனின் சுய அலசல் செம்ம க்ளாசிக் :
- கோபம் வந்தா வார்த்தைகள விட்றத இன்னும் கட்டுபடுத்தல.
- அவ என்ன விட திறமையா ஏதாவது செய்தா கண்டிப்பா டாமினேட் செய்ய தோணும்
லார்ஸ் தான் பக்குவமானவன் என்று நினைத்தேன். ஆனால் சைதன்யன் எத்தனை இழப்பு வந்தாலும் தாங்கிக்கொள்ளும் மனவலிமையுடன், அவளுடைய நினைவுகளை ஒரு சுகமான சுமையாக ஏற்று, காலம் தன் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவிப்பது அவனின் பக்குவத்தை காட்டுகிறது. எல்லா தவறுக்கும் தானே பொறுப்பேற்றுக் கொள்வது அழகு.
அந்த வலி , வேதனை, இழப்பின் போது கூட நிதானமாக யோசித்து, நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வது அருமை.
கடைசியில் ரியா தான் படிப்பவர்களின் நெஞ்சில் நிற்கவில்லை. அவள் லாரஸ்ஸை தேர்ந்தெடுத்ததே தனக்கு பெட்டெர் சாய்ஸ் என்பதால் தான். அது சுயநலம் தான். "இவ்வுலகில் சுயநலம் இல்லாத மனிதர்கள் யார்? " என்று அவளை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்.
exactly ....super Rathi...!!!
நீக்கு(Y) (Y)
ஹாய் ரதி...
நீக்குமிக்க மிக்க நன்றிப்பா...
முதல்லையே நீங்க கெஸ் பண்ணிட்டீங்கன்னு தெரியும் ;) உங்க கமெண்ட்ஸ் வச்சே புரிஞ்சுக்க முடிஞ்சுது...
//நீங்கள் எனக்கு சில துப்புகள் கிடைத்தது என்று சொன்னனே அது என்னவென்றால்....// வாவ்! இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. கதையோட ஓட்டத்திலிருந்து புரிந்து கொண்டீர்கள்னு நினைத்தேன். அதுவுமில்லாம, தோற்கப் போகிறவர்கள் மீது தான் பரிதாபம் வரும்... அதனால, நீங்களும் பொற்செல்வியும் ஹீரோ யாருங்கறதை தெளிவா முடிவு பண்ணிட்டீங்கன்னு நினைச்சேன்... ஆனா, என்னோட பதில்கள்ல இருந்தே இவ்வளவு யூகிக்க முடியுதா! சூப்பர்ப்பா...
ஒரு கதையில யாராவது ஒருத்தர் ரெண்டு பேர்தான் ஹைலட்டாத் தெரியணும்... அதனாலதான், சாதாரணமான பொண்ணா ரியாவைக் காட்டினேன்பா...
எப்பவும் போல அழகா உங்களோட கருத்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லிட்டீங்க. நன்றி ரதி...
தொடர்ந்து உங்களுடைய கருத்துக்களைத் தெரியப்படுத்தி, அழகான அலசல்களைக் கொடுத்து ஊக்குவித்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி ரதி...
விரைவில் உங்களோட கதையை எதிர்பார்க்கிறேன்... நிச்சயம் எழுதுவீங்க... அதுக்கு இப்பவே என்னோட வாழ்த்துக்களைச் சொல்லிடறேன் :)
ரியாவை நான் கண்டிப்பாக குறை கூற வில்லை. ஏனென்றால் அவள் காதல் கத்திரிக்காய் என்று பொய்யுரைக்கவில்லை. காதல் இல்லையென்றான போது, பெட்டரா தேர்ந்தேடுக்கனும்ங்கறது மனித இயல்பு. அவள் வரை அவள் செயல் சரியே.
நீக்குகுறையா நான் எடுத்துக்கலை ரதி... குறையே சொன்னாலும் நான் ரொம்ப கூல்... என்னோட எழுத்தை இம்ப்ரூவ் பண்ணத்தானே சொல்றீங்கன்னு எடுத்துப்பேன்.
நீக்குமிகச் சரியா ரியாவோட கதாபாத்திரத்தைக் கணிச்சிருக்கீங்க. மிகைப்படுத்தப்படாத நிதர்சனத்தைப் புரிந்து கொண்ட நாயகிதான் அவள்
:'( :'( :'(
பதிலளிநீக்குஎன்னதான் சரியா கெஸ் பண்ணியிருந்தாலும், மனசுக்கு கஷ்டமா இருக்கு....மனசை கொஞ்சம் தேத்திகிட்டு வந்து கமென்ட் பண்றேன்....
