சொன்ன வார்த்தையைச் செயல்படுத்த முடியவில்லை நண்பர்களே. இன்னும் இருபது நாள்களானாலும் எனக்குப் பிடித்த வடிவில் கதையை முடிக்க மாட்டேன் போல. முன்பு இருந்ததற்கு இப்போது பரவாயில்லை என்ற எண்ணமும், ஓரளவு திருப்தியும் வந்துவிட்டன. புத்தகம் போடும் போது மாற்றிக் கொள்ளலாமென்று நினைத்து, முழுக் கதைக்குமான லிங்க்கைக் கொடுக்கிறேன். முப்பதாவது அத்தியாயத்திற்கு மேல்தான் ஆங்காங்கே மாற்றங்களைச் செய்துள்ளேன். முன்பே படித்தும் படிக்க நினைப்பவர்கள், அந்தப் பகுதியை மட்டும் படியுங்கள். இதுவரை எழுதியதிலேயே பெரிய கதை என்பதால், எபிலாக் தனியாக எழுதவில்லை. புத்தகம் போடும் போது, முடிந்தால் சேர்த்துவிடுகிறேன். நிறைகளைத் தெரிவிக்காவிட்டாலும், குறைகளைத் தயங்காமல் தெரிவியுங்கள். நிச்சயம் சந்தோஷமடைவேன். என்னைப் போன்ற கற்றுக் குட்டி எழுத்தாளர்களுக்கு அதுதான் பெரிய உதவியாக இருக்கும். கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
கண் தீண்டி உறைகிறேன் - முழுக் கதைக்குமான லிங்க்....
உங்களை கற்றுகுட்டி ன்னு சொல்றது உங்க தன்னடக்கத்தை காட்டுது. You are so special Samyuktha!!!! Janaki
பதிலளிநீக்குஹையோ! இப்படி வேற எடுத்துக்கறீங்களா! ஹ ஹ ஹா... ஆனாலும் நான் சொன்னது உண்மைதான் ஜானகி.
நீக்குஹாய் சம்யுக்தா ,
பதிலளிநீக்குமீண்டும் ஒரு அருமையான கதை கொடுத்திருக்கிங்க ..இன்று படிக்க ஆரம்பித்தேன் .கதை முடிக்காமல் என்னால் நகர முடியவில்லை ..மிகவும் பிடித்தது .
தர்ஷினி , கிருஷ்ணா பாத்திர படைப்பு மிக அருமை .
கடல் பற்றியும் அதன் சார்ந்த துறைகள் பற்றியும், கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் , அவற்றை மக்கள் மாசு படுத்துவது பற்றியும் நிறைய தகவல் படிக்க சுவாரிஷ்யமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது .
தலை முறை மாற்றங்கள் , இடைவெளி , பற்றியும் இக்கால இளைஞ்சர்களின் உணர்வுகள் பற்றியும் கூறி இருந்தது மிகவும் அருமை .
கிர்ஷ்ண பிராசாத் நிலைமையும் அவன் காயங்களும் மிக நெக்ழியாக இருந்தது.தர்ஷினி விளையாட்டு பொண்ணா இருந்தவா வாழ்கையை அதன் போக்கில் ஏற்று கொள்வதும் , காதலை உணர்வதும் , காதலினால் காதலன் குறையை ஏற்றி கொள்வதும் அழகா வார்த்தைகளில் கொண்டு வந்திருந்திங்க .
கதை படித்து முடிக்கும் வரை என்னை சுற்றி உள்ள உலகத்தை மறந்து படித்தேன் ..மிகவும் பிடித்ததும் . உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் .
உங்க அனைத்து கதைகளும் படித்திருக்கேன் .என் கருத்துகளையும் பகிர்ந்திருக்கேன் .நீண்ட மாதங்களுக்கு பிறகு ஒரு அருமையான நாவல் படித்த திருப்தி எனக்கு .உங்க அடுத்த நாவலுக்கு ஆவலா காத்திருப்பேன் ..
உமா உதய்
ஹாய் உமா…
நீக்குநலமாப்பா? நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறோம். :)
உங்களுடைய பாராட்டிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிப்பா. அதுபோலவே, உங்களுக்குப் பிடித்தவற்றையும், கதை பற்றிய கருத்துகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
அடுத்த கதையிலாவது, நீண்ட இடைவெளி விடாமல், வாரம் மூன்று அத்தியாயங்களாவது கொடுக்க நினைத்திருக்கிறேன். விரைவில் வருகிறேன்பா.
