ஞாயிறு, 16 ஜூலை, 2017

நண்பர்களே...

எனது கரை தொடும் அலைகள் நாவல், வாகை பதிப்பகத்தின் மூலம் புத்தக வடிவில் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

 நாவல் எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை என்னுள் விதைத்த ஷெண்பா பாலச்சந்திரன், வரிக்கு வரி விமர்சனம் செய்து என் எழுத்தை மெருகேற்ற உறுதுணையாக இருக்கும் வனிதா ரவிச்சந்திரன், தொடர் மின்னஞ்சல் மூலம் ஊக்கப்படுத்திய அமுதா பிளாக் நண்பர்கள், லேடீஸ் விங்ஸ் தளத்தில் எழுத அழைத்து புதிய வாசகர்களை அறிமுகப்படுத்திய மஞ்சுளா செந்தில்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போது புத்தகம் வெளியிடப் போகிறீர்கள் என்று அறிமுகமான நாள் முதலாய்க் கேட்டு, புத்தகம் வெளியிடும் எண்ணத்தைக் கொண்டிராத என்னை வெளியிடத் தூண்டிய மல்லிகா மணிவண்ணன், தமிழ் மதுரா, ஸ்ரீ லக்‌ஷ்மி சகோதரிகள், கோகிலா, ஹமீதா, மேக்னா உள்ளிட சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! 

அறிமுக எழுத்தாளர் என்ற முறையில் புகழ்பெற்ற பதிப்பகங்களுக்குள் நுழைவது மிகச் சிரமம் என்பதையும், புதுப் பதிப்பகம் ஆரம்பித்து இருநூறு புத்தகங்களைக் கூட விற்க முடியாது என்ற நிதர்சனத்தைச் சொல்லி, புத்தகம் வெளியிடுவதைப் பற்றிச் சிந்திப்பதையே தவிர்த்திருந்த போது, மணிக்கணக்கிலான விவாதத்திற்குப் பின் சென்னை புக் ஃபேருக்குள் வெளியிடுகிறேன் என்று என் மூலமே சொல்ல வைத்த நண்பர் சிபிக்கும், எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசி விரைவில் புத்தகம் வெளியிடத் தூண்டுகோலாக இருந்த தேவிப் பிரபா அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

அறிமுகமானவர்களிடமிருந்தும், குடும்ப நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் தாண்டி என்னை ஆன்லைன் எழுத்தாளராக்கியதில் பெரும் பங்கு வாசகர்களாகிய உங்களைத்தான் சேரும். பல்வேறு காலகட்டங்களில், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துரையிட்டு ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள். 

ஜாஷ், நிதா, வை ஸ்ரீ, கீதா, ராதா விஷ்வா, ராஜி, தேனு, ரதி, ஸ்வாதி, மாயா உள்ளிட்டவர்களின் தொடர் விமர்சனங்கள் மூலம் தான் என் பயணம் தொடங்கியது.அதற்குப் பின் நிறையப் பேர் தொடர் கருத்துரைகள் மூலமும், மின்னஞ்சல்கள் மூலமும் என்னை எழுதத் தூண்டி வருகிறீர்கள். அனைவரின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரையும் நினைவுகூர்ந்து, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!
தற்போது அச்சில் உள்ள கரை தொடும் அலைகளின் அட்டைபடம் உங்களின் பார்வைக்கு….

21 கருத்துகள்:

  1. ஹாய் சம்யுக்தா,

    வாவ்... என் மனமார்ந்த வாழ்த்துகள் சம்யூ.

    கரை தொடும் அலைகளை தொடர்ந்து,நிறைய படைப்புகளை புத்தக வடிவில் காண ஆவலாகயிருக்கிறேன்.

    அட்டைப்படம் அருமை

    இன்னமும் சாதனை பல புரிய வாழ்த்துகள் சம்யூ..

    அணிலின் உதவியே என்னது.

    நன்றி சம்யூ

    வாழ்க வளமுடன்
    - தேவி பிரபா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிக்கா. அடுத்த படைப்பைப் புத்தக வடிவில் கொண்டு வர நிறைய நிறைய்ய்ய்ய யோசிக்கணும்கா.

      நீக்கு
  2. Hi Samyu, Hearty Congratulations... So happy finally you have started publishing... உங்களை காணாம இரு துருவங்களை ஒரு முறை படிச்சுட்டு, கரை தொடும் அலைகளையும் திரும்ப ரிவைஸ் பண்ணியாச்சு... ப்ளீஸ், சீக்கிரம் வாங்க... தொடர்ந்து எழுதுங்க சம்யு...

    மென்மேலும் நல்ல கதைகளை எழுத வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    மாயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் மாயா,

      எப்படி இருக்கீங்க? ரிவைஸ் பண்றீங்களா? ஹஹஹா.

      சில சமயம் நம்மளையும் அறியாம் டவுன் ஆயிடுவோம். அப்படித்தான் ஆயிட்டேன் போல. எதுக்கு எழுதறோம்னு வர்ற ஃபீலை ஜெயிக்கறது ரொம்பவே கஷ்டம் மாயா. முடிக்காம விட்ட கதையை சீக்கிரம் முடிக்க முயற்சி பண்றேன்.

      நன்றி மாயா.

      நீக்கு
  3. வாழ்த்துகள் சம்யூ....எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேறியது....
    மற்ற கதைகளும் வெளி வந்தால் ,எனது கலைக்‌ஷன் நிறைவு பெறும் ...
    உங்கள் மனதை மாற்றி, புத்தகமாக வெளி வர காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி.....ஆவலுடன் அடுத்த வெளியிட்டிற்கு காத்திருக்கிறேன்....
    Hearty congrates to you....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ராணி. பொறுமையாக ஒவ்வொன்றாக வெளியிடலாம்பா.