:'( :'( :'(
ஏனிந்த மனவருத்தம் பொற்செல்வி?
நீக்குசைதன்யன் தப்பிச்சதுக்கா இல்லை லாரஸ் மாட்டினதுக்கா ;-)
ஹாய் பொற்செல்வி
நீக்குஇது மாதிரிதான் சொல்லுவீங்கன்னு கெஸ் பண்ணினேன்... யாராவது ஒருத்தர் விலகித்தானே ஆகணும்... அப்படி விலகினதாலதான் சைதன்யனை இன்னும் அழுத்தமா நினைப்பீங்க... விடுங்க நம்ம ஆள் ரொம்ப நல்லவன்னு சந்தோசப்பட்டுக்கலாம்... உங்களோட கருத்துக்களுக்காகக் காத்திருக்கேன்பா.... நன்றி.
ரதி,
ஏன் இந்தக் கொலைவெறி ரதி?? ஹ ஹ ஹா... ஜாஸ் தான், ரியாவைப் பிசாசுன்னு சொன்னாங்க, இப்ப நீங்களும் சொல்லிட்டீங்க... ஆக மொத்தம் சைதன்யனைத் தப்பிக்கவச்சு, லாரஸை மாட்டி விட்டுட்டேன் ;)
Hi samu
பதிலளிநீக்குI expected Riyadh and saiththanyan not larus but Namma hero saiththanyan than unmaiya parththal saithu kadal than uyarnthathu enthathan sonnallum avanukku aval unaravikkamal ponathu thavaru thane larus knows her from her child hood but he does not know
I can't accept this mam , please next story saithu vaithu elluthunga
Avan happy a irunthathu than intha story thakkam kauri yum.
ஹாய் திவ்யா...
நீக்குமூட் அவுட் ஆயிட்டீங்க போல... ரியாலிட்டின்னு வரும்போது ஈர்ப்புக் காணாமப் போயிடும்பா, உண்மையான காதல் அவளுக்கு இருந்தா நிச்சயம் புரிய வச்சிருந்திருப்பா...
காலம் காலமா,பெண்களே விட்டுக் கொடுத்துப் புரிய வைத்து காதல்ல ஜெயிக்கப் போறாடறதைப் படிச்சு என்னையும் அறியாமல் சலிப்பு வந்திடுச்சு போல, அதுதான் பிராக்டிக்கலா என்ன பண்ணுவோம்னு யோசிச்சு இது மாதிரி எழுதினேன்....
நீங்க ஆசைப்பட்ட மாதிரி வருங்காலத்தில எழுத முயற்சிக்கிறேன் திவி... இப்ப முடியாதுப்பா... அடுத்து எழுத முடிவெடுத்த கதை மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு...
உங்களோட ஆதங்கத்துக்காவது சைதன்யனின் சந்தோசமான மனநிலையை நிச்சயம் எழுதுவேன்
உங்களோட கருத்துக்களுக்கு மிக்க நன்றிப்பா
I hate riya she does not the truth
பதிலளிநீக்குஹ ஹ ஹா...
நீக்குஹாய் சம்யூ,
பதிலளிநீக்குசூப்பர்ப்.பின்னால் விளக்கமாக கருத்து சொல்கிறேன்.
நைஸ் ஸ்டோரி.
ஹாய் தேவி
நீக்குமிக்க நன்றிப்பா...நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க,, ஆவலுடன் காத்திருக்கேன்
ஹாய் சம்யூ,
நீக்குவழக்கமான காதல் கதையென்று நீங்கள் குறிப்பிட்டிருந்தாலும்,அது உண்மையல்ல என்று எங்களுக்கு தெரியப்படுத்திட்டீங்க.அருமையான நடை.
அழகாக ஒவ்வொருவரையும் ஆழ்ந்தெடுத்து சொல்லிய உணர்வுகள் சூப்பர்ப்.
கதையில் ஹீரோ- ஹீரோயின் இவர்களாகத்தான் இருக்க போகிறார்கள் என்று யூகிக்க வைத்து விட்டீங்க.பெயர் பொருத்தத்திலிருந்து அழகாக நம்ப வைத்திருந்தீங்க.பெரும்பான்மையினர்,( நானும் தான்)சைதன்யன், ரிதன்யாவை ஹீரோ- ஹீரோயின் என்றெண்ணி ஏமாந்து தான் போயிட்டோம்.:-D
முதலில் லாரஸை பார்த்தப்போ, அவனைத் தான் ஹீரோவாக நினைத்தேன்.சைதன்யனின் ஆணாதிக்க பேச்சுக்களை கேட்கும் போதும் லாரஸ் தான் நின்றான்.ஆனால்,ரிதன்யாவின் பார்வையில் அவன் மீதான ஈர்ப்பு நீறு பூத்த நெருப்பாக இருக்க இருக்க,நானும் தடத்தை மாற்றி விட்டேன்.
