கலையாத கனவுகள் கதைக்கான நிறை, குறைகளைத் தெரிவித்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!!
சைதன்யனுக்கு ஆதரவாக சிலர், லாரஸிற்கு ஆதரவாக சிலர்... முக்கோணக் காதல் கதையில் அனைவரையும் திருப்தி செய்வது இயலாத காரியம். பருவ வயதில் முடிவெடுப்பதென்றால் சைதன்யனின் பக்கம்தான் கதை நகர்ந்திருக்கும். ஆனால், அலசி ஆராயும் வயது, லாரஸின் காதல் அனைத்தையும் மீறி சைதன்யனுடன் சேர்ந்து வைப்பது எதார்த்தமானதாக இல்லை.
ரிதன்யாவை சுயநலவாதி என்று சொல்வதை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காதலையும் உணராத போது, யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு இருக்கிறது. கல்லூரி நாட்களில் ஆசையை வளர்த்துக் கொண்டதற்கு, சைதன்யன் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. அது போலத்தான், அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல், ஆசையை வளர்த்துக் கொண்ட சைதன்யனுக்கும், அவள் பொறுப்பாக முடியாது என்று நினைக்கிறேன்.
வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் வளர்ந்த இரண்டு நபர்களைக் கவரக்கூடிய குணநலன்கள் கொண்டவள் சுயநலவாதியாக மட்டும் இருக்க முடியாது என்றும் தோன்றுகிறது. பார்வைகள் பலவிதம், அதனால் கருத்துக்களும் பலவிதமாகத்தான் இருக்க முடியும்.
ஆரம்பத்தில் யார் யாரெல்லாம் சைதன்யனைத் திட்டினார்களோ, கதை முடிந்த பிறகு, இந்த முடிவிற்காக என்னைத் திட்டுகிறார்கள். இதைத்தான் கதையின் வெற்றியாக நினைக்கிறேன். சைதன்யனுக்கு வேறு ஒரு ஜோடியையாவது காட்டுங்கள் என்று பலர் மெயிலில் தெரிவித்திருந்தீர்கள். அது சரிப்பட்டு வருமென்று தோன்றவில்லை. சைதன்யனின் கதாபாத்திரம் குறைகள் இருந்தாலும் அழுத்தமாகப் பதிவது கதையின் முடிவால்தான். மறைமுகமாக அவனுக்கும் சுபம் போட்டு, கொஞ்சம் மட்டும் சேர்த்திருக்கிறேன். சற்று இடைவெளி எடுத்துக் கொண்டு அடுத்த கதையோடு வருகிறேன். நன்றி!!!
கலையாத கனவுகள் - முழுக்கதைக்குமான லிங்க்:
http://en.calameo.com/read/002883469ee24ee83fe4a