Samyu jii !
பதிலளிநீக்குHow are you ? Long time !! Somehow I found this website ! Phew!!
Another beautiful story ! Thanks a lot jii !!
Krish and dharsh cute pair ! I love the way you explain in and out bout the oceanography!! You do a reasesrch bout the subject you write?!!That's you beauty jii !! Kalakiteenga ponga !! Much appreciated !!
Athu eppadi ivalo azhagana subject ezhuthi Sariya varala nu thanadakama solreenga ??
Felt a bit less flavoured in the end ... But your revised work was perfect !! Hats off jii !! Another treasure from you !! I am simply amazed !! Beautiful job !! Can't go off without giving a comment .. Though I'm new to this site ..
Well done Samyu !! Keep up the good job
Thanks for giving a beautiful subject !!
Aiyooo sola maranthuten .. Mukiyammana vishayam .. Vitamin 'R' sooper jii !! Ha ha
Thank you and take care.
ஹாய் மேகி ஜிஜி…
நீக்குவாங்க வாங்க! நான் நலம், நீங்கள் நலமா? உங்களை இங்கே எதிர்பார்க்கவில்லை. ஆனா, உங்க ஹீரோவைக் கண்ணுல பார்த்தா, உங்களை நினைச்சுக்கறேன். ஹஹஹா.
ஆராய்ச்சி செய்தெல்லாம் எழுதவில்லை மேகி. தமிழ்நாட்டில் அவ்வளவாகப் பரிச்சயமில்லாத படிப்புப் படிக்கும் கதாநாயகி என்று முடிவெடுத்ததுமே எனக்குத் தோன்றின ஃபீல்ட். ஏன்னா, ஓஷனோகிராபி எனக்கு ரொம்பப் பிடிக்கும். நேர நெருக்கடியால், தெரிந்ததை எழுதலாமென்று எழுதினேன்.
உங்களுடைய பாராட்டு மழைக்கும், கருத்துகளுக்கும், வருகைக்கும் நன்றி ஜி… விட்டமின் ஆர் தானே! ஹ ஹ ஹா எபிலாக் கொடுத்திருந்தேன்னா, புரட்டி எடுத்திருக்கும். கற்பனையே கண்ணைக் கட்டுதேன்னு கையைக் கட்டுப் படுத்திட்டேன். ;)
ஹாய் சம்யூக்தா,
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
முழுக்கதையையும் படித்து விட்டு கருத்தோடு வருகிறேன்.
நன்றி பா.
நன்றி தேவி. உங்களுக்கும் தாமதமான வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.
நீக்குவாங்க வாங்க. ஆவலோடு உங்களுடைய கருத்துகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
பொங்கல் வாழ்த்துக்கள் சம்யு!!!!
பதிலளிநீக்கு30ஆம் அத்தியாயத்தில் இருந்து படிக்க வில்லை. அவன் ஆழ் கடல் ஆராய்ச்சிக்கு போவதற்கு முன் இருந்து படித்தேன். கிருஷ்ஷின் சுய அலசல் (அதற்காக தான் நான் ஆவலாக காத்துக்கொண்டிருந்தேன்) நன்றாக விரிவாக இருந்தது.
ஆனாலும் தர்ஷினி என் மனதில் புரியாத புதிர் ஆகிவிட்டாள். எப்படி அவளால் கிருஷ்ஷின் நீண்ட கால உதாசீனத்தை மீறி அன்பு செலுத்த முடிந்தது. அவன் மேல் நம்பிக்கை வைக்க முடிந்தது. ஒருவேளை அவர்கள் இருவரையும் சேர்த்துவைத்தது அவர்கள் துறை மீதிருந்த passion ஆ? இல்லை க்ரிஷ்ஷின் தாத்தா ஆரம்ப கால கட்டத்தில் அவளுக்கு கொடுத்த ஆதரவா??
உங்கள் கதைகளில் வரும் எல்லா முக்கிய கதாபாத்திரங்களும் பன்பட்டவர்களாக எதார்த்தவாதியாகவே பார்த்து பழகி விட்டேன். அவர்களை போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இருந்ததில்லை. ஆனால் தர்ஷினியின் எதிர்பார்ப்பில்லாத அன்பு + பொறுமை.... என்னால் முடியவில்லை(ஒருவேளை அவள் இடத்தில் என்னை நிறுத்தி பார்த்ததனால் இருக்கலாம்...). க்ரிஷ்ஷின் தலையில் நங்கென்று நாலு குட்டு குட்டினால் தேவலை என்றே தோன்றுகிறது.