பின்,அவளுக்கு லாரஸின் மீது ஈர்ப்பு உருவாகி குற்றவுணர்வில் நின்ற போது,இனி நாம் எந்த யூகத்திற்கும் வரவேண்டாம் என்று முடிவெடுத்து, சம்யூ வழியிலேயே போவோம் ன்னு முடிவெடுத்திட்டேன்:-D
இருந்தாலும்,இறுதியில் ஒரு சிறு கீற்றளவு ஏமாற்றம் வந்ததென்னவேிா உண்மை.இது தான் ஒரு எழுத்தாளருக்கு சாதனை.யூகிக்க முடியாவண்ணம் படிப்பவர்களை கட்டி இழுத்து,இரு அணியாக நிற்க்க வைத்து இருப்பதற்கு பாராட்டுகள் சம்யூ.
கதையில் வேண்டுமானால்,பெயர் பொருத்தம், முதல் காதல்,ஒருவனுக்கு ஒருத்தி என்று எண்ணி இணைத்து வைக்கலாம்.
யதார்த்தத்தில்,இரு வேறு குணாதியசங்களை கொண்டவர்கள் இணைந்து வாழ்க்கையை கொண்டு செல்வது சவாலானது தான்.
ஒவ்வொருவரின் தனித்தன்மைகள்ையும்சில வகை குணங்களையும்,எந்த திருமணத்திலும் சிறிது தளர்த்தத்தான் வேண்டியிருக்கும்.அது இருவரிடமும் இருந்து வர வேண்டும்.ஒருவர் மட்டுமே,அதிகமாக விட்டு கொடுத்து கொண்டே சென்றால் மலைப்பாக தான் இருக்கும்.சலிப்பு தன்னால் வந்தே தீரும்.
எல்லா குடும்பங்களிலும், ஒவ்வொரு வித பழக்க வழக்கம் இருக்கும்.ஓரே சாதி,இன,மத பழக்க வழக்கங்களை உடையவர்களாக இருப்பினும் மாறுபாடுகள் உண்டு தான்.
அப்படி வேறு பாடுகள் கொண்ட குடும்பத்தில் திருமணத்திற்கு பின் பொருந்தி கொள்வது என்பது கணவன் மனைவி அன்பு,விட்டு கொடுத்து போவது என்பனவற்றை தை அதிமுக்கியமாக யா சார்ந்திருக்கிறது.
இங்கு இரு ஆண்களும் அவர்களின் குடும்பங்களும் படிப்பு,வேலைய்ை தவிர்த்த எல்லா விசயத்திலுமெ வேறுபாடு கொண்டவை.அதற்கு பொருந்தி கொள்வதற்கு காதலும்,பொருந்தி கொண்டு வெற்றியடைய முடியும் என்ற திட மனமும் வேண்டும்.அப்படியில்லாமல் போனால்,அவர்கள் வாழ்வு கேள்விக்குறி தான்...
ரிதன்யாவிற்கு,்அந்த திடம் இருப்பதாக தோன்றவில்லை.நட்பாக பழகுவது வேறு.குடும்ப உறுப்பினராகி ஒன்றிணைவது வேறு.
அவளுக்கு, சைதன்யன் தன் மீது கொண்ட காதலை உணர தெரியவில்லை.ஏதோ ஒரு பார்வை மாற்றம் என்றஅளவில் மட்டுமே அவளலால் உணர முடிகிறது.
லாரஸிடம் மனம் விட்டு தன்னை பற்றி சொல்வது பாராட்ட வேண்டிய ஒன்று.அந்தளவிற்கு மனமொன்றி இருப்பது குறித்து அவளுக்கு தெரியவில்லை.அந்த வெளிப்படையான பேச்சேை அளித்தற்கு லாரஸின் குணமும்,போக்கும் ஒரு வகையில் காரணமே.
எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவென்பது யதார்த்தத்தில் காணாத ஒன்றே.ஹீரோயினை இயல்பானவளாக காட்டியமைக்கு பாராட்டுகள்.அவளுடைய மற்ற குணங்கள் பாராட்டுதலுக்குரியவையே.
