புதன், 6 ஜனவரி, 2016

இது வரை கதையைப் படிக்கத் துவங்காதவர்கள், உலவிக் கொண்டிருக்கும் பிடிஎஃப்களில் படிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். முழுமையாகப் படித்துப் பார்க்கும்போது கடைசி ஆறு அத்தியாயங்கள் எனக்கே திருப்தியானவையாக இல்லை. தொடர்புகளைச் சரியாகச் சொல்லாமல், ஒருசில விளக்கங்களையும், உணர்வுகளையும் விட்டுவிட்டு, வேகவேகமாக ஓடியிருக்கிறேன். ஆங்காங்கே மாற்றம் செய்து, ஓரளவு குறைகளை நிவர்த்தி செய்து, இன்னும் இரண்டு நாள்களுக்குள் முழுக் கதைக்கான லிங்க்கையும் தருகிறேன். அதுவரை காத்திருங்கள்.  

20 கருத்துகள்:

  1. சம்யு,
    நல்ல கதை. ஆனால் நீங்களே சொன்னது போல் முடித்தாக வேண்டுமே என்று அவசரமாக முடித்தது போல் உள்ளது. கிருஷ் கண்டிப்பாக பக்கம் பக்கமாக பேச முடியாது. ஆனால் அவன் யோசிப்பது போல், மைண்ட் வாய்ஸ் மூலமாகவாவது, அவன் மன மாற்றத்தை கொஞ்சம் ஆழமாக சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாய் ரதி...

      நீங்கள் கருத்துரையிடத் தாமதித்தபோதே, சொதப்பல்களை எப்படிச் சொல்வதென்று ரதி யோசிக்கிறார்கள் போல என்று என் கணவரிடம் சொன்னேன். ஹ ஹ ஹா. கருத்துகளுக்கு நன்றிப்பா. நீங்கள் சொல்வது போல ஓரளவு மாற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், கடைசி அத்தியாயம் மட்டும் இன்னும் திருப்தியாக வரவில்லை. இப்படி ஏகப்பட்ட சொதப்பல்களோடு தெளிவற்று எழுதியதற்கு எழுதாமலேயே இருந்திருக்கலாமென்று தோன்றியது. கவனத்தை எங்கோ வைத்துக் கொண்டு கடமைக்கு எழுதினால் இப்படித்தான் ஆகுமென்று நொந்து கொண்டே மாற்றி யோசிக்கிறேன். கற்பனைக் குதிரை ஒரேயடியாகச் சண்டித்தனம் செய்கிறது. ஓரளவாவது திருப்தியாக வந்தபிறகு பதிவிடுகிறேன்பா.

      நீக்கு
    2. சம்யு,
      இந்த கதையே உங்க அளவுகோல்ள சொதப்பல்னா , அப்ப நல்லா வந்திருக்குன்னு சொல்ற கதை எப்படி இருக்குமோ. இந்த கதை நல்லா தான் இருந்தது, நான் மேல சொன்ன குறையை தவிர. உங்களோட மெயின் ப்ளஸ்ஸே கதை களத்தையும், கதாபாத்திரங்களையும் தெரிஞ்ச / தெரியாத கோணத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமா அலசுறது தான். அப்படி அலசுரப்ப எவருமே ஹீரோவும் இல்ல வில்லனும் இல்ல, அப்படின்னு தான் தோணும். அத்தோட படிக்கிற எங்களுக்கும் அதன் தாக்கம் இருக்கும்.

      எல்லா கதைலயும் அலுசுற நீங்க இங்க மிக அழுத்தமான கிருஷ் கதாப்பாத்திரத்ததின் மனதிலிருப்பதை அவன் தனுக்குள்ளேயே எப்படி அலுசுகிறான் என்று உங்கள் பாணியில் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். சைதன்யனை என் மனதில் நிலை நிறுத்தியதே கடைசியில் அவன் அவளை (அவள் பெயர் கூட மறந்து விட்டது) லாரஸ்ஸிடம் விட்டுகொடுக்க அவன் அடுக்கிய நியாமான நிதர்சனமான காரணங்கள் தான். அப்படி இருக்க கிருஷின் மன உணர்வுகளை தர்ஷியும், தாத்தாவும் என்ன தான் நமக்கு உணர்த்தினாலும், அவன் மூலம் அறிந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

      அதை தான் உங்களுடைய வழக்கமான(மனித உணர்வுகள் + அதன் புரிதல்) கையாள்தல் இந்த கதையில் இறுதி அத்தியாயத்தில் இல்லை என்றேன். நீங்க என்னடான்னா உங்களை அலசி, கடமைக்கு எழுதியதாக குறை கூறுகிறீர்கள்.

      இறுதியாக முக்கியமான ஒன்று, என் கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதற்கு மிக்க நன்றி.