சம்யு, இது அது என் மனதில் தோன்றிய க்ரிஷ்ஷின் மீதான கோபத்தின் வெளிப்பாடு. அவ்வளவே.
மற்றப்படி கதை நடை இயல்பாக எதார்த்தமாக இருந்தது. நேரம் கிடைக்கும் போது மீண்டும் ஒருமுறை முழுதாக படிக்க வேண்டும்.
அடுத்த கதையின் களம் எதுவாக இருக்கும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். பொறுமையாக field study( நீங்க கல்லூரி காலத்தில் கூட அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணி இருக்க கூடாத அளவுக்கு பல குண்டு புத்தகங்களை உருட்டி பிரட்டி) எல்லாம முடித்துவிட்டே வாருங்கள் :)
மிக்க நன்றி ரதி. பொங்கல் விழாவில் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அதனால், தாமதமான வாழ்த்தை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.
நீக்குமாற்றம் செய்த இடங்களையெல்லாம் ஹைலைட் செய்து தோழிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன் ரதி. உங்களுக்கும் அனுப்பியிருந்தால் படிக்க எளிதாக இருந்திருக்கும். இரண்டாவது முறை படிப்பது கொஞ்சம் கொடுமைதான்.
கதாநாயகியின் இடத்தில் நம்மை நிறுத்திப் பார்த்தால், நிறையக் கதைகளை ஒத்துக் கொள்ளவே முடியாது ரதி. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதிலேயே நிறைய குணாதிசய வேறுபாடுகள் வந்துவிடும். பிடிவாதத்துடன் எதிர்வாதம் செய்து கொண்டாலும், கிடைத்ததை ஏற்றுக் கொண்டு அதில் மகிழ்ச்சி காணும் ரகமாக தர்ஷினியை ஆரம்பத்திலிருந்தே முடிவு செய்தேன்.
இறுகிய முகபாவத்தின் பின்னிருக்கும் இளக்கத்தைக் கண்டு கொண்டால், நம்மையும் அறியாமல் பொறுமை வந்துவிடும்.
குண்டு குண்டு புத்தகங்களா... ஹ ஹ ஹா. சந்தேகம் வந்தால், உறுதி செய்து கொள்ள சில முறை கூகுளில் தேடுவேன். கதை ஆரம்பிக்கும் முன், கதைக்கருவோடு தொடர்புடைய நண்பர்களோடு பேசுவேன். அத்தோடு சரி. குண்டு குண்டு புத்தகங்களுக்கும், எனக்குமான இடைவெளியை அதிகரித்துப் பல வருடங்களாகிவிட்டன.
அடுத்த கதையை முடிவெடுத்துவிட்டேன்பா. ஆனால், முடிவு செய்திருக்கும் பயணங்கள் தாமதிக்க வைக்கின்றன. விரைவில் வருகிறேன். கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ரதி.
Very very nice and superb story.revised version fullaa padithuvitean,asusual rocks.Everytime you gave information on any one of the topic superb really hats of for that,wish for more and more stories eagerly waiting.
பதிலளிநீக்குதொடர்ந்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கும், வாழ்த்துகளைத் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி அருணா.
நீக்குவணக்கம் சம்யுக்தா,
பதிலளிநீக்குஒரு புதிய கதை தளம், கதை நன்றாக இருந்தது..
கதையின் முதல் அத்தியாயத்தில் ஒரு பெண் மனைவியாக மாறிவிட்டால் அட்ஜஸ்ட், கம்பர்மிஸ், விட்டு கொடுக்கும் தன்மையைப்பற்றி கிண்டல் செய்த தர்ஷினி அதை தான் செய்தாள் திருமணத்துக்குப்பின். தர்ஷினியிடம் மட்டுமே அதிகம் பேசாத முசுடாக இருக்கும் கிருஷ்ணா பிரசாத் கடைசி வரை அவளிடம் தன் உணர்வுகளை வார்த்தைகள் மூலமாக அதிகம் வெளிபடுத்தவே இல்லை. ஆனா தர்ஷினிக்கு அது தேவை இல்லை போல, அவளுக்கு அவனின் அசைவுகளே எல்லாம் சொல்லிவிடுகின்றன.