அவள் தந்தையின் வளர்ப்பையும் பாராட்ட வேண்டும்.பணம் மட்டுமே எல்லாவற்றையும் அளிப்பதில்லை என்ற அவர் வாழ்வு சொல்வது யதார்த்தமே.ஆனால் அதை புரிந்து கொள்பவர் குறைவே!!
தன் மகள் விரும்புகிறாள் என்ற காரணத்திற்கு வேண்டி சைதன்யன் வீட்டுக்கு சென்றாதகட்டும் சரி,அவளினெ மனம் தெளிவடைய காத்திருந்ததாகட்டும் சரி,காத்திருத்தல் நீள்கையில் கண்டிப்புடன் கூடிய கனிவை காட்டுவதாகட்டும் சரி,அவள் குற்றவுணர்வில் தவிக்கையில்,அழுகையில் அவளை தேற்றுவதாகட்டும் சரி.அவருக்கு நிகர் அவரே.
மிச்சத்தை அடுத்த பதிவில் சொல்றேன்
மிக்க மிக்க நன்றி தேவி...
நீக்குஅலசி ஆராய்ந்து தெளிவா உங்களோட கருத்துக்களைத் தெரிவிச்சிட்டீங்க...
படிப்பவர்களால் யூகிக்க முடியாத எழுத்துன்னு சொல்லிட்டீங்களே... அப்படியெல்லாம் நினைச்சிடாதீங்க...
நானும் சைதன்யன் தான் ஹீரோன்னு சொல்லி ஆரம்பிச்சேன்.. எத்தனை காலம் தான், ஆணாதிக்க மனப்பான்மை இருக்கற ஹீரோக்களுக்கு அடங்கிப் போற மாதிரிக் காட்டறதுன்னு சலிப்பு வந்த நேரத்தில, இப்படி ஒருத்தன் ஹீரோவான்னு தோழிகள் ஒரு சில சண்டை போட்டாங்க..
திடீர் ஞானோதயத்தில லாரஸை அதிகமாக் காட்டினேன்...
அப்பம் தின்ன குரங்குக் கதை மாதிரி என்னோட நிலைமை ஆயிடுச்சு... லாரஸ் ஹீரோன்னு முடிவு பண்ணி ஒரு அத்தியாயம் எழுத, சைதன்யன் ஹீரோன்னு அடுத்த அத்தியாயம் எழுத எப்படியோ எழுதிட்டேன் ஹப்பா...
ஆணாதிக்க மனப்பான்மையை எப்பவுமே என்னால ஏத்துக்க முடியாததாலயோ என்னவோ,
முடிவு மட்டும் என் மனசுக்கு சரின்னு பட்டதை எழுதிட்டேன்... யதார்த்த வாழ்க்கைக்கு அதுதான் சரின்னுபட்டுது..
ஆனா, சைதன்யனைத் திட்டின மக்கள் எல்லாருமே, அவன் தான்ஹீரோ இப்படிப் பண்ணிட்டயேன்னு சொல்றாங்க.... :(
உங்களோட கருத்துக்களும், குணாதியங்களோட அலசலகளும் அழகா இருக்குப்பா...
கடைசி நான்கு அத்தியாயங்கள் கொஞ்சம் தெளிவா எழுதலைன்னு எனக்கே படுது.... முடிஞ்ச வரை சரி செய்திருக்கேன்...
குறைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்கப்பா
நன்றி தேவி...
நான் அப்பவே சொன்னேனே லாரஸ் அந்த ரியா பிசாசுகிட்ட மாட்டிகாதேன்னு கேட்டியா.. சம்யுக்தா ரியாவை உன் தலையில் கட்ட பார்க்குறாங்க எஸ் ஆகுடானு மகனேனு சொன்னேனே . எனக்கு அந்த பெட்ரோமாசு லைட் தான் வேணும்னு போய்டே.. என்னமோ போடா மாதவா. விதி வலியது!!!!
பதிலளிநீக்குவிரிவான கருத்துக்களுக்கு நாளை வருகிறேன் சம்யுக்தா..
அன்புடன்
Jass
நீங்கதான் பிசாசு பிசாசுன்னு சொல்றீங்க,,, ஆனா நம்ம ஹீரோ காதல் பிசாசே காதல் பிசாசேன்னு பாட ஆரம்பிச்சிட்டான்... விதி படாத பாடு படுத்த வச்சாலும், அலட்டிக்காம சிரிப்பான் விடுங்க...