      நீக்கு
  4. Welcome back mam..

    உங்க நாவல் எல்லாவற்றையும் படித்து விட்டேன். தனித்துவமான மிகச்சில எழுத்தாளர்களுள் நீங்களும் ஒருவர். வாரம் ஒரு முறையேனும் இந்த தளத்தை பார்த்து நீங்க வராததால் ஏமாற்றம் அடைந்திருந்தேன். உங்க எழுத்துக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் mam. So எங்களுக்காக நீங்க தொடர்ந்து எழுத வேண்டும். எழுதுவீர்கள் என நம்புகிறோம். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டேன் குழலி. நிறுத்தியிருக்கும் கதையை முடிக்க முயற்சிக்கிறேன்.
      நன்றி குழலி.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. எவ்வளவு பெரிய இடைவெளியாக இருந்த போதும், நீங்கள் மீண்டு(ம்) வந்ததே சிறப்பு சம்யு.. கண்டிப்பாக கார்கால மேகங்கள் நாவலை முடிக்க முயற்சி செய்யுங்கள். நான் வேளாண் பட்டதாரியாகையால், அந்த கதைக்களம் என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. எனவே தனிப்பட்ட முறையில், என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் இது. செவி சாய்க்க முயலுங்கள்.
      நன்றி

      நட்புடன்
      குழலி

      நீக்கு
    4. குழலி,

      நீங்கள் கேட்டது போல அப்போதே நாவலை முடித்துவிட்டேன். ஆனால், ஏனோ திருப்தி வராமால், வெளியிடுவதற்குத் தாமதப்படுத்தி விட்டேன்.

      நீக்கு
  5. வாழ்த்துக்கள் சம்யுக்தா

    உங்கள் கதைகள் அனைத்துமே பிடிக்கும். அதில் கரை தொடும் அலைகள் புத்தகமா வருவதில் மிக்க மகிழ்ச்சி ..தொடர்ந்து உங்கள் கதைகள் புத்தகமாகவும் வர வாழ்த்துக்கள். உங்களை சப்போர்ட் செய்து புக் வர மோட்டிவேட் பண்ண அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

    அப்போ அப்போ வந்து தொடர் கதை முடிந்ததா பார்த்து செல்வேன் இப்போ சீக்கிரம் நீங்க எழுதுவீங்க என்ற நம்பிக்கையுடன் வெயிட் பண்ணுறேன்

    ஸ்வப்னா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் ஸ்வப்னா,

      வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
      சீக்கிரம் எழுதுவேன்னு அவசரப்பட்டு முடிவெடுத்துவிடக் கூடாது. நிறுத்தியிருக்கும் கதையை வேண்டுமானால் வேகமாக முடிக்க முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  6. வாழ்த்துக்கள் சம்யுக்தா. உங்க கதைகள் அனைத்தையும் புத்தகமா பார்க்க ரொம்பவே ஆவலா இருக்கு

    -கோகிலா

    பதிலளிநீக்கு
  7. சம்யு,
    வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொரு முறை கதையின் முடிவின் போது பதிப்பதற்கு அனுப்பும் போது உங்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் சில மாற்றங்கள் செய்து அனுப்புவேன் என்று சொல்வதை பார்த்து நீங்கள் உங்கள் எல்லா கதைகளையம் ஏற்கனவே பதிவேற்றி விட்டீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதை பார்த்தால் (என்னால் ) புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒன்றை சாதித்து விட்டீர்கள் என்று உணர முடிகிறது. பாராட்டுக்கள்.

    மேன்மேலும் உங்கள் படைப்புகளை எதிர்நோக்கும்
    ரதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரதி,

      பெரும் மகிழ்ச்சி என்பது சம்பிரதாய வார்த்தை ரதி. ஆன்லைன் உலகில் கிணற்றுத் தவளை போல எழுதியாயிற்று. ஆனால், உண்மையான எழுத்துலகம் பரந்து விரிந்தது. இப்போதெல்லாம் புத்தக வெளியீடு சர்வ சாதாரணமாகிவிட்டது. இதில் சாதித்து விட்டதாக நினைப்பதற்கு எதுவுமில்லை.

      கூடுதல் கவனத்தோடு எழுத வேண்டுமென்ற எண்ணம் மட்டும் தோன்றியிருக்கிறது. நன்றி ரதி

      நீக்கு
  8. Hi Samyu,

    I have been visiting this place almost every day. I am glad to see you come back. Congratulations on publishing your story. I have been eagerly waiting for "Karkala megangal" for so long. Please come back soon with the next update.

    Thanks,
    Sharmila

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் ஷர்மி,

      நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தீர்களென்பது தெரியும். ஆனால், மிகவும் தாமதமாக வருகிறேன். ஆன்லைனில் அப்படியே நிறுத்திவிட்டு புத்தகத்தை வெளியிட்டுவிட்டேன். ஆன்லைனில் எழுதிய கதைகளை விற்பனைக்கு வைக்கவே கடைக்காரர்கள் தயங்கும் நிலையில் வேறு வழியின்றி இம்முடிவு.

      காத்திருக்குப்பிற்கு நன்றி ஷர்மி. சில நாள்களுக்குப் பிறகு உங்களுக்குக் கதையை அனுப்புகிறேன்.

      நீக்கு
  9. hi samyu

    waiting for quite long time for the update for karkala megangal. everyday i used to visit this site for the update details.

    congrats samyu. for publishing the same directly. will u continue the same in blog after some time?

    பதிலளிநீக்கு