ஆரம்பத்தில் தன் பெற்றோர்களுக்குக்காக, பின்பு தாத்தாக்காக கடைசியில் தனக்காக காம்பிரமைஸ் செய்கிறாள், முதல் அத்தியாயத்துக்கு கடைசி அத்தியாய தர்ஷினிக்கு எவ்வளவு வேறுபாடுகள், ஆனால் இது நிதர்சன உண்மை எல்லா பெண்களும் கடக்கும் கால பயணம் தான்.
அரம்பத்தில வந்த சொந்தகார விக்னேஷ் அர்ச்சனா பாலா நடுவில் மட்டுமே வந்து சென்றார்கள். அப்புறம் காணாமல் போய்விட்டார்கள். அபிஷேக் அவனின் அம்மா எதற்காக புவனேஸ்வர் கு வந்தார்கள்?? விளக்கமில்லை.... கிருஷ்ணா பிரசாத்தின் தாய் தந்தை அதிகம் கதையில் வரவில்லை என்றாலும் வெறுக்கும் கதாப்பாதிரங்கள்.
அடுத்த கதை எப்போது..
அன்புடன்
Jass
வணக்கம் ஜாஸ்
நீக்குஉங்களைத்தான் காணோமென்று நினைத்தேன். வாங்க வாங்க!கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றிப்பா.
தேவைப்படும் இடங்களில் தேவைப்படும் கதாபாத்திரங்களை மட்டுமே சேர்க்க நினைப்பேன் ஜாஸ். அனைவரையும் கதையில் பயணிக்க வைத்தால், கதை இழுத்துக் கொண்டே போகும். . அதனால்தான் விட்டுவிட்டேன். புவனேஷ்வர் முக்கிய சுற்றுலாத் தலம்தானே. கோவில்களுக்கும் பிரசித்தி பெற்றது. தர்ஷினி கேட்டுக் கொள்ளவில்லை எனும் போது, அதை விளக்க வேண்டியதில்லை என்று அதையும் விட்டு விட்டேன்.
இடைவெளி அதிகம் விடாமல் இருக்க, வேலைகளைக் குறைத்துக் கொண்டு வருகிறேன் ஜாஸ். :)
ஹாய் சம்யுக்தா
பதிலளிநீக்கு'கண் தீண்டி உறைகிறேன்' இப்போது தான் படித்தேன்... உறைந்தேன்...
மிக அழகான எழுத்து நடை... உங்கள் எழுத்து என்னை பிரமிக்க தான் வைக்கிறது. வித்தியாசமான கதைக்களம்...
இதுவரை படிக்காத, தெரியாத விஷயத்தை பற்றி நிறைய விளக்கங்கள் கொடுத்து அசத்திட்டிங்க... சொல்லப் போனால், தர்ஷினியை போல... படிக்கும் எங்களுக்கும் கடல் சார்ந்த துரையின் மேல் ஒரு ஈர்ப்பை உண்டாக்கி விட்டது உங்கள் கதை..!
கிருஷ்ணா - 'அனாதை' என்பதே ஜீரணிக்க முடியாத விஷயம்.. அதை கூட தாங்கி கொள்ளலாம்
அதுபோல பெற்றோரின் பிரிவால் பிள்ளைகள் படும் துயரத்தையும் கூட பொறுத்துக் கொள்ளலாம்..
ஆனால் கருவில் உருவான போதே, யாருடைய பிள்ளை என்ற கேள்விக்குறியுடன் வளர்வது கொடுமை...! அது எந்தளவிற்கு அந்த பிள்ளையின் மனதை வருத்தும் என்பதை, கிருஷ்ணாவின் உணர்வுகள் மூலம் அழகாக சொல்லி இருக்கீங்க...! அவனுடைய கோபம், விருப்பு, வெறுப்பு, ஒதுக்கம் எல்லாமே இயல்பாக இருந்தது. வழக்கம்போல.., இந்த கதை ஹீரோவையும் பிடிக்க வைத்து விட்டீர்கள்..!
தர்ஷினி -- இவளைப் பற்றி என்ன சொல்ல...!! இவளை பெற்றார்களா...! செய்தார்களா...! என்னவொரு பேச்சு... துறுதுறுப்பான குணம் சூப்பர்... அவளின் டயலாக்ஸ் எல்லாம் அருமை...! அவளோட கடல் மேலான ஆர்வம் நம்மையும் பிடிச்சுக்கிச்சு..., அவ இடத்துல நாம இருந்த ஒரு ஃபீல்..
அவளோடு கூடவே, நம்மையும் கடலுக்கும், டைவிங்கும் அழைச்சுக்கிட்டு போய்ட்டா...!