நீக்குவாங்க ஜாஸ் வாங்க....
லாரஸ் ரிதன்யாவை நன்றாக புரிந்து வைத்திருப்பது அழகென்றால் , அதை விட சைதன்யன், ரிதன்யா + லாரஸ்ஸை நன்றாக புரிந்து வைத்திருப்பது பேரழகு.
பதிலளிநீக்குஒவ்வொரு கதையிலும் ஏதோ ஒன்றை ஆழமாக அலசி ஆராய்கிறீர்கள். இக்கதையில் மனித உணர்வுகளை மிக உண்மையாகவும், ஆழமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருகிறீர்கள்.
உங்களின் அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஹ ஹ ஹா... அழகு, பேரழகுன்னு கவிதை மாதிரி சொல்றீங்க... மிக்க நன்றி ரதி...
நீக்குஅடுத்தகதை தானே... வலியைத் தரும் வார்த்தையை அடையாளமாகத் தாங்கி வாழும் லட்சக்கணக்கான மக்களோட நிலைதான் கதைக் கருங்கறதால கொஞ்சம் கனமா இருக்கும்... பரவாயில்லையா...
அதுக்காக, ரொம்ப கனமாவும் இருக்காது... ஏன்னா, அவங்களோட வலிகளையும், வேதனைகளையும் எழுதற அளவு எனக்குத் திறமை பத்தாது... ஆரம்பம் முதல் கடைசி வரை காதலோட கலந்து வர்றதால வித்தியாசமா இருக்கும்... விரைவில் வர்றேன்...
சம்யுக்தா,
நீக்குஇப்படியெல்லாம் பயமுறுத்தாதீர்கள். அது கனமாக இருந்தாலும், அந்த வலிகளும் வேதனைகளும் கேட்பாரற்று இருப்பது போல் கதையை முடிக்காதவரை பரவாயில்லை.
நீங்கள் ஒரு கதை களத்தை எடுத்தால், அதில் உங்களால் முடிந்த ஆழம் வரை சென்று, எங்களுக்கு அதை உண்மையாக, அழுத்தமாக பகிரும் உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து உங்களின் புதிய படைப்பை ரசிக்க தயாராக இருக்கிறோம்.
(இக்கருத்தை தவறுதலாக இன்னொரு இடத்திலும் பதிவிட்டேன். தயவு செய்து அந்த இடத்தில் இருந்து டூப்ளிகேட்டை நீக்கி விடுங்கள்.)
உங்களுடைய நம்பிக்கைக்கு மிக்க நன்றி ரதி... சோகமான முடிவுகளை எப்பவுமே எழுத மாட்டேன்... அதெல்லாம் நமக்கு ஒத்து வராது.
நீக்குடூப்ளிகேட்டை நீக்கிட்டேன்பா
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குHai samyuktha...
பதிலளிநீக்குNan iru thuruvangal,mayathurigai rendu padichen, athuku apram unga novel thedi thedi padika aramchiten ..
Epdi romancelayum kalakringa konjam kanamana kathailayum atha feel pana vacharinga..
Indha story startingla riya character superonu thonuchu poga poga acho....nu aiduchu, apdiye opp.saithanya..
Larus super... avonada love kedaika riya so lucky.. saithanya nee romba rmba lucky..
First 6 ,7 episode riya kovam niyayamnu thonuchu.. epo ava larus kitayum erpunu feel panalo apave aiyo podinu aiduchu.. anbazhagan solrathu correct.. ava larusa love panatum enavo panatum yean avana thedi vanthu palli vangea mathuri pananum..
Nice story.. waiting for next story
ஹாய் எழில்
நீக்குஉங்களுடைய வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிப்பா..
மனிதர்களோட குணாதிசயங்கள் வித்தியாசமாதானே இருக்கும்... எனக்கு ரிதன்யாவோட கேரக்டர் பிடிச்சுத்தான் எழுதினேன்... கற்பனையில வாழாம நிஜத்தில் வாழற பெண்களில் ஒரு சிலர் இப்படித்தான் இருப்பாங்கப்பா
உங்களோட கருத்துக்களுக்கு நன்றி எழில்
ஹாய் சம்யுக்தா
பதிலளிநீக்குலாரஸ் அழகோ அழகு.... இவ்வளவு தெளிவாக ரியாவை புரிந்து வைத்து இருக்கிறானே.... அவளுக்காக எவ்வளவு யோசிக்கிறான்...! சான்ஸே இல்லை... அவள் மேல் தான் எவ்வளவு நம்பிக்கை.., தன்னை விட்டு செல்ல மாட்டாள் என்று... இதிலிருந்தே தெரிகிறது அவனின் ஆழமான காதல்..! இதை காதல்னு சொல்லுவதை விட புரிதல்னு சொல்லலாம்.