      நீக்கு
    3. சொதப்பலாகத்தான் என் மனதிற்குப் பட்டது ரதி. கொஞ்சம் மாற்றிவிட்டேன்.

      மனதில் உணர்ந்ததைத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி ரதி. ஓரளவு கிருஷ்ஷின் மன அலசலை எழுதியிருக்கிறேன். என்ன தோன்றினாலும் தயங்காமல் தெரிவியுங்கள்.

      நீக்கு
  2. Thank you Samyuktha!! Waiting... interesting story!!!
    Janaki

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜானகி. கடைசி அத்தியாயம் மட்டும் மாற்றவேண்டியிருக்கிறதுப்பா. விரைவில் வருகிறேன்.

      நீக்கு
  3. பதில்கள்
    1. ஒரளவு மாற்றம் செய்து கொடுத்துவிட்டேன் ஸ்ருதி. படித்துவிட்டு பரவாயில்லையா என்று சொல்லுங்கள்.

      நீக்கு
  4. Thanks samyu. Waiting eagerly for the full link. Kanchanadevi

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காத்திருந்தமைக்கு நன்றி காஞ்சனா. முழு லிங்கைப் பதிவிட்டுவிட்டேன்.

      நீக்கு
  5. Thank u Dear! Eagerly waiting.Ennakum last few epi happy illa

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திற்கு நன்றி வித்யா. எனக்கும் கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லை. நான் எழுதினதைப் படிக்க இப்படித்தான் இருக்கு ;((

      நீக்கு
  6. Thanks for wonderful story!! But I am glad you are revising it as I also felt you hurried up in the end!! Last epi la krish koba padaratha dharshini solra mathiri varum, athu scene aa vantha nalla irukkum as I felt that is an important part in the story!! Sorry this is my opinion. Also jonathan was missing in the story near the end!!
    Nevertheless it was still a wonderful story!! waiting for the revised version.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய மனம் திறந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பிரேம். இறுதி அத்தியாயம் நீங்கள் சொல்வதைப் போலத்தான் யோசித்தேன். ஆனால், எனக்கு எழுத வரவில்லை. சண்டை போடும் இடங்களையும், கோபப்பட்டுத் திட்டும் இடங்களையும் எழுதுவதற்கு எப்போதுமே திணறுவேன். அதனால் தவிர்த்தது, படித்துப் பார்க்கும் போது தொடர்பற்று ஒட்டாமல் நிற்பது போன்ற உணர்வைத் தருகிறது. ஓரளவு மாற்றிவிட்டேன்.ஆனாலும் திருப்தி வரவில்லை. நீங்கள் சொன்ன குறைகளை முடிந்த வரை நிவர்த்தி செய்து கொடுக்கிறேன்பா.
      நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சம்யுக்தா,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்,
    நலமா?
    படிக்கலாம்னு பார்த்தா வெயிட் சைன் , காத்துக்கொண்டு இருக்கிறேன், விரைவாக வாருங்கள்.
    அன்புடன்
    Jass

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ஜாஸ். நான் நலம்பா. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நீண்ட நாள்களாக உங்களைக் காணவில்லை. முழுக்கதைக்குமான லிங்க் கொடுத்துவிட்டேன்பா. படித்துவிட்டு கருத்துகளோடு வாருங்கள். நன்றி.
      :)

      நீக்கு
  8. Hi samyuktha hi ti is sasi from bangalore . i already send so many request mail regarding i need ur novels in pdf mode . i read mayathroorikai.irukodukal.in sribd. Pls i need ur novel in pdf mode . becoz i can't read thru calemeo i can't able to use continiously net.yennukku avalavu vasathi yellam illai. Pls send ur novels. I won' t spread ti novels in net promise. My mail id s.sasi2610@gmail.com.pls pa.

    பதிலளிநீக்கு
  9. Ur mail is samyukthawriter@gmail intha maild ikkuthan mail pannen pa nenkal mail parpathu illaiya ? Illaiyendral pdf anuppa matinkala sollukanpa pls . im thollai kudukiren theyruyum but yena panuvathu yen situation appadi

    பதிலளிநீக்கு
  10. Ur mail is samyukthawriter@gmail intha maild ikkuthan mail pannen pa nenkal mail parpathu illaiya ? Illaiyendral pdf anuppa matinkala sollukanpa pls . im thollai kudukiren theyruyum but yena panuvathu yen situation appadi

    பதிலளிநீக்கு
  11. Hi samyuktha hi ti is sasi from bangalore . i already send so many request mail regarding i need ur novels in pdf mode . i read mayathroorikai.irukodukal.in sribd. Pls i need ur novel in pdf mode . becoz i can't read thru calemeo i can't able to use continiously net.yennukku avalavu vasathi yellam illai. Pls send ur novels. I won' t spread ti novels in net promise. My mail id s.sasi2610@gmail.com.pls pa.

    பதிலளிநீக்கு