அதேபோல தாத்தாவும்...! அவரின் குடும்ப சூழ்நிலையை சொல்லியிருக்கும் விதம் மனதை வாட்டுது... ஒரு சின்ன குழந்தையிடம் இப்படி பாராமுகத்தை காட்ட முடியுமா...? பெரியவர்கள் செய்த தவறுக்கு, பாவம் அந்த பிள்ளை என்ன செய்யும்..? நல்லவேளை தாத்தா சுந்தரேசன், கிருஷ்ணாவை பாதுக்காத்து வளர்த்தாரே.. கிரேட்... அதோடு விடாமல், அவனுக்கு என்று ஒரு குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து, குடும்ப கட்டமைப்பிற்குள் அவனையும் அழைத்து வர அவர் எடுத்த முயற்சிகள் அருமை...!
கதையின் முடிவில் தர்ஷினி & தாத்தா போன்று நம் வீட்டிலும் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை வராமல் இல்லை..!
கிருஷ்ணா & தர்ஷினி இருவருக்கும் இடையில் ஏற்படும் மெல்லிய சலனம் ஈர்ப்பாக மாறி... காதலில் தொடங்கி உறவில் முடிவது வரை, அவர்களின் ஊடல், கூடல் எல்லாம் மிக அழகாக இயல்பாக கொண்டு வந்து இருக்கீங்க...
கதையின் போக்கிலேயே சிலர் வந்து, அதன்பின் காணாமல் போனாலும் கூட அது ஒரு குறையாக தெரியவில்லை..
கடைசிவரை அவர்களை தேவையில்லாமல் கொண்டு வராமல், தேவையான இடத்துல மட்டும் வருமாறு செய்தது அடுத்த பிளஸ் பாய்ன்ட்.
'குடும்ப கட்டமைப்பு' எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லியிருக்கும் கதை...! அருமையான கதையை கொடுத்ததற்கு நன்றிகள் பல...!
உங்களுடைய எழுத்தில் எல்லாமே பிடித்து இருக்கு... ஒவ்வொரு வரியும் சூப்பர்... எனக்கு பிடித்தது..... 'கூட்டுக்குடும்பம் அறுகிப்போய் தனித்தனி தீவுகளாக மாறி... அடுத்து பிள்ளைகள் பெற்றோரை ஒதுக்கி
வாழும் நிலையம் வந்து... பிள்ளைகளே வேண்டாம் என்ற நிலையம்.. அதன்பின் கல்யாணமே வேண்டாம் என்று தனி தனி ஆளாக வாழும் நிலைக்கு வந்து விட்டோம்'
மொத்தத்தில் நல்லதொரு கதையை கொடுத்தமைக்கு நன்றி..... உங்களின் அடுத்த கதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நன்றி
தேனு
ஹாய் தேனு
நீக்குநலமாப்பா? கடல்சார் துறை உங்களுக்கும் பிடித்துப் போய் விட்டதா. கடல் மீது வரும் ஈர்ப்பு விட்டு விலக முடியாத ஈர்ப்பு. அது நம்மைக் கட்டிப்போட்டு விடும்.
கதாபாத்திரங்களை முழுமையாக அலசி ஆராய்ந்ததற்கு நன்றி தேனு. நிறையப் பேருக்கு கிருஷ்ணாவின் குணம் கொஞ்சம் பிடிக்கவில்லை. ஒரு சிலர் கொஞ்சம் அவனைத் திட்டிக்கூட மெயில் அனுப்பினார்கள். ஒரு வழியாக அவனைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டீர்கள். எனக்கும் அவனை நிறையப் பிடித்திருக்கிறது.
உங்களுடைய கருத்துகளையும், பாராட்டுகளையும் நீங்கள் ரசித்தவற்றையும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தேனு.
Hai samyu, Ennaku intha kathai romba pidichirunthathu.samyuktha niraiya yezhutha vendum.ungal novel bookaga viraivil vanthaal romba santhosa paduvaen.Ennai impress panni samyuktavin kathayai thedi thedi padikka vaitha maayathoorigai muthal novalaaga velivara vazhthukkal.God bless you samyu.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா. மாயத்தூரிகையைத்தான் முதலில் வெளியிட வேண்டுமென்று நானும் நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்பா. நேரம் வரும்போது நிச்சயம் புத்தக வடிவில் போட்டுவிடுகிறேன்.
நீக்கு