ரியா பக்கா சுயநலவாதி..... இப்பவும் அவளோட சந்தோஷத்தை மட்டுமே நினைச்சு பார்க்கிறாளே... தப்பில்லையா...! உன்கிட்ட இருக்குறது காதலான்னு தெரியலை..., ஆனா உன்னோட இருந்தா சந்தோஷமா இருப்பேன்னு லாரஸ்கிட்ட சொல்லுறது கொஞ்சம் நெருடுது... லாரசுக்கும் கொஞ்சம் சுயநலம்.... கடைசி நேரத்தில் காதலை கண்களில் காட்டி, சைதன்யனை விலக்கி நிறுத்திட்டான்... அதிலும் அவனே ஒதுங்கும்படி மறைமுகமாக செய்துட்டான்... !
சைதன்யனின் புரிதலான பேச்சு மலைக்க வைக்குது.... பிரமிக்க வைக்குது... ஒரு காதல் தரும் வலி.., இவ்வளவு தெளிவை கொடுக்க முடியுமா...?? இந்த தெளிவு முன்பே இருந்து இருந்தால்...., இன்று ரிதா இவனுக்கு தானே...!
எப்படியோ லாரஸ் ரியாவை கவர்ந்துட்டான்... அவனுடைய காதல் ஜெயித்து விட்டது... ரியாவும், சைதன்யனும் நிதர்சனத்தை புரிந்துக்கொண்டு நடந்துக் கொள்வது சூப்பர்...!
மூன்று பேருமே சுயநலவாதிகளாக இருப்பார்கள் என்று சொல்லி இருந்தீங்க.... ஆனால் என்னை பொறுத்தவரை, சைதன்யன் சுயநலவாதி அல்ல.... ரியாவுக்காகவும், லாரசுக்காகவும் விட்டுக்கொடுத்து போவது எந்த சுயநலத்தில் சேர்த்தி...??
சம்யுக்தா...., லாரஸ் பக்கம் வந்துட்டீங்க போலன்னு கேட்டு இருந்தீங்க.... நோ..நோ... நெவெர்... இப்பவும் நான் சைதன்யன் சைடு தான்...!
ஹ ஹ ஹா தேனு... லாரஸைப் புகழறதைப் பார்த்து இது வேற தேனுவா இருக்குமோன்னு குழம்பிட்டேன்...
நீக்குஅதானே கடைசியில நீங்க தான்னு ப்ரூஃப் பண்ணிட்டீங்களே... ஹ ஹ ஹா...
சைதன்யன் மேல இப்படி ஒரு அபிமானம் வச்சிட்டீங்களே,...
எவ்வளவு பாசம் காட்டினாலும், ஆணாதிக்க மனோபாவம் இருக்கறவங்களை என்னால ஏத்துக்க முடியாததும், கதையை இப்படி முடிக்கக் காரணமாயிடுச்சு போல...
சைதன்யன் விட்டுக் கொடுத்தானோ, ரிதன்யாவோட மனசில லாரஸ் இருக்கறதைப் புரிஞ்சிட்டானோ, அவன் கிட்டத்தான் கேட்கணும் ;)
நிறையப் பேர் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணி என்னை திட்டித் திட்டி மெயில் அனுப்பறாங்க :(
முழுக்கதையோட லிங்க்ல திட்டு வாங்கறதைக் குறைக்க ஏதாவது வழியை யோசிக்கறேன்...
உங்களோட கருத்துக்களுக்கு மிக்க நன்றிப்பா...
ஹாஹா...... அதே தேனு தான்...... மாற மாட்டேன்.
நீக்குஆணாதிக்க மனோபாவம் எனக்கும் பிடிக்காது...... நானும் அதை சப்போர்ட் பண்ணலை ..... ஆனா இங்க அவனின் அந்த குணம் மட்டும் காரணம் இல்லையே..... குடும்ப சூழ்நிலையும் தானே காரணம்..... அப்படிப்பட்ட குடும்ப பாரம்பரியத்தில் இருந்து வந்த ஒருவன் வேறு எப்படி இருக்க முடியும்.....??
லாரசுக்கு அப்படியில்லை..... அவனோட குடும்பம் எல்லா விதத்திலும் ரியாவுக்கு பழக்கப்பட்டது...... so அவனுக்கு பிரச்சனை இல்லை.
