வெள்ளி, 31 ஜூலை, 2015

கண் தீண்டி உறைகிறேன் - மூன்றாவது அத்தியாயம்



6 கருத்துகள்:

  1. சம்யுக்தா,
    ஆரம்பமே மோதலுடன் ஒரு கலக்கல் தான். ரெண்டு பேரும் இரு துருவங்கள் போல என்றுமே சேரக்கூடியவர்கள் அல்ல, ஆயினும் ஒரே ஒற்றுமை இருவரின், திருமண வாழ்க்கையின் மீதுள்ள வெறுப்பு...... இவர்கள் எப்படி இணையப்போகிறார்கள் என்று எதிர்பார்ப்பை கூட்டி விட்டிர்கள்.

    அதோடு சம்யுக்தா, அதிதி கதை பற்றிய என் விமர்சனம்.....அவசரப்பட்டுவிட்டோமோ என்று உறுத்துகிறது. எந்த வகையிலும் உங்கள் எழுத்திற்கான வேக தடை போல் அது அமைந்திருந்தால் மன்னிக்கவும்.....என் விமர்சனத்தின் தொடர்ச்சியாக நேர்மறையான ஒரு கருத்தையும் தெரிவித்திருந்தேன். அது உங்கள் பார்வையில் பட்டதா என்று தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகளுக்கு மிக்க நன்றி ரதி.

      உங்களுடைய விமர்சனத்தை நல்லவிதமாகத்தான் எடுத்துக் கொண்டேன் ரதி. வரிக்கு வரி தவறுகளைச் சுட்டிக் காட்டும் தோழியர் ஒரு சிலர் இருக்கிறார்கள். அதனால், ஒருபோதும் தவறாக நினைக்க மாட்டேன். வெறும் வாய்வார்த்தைக்காகச் சொல்லவில்லை. கதையை அலசி ஆராய்ந்து மனதில் படும் கருத்துகளை மறைக்காமல் தெரிவிக்கும் விமர்சனங்களைத் தான் எப்போதும் நான் எதிர்பார்ப்பேன். எழுத்தாளர்களுக்குப் பிடித்த வகையில் விமர்சிக்க வேண்டுமென்றால், விமர்சிப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். உங்களுடைய கருத்துகள் நிச்சயம் என்னை ஊக்கப் படுத்துகிறது ரதி. இன்னும் ஆழ்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணத்தையும், குறையாகத் தோன்றும் பகுதிகளையும் தெளிவாக எடுத்துரைக்கிறது. என்னை வளர்த்துக்கொள்ள உதவி செய்கிறது.

      எடிட் செய்யும் போது மாற்றிக்கொள்ளலாமென்று, நீங்கள் சொன்னவற்றைத் தனியாகக் குறித்து வைத்திருக்கிறேன். உங்களுடைய நேர்மறையான விமர்சனத்திற்கு பதில் கூறாததால் உங்களுக்கு இப்படித் தோன்றிவிட்டதோ என்னவோ. ஆனால், பதில் கொடுத்தேன் ரதி. ஏனோ போஸ்ட் ஆகவில்லை. வேலை மும்மரத்தில் அதை நான் கவனிக்கவில்லை. உங்களுடைய மனதில் தவறான யூகத்திற்கு இடம் கொடுத்துவிட்டதற்கு மன்னியுங்கள் ரதி.

      எப்போதும் போல மனதில் படும் கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி.

      நீக்கு
    2. எழுதும் வேகத்திற்கு என்னைத் தவிர வேறு யாரும் தடையாக இருப்பதில்லை. ஹ ஹ ஹா. :)
      கூல் ரதி. ஒரு மாதமாகவே வேலையும், உறவினர்களின் வருகையும் மிக அதிகமாக இருக்கிறது. அதனால்தான் தாமதமாகிறது.

      நீக்கு
    3. இப்போ தான் நிம்மதி. அவ்வளவு சீக்கிரத்தில் எந்த கதாசிரியரிடமும் எதிர்மறை விமர்சனங்களை தந்ததில்லை. அதற்கு காரணம் அவர்கள் இடத்தில் நான் இருந்தால் என்னால் விமர்சனங்களை பக்குவமாக எடுத்துகொள்ள முடியுமா என்று தெரியாது. அதனால் அப்படியே விட்டு விடுவேன்.

      ரொம்ப மொக்கை போட்டுவிட்டேன். இனி தொடர்ந்து விமர்சனங்கள் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

      நீக்கு
  2. Hallo. Sister
    கதை ரொம்ப. நல்லா இருக்கு.
    புதுமையானது இல்லை...ஆனாலும் நீங்க.
    சொன்ன. மாதிரி சலிப்பு இல்லாமல் படிக்க. ஆர்வமா இருக்கு.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி மணிமேகலை. சாதாரணமாகத்தான் ஆரம்பித்திருக்கிறேன்பா. முடிந்த வரை சுவாரசியமாகக் கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.

      நீக்கு