புதன், 13 ஜனவரி, 2016

சொன்ன வார்த்தையைச் செயல்படுத்த முடியவில்லை நண்பர்களே. இன்னும் இருபது நாள்களானாலும் எனக்குப் பிடித்த வடிவில் கதையை முடிக்க மாட்டேன் போல. முன்பு இருந்ததற்கு இப்போது பரவாயில்லை என்ற எண்ணமும், ஓரளவு திருப்தியும் வந்துவிட்டன. புத்தகம் போடும் போது மாற்றிக் கொள்ளலாமென்று நினைத்து, முழுக் கதைக்குமான லிங்க்கைக் கொடுக்கிறேன். முப்பதாவது அத்தியாயத்திற்கு மேல்தான் ஆங்காங்கே மாற்றங்களைச் செய்துள்ளேன். முன்பே படித்தும் படிக்க நினைப்பவர்கள், அந்தப் பகுதியை மட்டும் படியுங்கள். இதுவரை எழுதியதிலேயே பெரிய கதை என்பதால், எபிலாக் தனியாக எழுதவில்லை. புத்தகம் போடும் போது, முடிந்தால் சேர்த்துவிடுகிறேன். நிறைகளைத் தெரிவிக்காவிட்டாலும், குறைகளைத் தயங்காமல் தெரிவியுங்கள். நிச்சயம் சந்தோஷமடைவேன். என்னைப் போன்ற கற்றுக் குட்டி எழுத்தாளர்களுக்கு அதுதான் பெரிய உதவியாக இருக்கும். கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கண் தீண்டி உறைகிறேன் - முழுக் கதைக்குமான லிங்க்....

புதன், 6 ஜனவரி, 2016

இது வரை கதையைப் படிக்கத் துவங்காதவர்கள், உலவிக் கொண்டிருக்கும் பிடிஎஃப்களில் படிக்க ஆரம்பித்துவிடாதீர்கள். முழுமையாகப் படித்துப் பார்க்கும்போது கடைசி ஆறு அத்தியாயங்கள் எனக்கே திருப்தியானவையாக இல்லை. தொடர்புகளைச் சரியாகச் சொல்லாமல், ஒருசில விளக்கங்களையும், உணர்வுகளையும் விட்டுவிட்டு, வேகவேகமாக ஓடியிருக்கிறேன். ஆங்காங்கே மாற்றம் செய்து, ஓரளவு குறைகளை நிவர்த்தி செய்து, இன்னும் இரண்டு நாள்களுக்குள் முழுக் கதைக்கான லிங்க்கையும் தருகிறேன். அதுவரை காத்திருங்கள்.  

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

கண் தீண்டி உறைகிறேன் - இறுதி அத்தியாயம்

http://en.calameo.com/read/002883469dc3e9c467e5b

கதையோடு பயணம் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! நீண்ட இடைவெளியென்பதால், என்னென்ன எழுதியிருக்கிறேனென்பதே நினைவில் இல்லை. கண்களில் பட்ட குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  முழு லிங்க் கொடுக்கும் போது மாற்றம் செய்ய உதவியாக இருக்கும். நன்றி!

வெள்ளி, 1 ஜனவரி, 2016

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நீண்ட காலமாகக் காத்திருக்க வைத்து,  உங்களின் பொறுமையைச் சோதிக்கும் வகையில் எழுதிக் கொண்டிருக்கும் கண் தீண்டி உறைகிறேன் கதையின் இறுதிப் பகுதிக்கு இன்னும் ஒரு அத்தியாயமே எஞ்சியிருக்கும் நிலையில்,
35 வது அத்தியாயம்
http://en.calameo.com/read/002883469e446f6ccc8b4