ஓஒ..... நிறைய பேர் என்னை மாதிரி தானா...... நல்லா திட்டு வாங்குறீங்களா..... சூப்பர்.
உங்கள் அடுத்த கதை கொஞ்சம் கனமான கதைன்னு சொல்லி இருக்கீங்க...... வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்..... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
சம்யுக்த்தா,
பதிலளிநீக்குஆணாதிக்கம் என்று பல முறை கூறி உள்ளீர்கள். ஆனால் சைதன்யன் ஆணாதிக்க மனம் கொண்டவன் என்று அழுத்தமாக எந்த இடத்திலும் காட்டப்பட்டதாக எனக்கு நினைவில் இல்லை. அவன் வீட்டு பெண்கள் தானாக ஒடுங்கி இருப்பதாகத் தான் காட்டியதாக நினைவு. ஒருவேளை இதுவே ஆணாதிக்கம் தான் என்று கூறுகிறீர்களா?
ஆணாதிக்கம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கை சூழ்நிலையை பொறுத்து மாறும். எனக்கு ஆணாதிக்கம் என்று தோன்றுவது இன்னொருவருக்கு அப்படி தோன்ற அவசியமில்லை. இது எங்கள் குடும்ப நண்பருடன், சமீபத்தில், உரையாடிய பொழுது உணர்ந்தது. ஒரு கணவனின் வரையறை /எல்லை , ஒரு மனைவியின் space பற்றி அலசிக்கொண்டிருந்த பொழுது, ஆணாகிய அந்த நண்பர் ஒரு ஆணின் சில செயல்களை ஆணாதிக்கம் என்று சொல்ல, நான்(பெண்ணாய் இருந்தும்) அதில் சிலவற்றை மறுத்துக்கொண்டிருந்தேன். நான் வளர்ந்த சூழ்நிலை சிலவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வைக்கிறது. அந்த நண்பரின் வாழ்க்கை முறை + வெளி உலக உலகம் அனுபவம் அவரை பன்படுத்தியுள்ளது.
என் மனதில் தோன்றியதை குறிப்பிட்டேன். தவறிருப்பின் மன்னிக்கவும்..
மனதில் படும் கருத்துக்களை தாராளமாகக் குறிப்பிடுங்கள் ரதி. இது போன்ற விவாதங்களிலிருந்து நிறையக் கற்றுக் கொள்ளலாம். கதை மாந்தர்களின் பார்வையை விட்டுவிட்டேன். நானும் வாசகியாக எனது கருத்துக்களைச் சொல்ல வந்துவிட்டேன்.
நீக்குஇது போன்ற ஒருவன் இப்படி இருப்பான் என்று முடிவெடுத்து பாத்திரங்களைப் படைப்பதும், அவனுடைய சிந்தனைகளைச் சேர்ப்பது வேறு. வாசகியாக நானும் குணாதிசயங்களை ஆராய்வது வேறு.
நீங்கள் சொல்வது சரிதான் ரதி. சூழ்நிலையைப் பொறுத்துத்தான் ஆணாதிக்கம் மாறும். ஆண், பெண் பேதமின்றி வளர்க்கப்பட்டவள் நான். பத்து வயதிலேயே அச்சமும், நாணமும் நாய்கட்டு வேண்டுமாம் என்று தான் எனது தந்தை சொல்லிக் கொடுத்தார்.
அதனாலோ என்னவோ, என்னதான், அன்பு, பாசம், உழைப்பு என்று அடுக்கினாலும், வளர்ந்த சூழ்நிலையையும் தாண்டி, எனது பார்வையில் சைதன்யன் ஆணாதிக்கவாதியாகத்தான் தெரிகிறான்.
வழி வழியாக வந்த ஆணாதிக்கத்தை விடாமல் கட்டிக் காப்பதில் பெண்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்று சொல்வதற்காகத்தான் சைதன்யனின் வீட்டுப் பெண்களைப் பற்றி எழுதினேன் ரதி.
வளரும் சூழ்நிலை குணாதிசயத்தை நிர்ணயிக்க ஒரு காரணி என்றாலும், புரிந்து கொள்ளும் பிராயத்தில் சூழ்நிலையைக் காரணம் காட்டுவது, செய்த தவறைச் சரி செய்யாது.
தவறு சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் சூழ்நிலையும், வளர்க்கப்பட்ட விதமும் நிச்சயம் காரணங்களாக இருக்கும். அது உண்மையென்றாலும், குற்றவாளிகளைச் சட்டம் மன்னித்து விடுகிறதா?
கல்லூரி இறுதி வகுப்புப் படிக்கும் ஒருவன், உடன் படிக்கும் பலதரப்பட்ட பெண்களோடு பழகவில்லையென்றாலும், கவனித்திருப்பான். அதுவும் பொறியியல் கல்லூரிப் பெண்கள் அனைவருமே ஓரளவு நாகரிகத் தோற்றத்தில் வருபவர்கள்தான். தன்னைச் சுற்றியுள்ளவர்களின் குணத்தைப் புரிந்து கொள்வதை அவன் விரும்பவேயில்லை என்பதுதான் அர்த்தம்.
வேலையில் சேர்ந்த போது சூழ்நிலை மாறிய விதத்தைக் கவனித்திருப்பான். அவனிடம் மாற்றம் வந்திருக்கிறது. அதற்குப் பிறகும்,
//ஒரு பெண்ணின் மேற்பார்வையில் வேலை செய்ய வேண்டும்’ என்பதை நினைத்துப் பார்க்கவே, அவனுக்குப் பிடிக்கவில்லை.//
‘ //சாதாரணமாகவே, நாகரீகத் தோற்றத்தில் வலம் வரும் பெண்களை அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது.//
//அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு கொண்ட பெண்களைத்தான் பெண்களென்று ஒப்புக் கொள்ளும் இரகம் அவன்.//
இது போன்ற எண்ணற்ற அவனது குணாதியங்களின் கருத்துக்களை எழுதியிருக்கிறேன். இந்தக் காலத்தில் மெட்ரோ பாலிடன் சிட்டியில் இரண்டு ஆண்டு வேலை நிமித்தமாக இருந்தவன், பெண்களின் நாகரிகத் தோற்றம் பிடிக்காது என்று சொல்வது ஆணாதிக்கத்தில் சேர்த்தி தான். ஆபாசத்தைத் தூண்டாத உடைகளை அணியும் பெண்ணாகத்தான் ரிதன்யா வருகிறாள். உடைதான் பெண்களின் குணங்களை நிர்ணயிக்கிறது என்பது போல நினைப்பது சரியா?
அவன் எதிர்பார்க்கும் மடமைத்தனம் கொண்ட இக்காலப் பெண் மனதை மறைத்து வேடமிடுபவளாகத்தான் இருக்க வேண்டும். அவன் வெளிப்படையானவன் என்றாலும், அவனுக்கு வரும் மனைவி வெளிப்படையாக இல்லாமல், வேடமிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறானா?
முதன் முதலில் அவளைப் பார்த்தபோதே, ஆண்கள் மட்டும் விளையாடும் மைதானத்திற்கு வந்தது பிடிக்கவில்லை, எரிச்சல் வந்தது, கண்ணியமான உடை என்று உணர்ந்தாலும், அரைகுறை ஆடை என்று நினைப்பது ஆணாதிக்கம்தான் ரதி. விளையாட்டுத் துறையில் பெண்களைப் பார்க்காதவனா என்ன?
இரண்டுமூன்று வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு எனது பார்வையில் கருத்துத் தெரிவித்தேன்.. இன்னும் நிறைய நிறைய இருக்கிறது.
கத்துக் குட்டி என்ற அர்த்தம் வருமாறு ரிதன்யாவைத் திட்டினான் என்று எங்கோ எழுதியிருப்பேன், அப்படி நினைப்பவன் அவளுடைய கற்பனையில் உருவான வீட்டை, தன்னுடையதாக உருவாக்கியது எதில் சேர்த்தி? பெண்ணிடம் இருக்கும் திறமையைப் பாராட்ட மனமில்லாமல், குறைகளை மட்டும் சொல்லிக் காட்டும் மனோபாவம் எதில் சேர்த்தி?
எனது மனமே அவனை கதாநாயகனாக ஏற்க மறுக்கும் போது, ரிதன்யா வளர்க்கப்பட்ட விதத்திற்கு அவனுடைய குணநலன்கள் ஒரு போதும் ஒத்துப் போகாது.
நீங்கள் அடுக்கிய காரணங்கள் , சொன்ன பிறகு தான் நினைவில் வருகிறது. சைதன்யனின் சுயஅலசல் + மனமாற்றம் அவனை பற்றிய குறைகளை எங்கோ நினைவடுக்கில் ஆழமாக புதைத்துவிட்டது என்று நினைக்கிறேன்:-)
நீக்கு