நண்பர்களே...
எனது கரை தொடும் அலைகள் நாவல், வாகை பதிப்பகத்தின் மூலம் புத்தக வடிவில் விரைவில் வெளியிடப்பட
இருக்கிறது என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நாவல்
எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை என்னுள் விதைத்த ஷெண்பா பாலச்சந்திரன், வரிக்கு வரி விமர்சனம்
செய்து என் எழுத்தை மெருகேற்ற உறுதுணையாக இருக்கும் வனிதா
ரவிச்சந்திரன், தொடர் மின்னஞ்சல்
மூலம் ஊக்கப்படுத்திய அமுதா பிளாக் நண்பர்கள்,
லேடீஸ் விங்ஸ் தளத்தில் எழுத அழைத்து புதிய வாசகர்களை அறிமுகப்படுத்திய மஞ்சுளா
செந்தில்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்போது புத்தகம் வெளியிடப் போகிறீர்கள் என்று அறிமுகமான நாள்
முதலாய்க் கேட்டு, புத்தகம்
வெளியிடும் எண்ணத்தைக் கொண்டிராத என்னை வெளியிடத் தூண்டிய மல்லிகா மணிவண்ணன், தமிழ் மதுரா, ஸ்ரீ லக்ஷ்மி
சகோதரிகள், கோகிலா, ஹமீதா, மேக்னா உள்ளிட சக
எழுத்தாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!
அறிமுக எழுத்தாளர் என்ற முறையில்
புகழ்பெற்ற பதிப்பகங்களுக்குள் நுழைவது மிகச் சிரமம் என்பதையும், புதுப் பதிப்பகம் ஆரம்பித்து இருநூறு
புத்தகங்களைக் கூட விற்க முடியாது என்ற நிதர்சனத்தைச் சொல்லி, புத்தகம் வெளியிடுவதைப் பற்றிச் சிந்திப்பதையே தவிர்த்திருந்த
போது, மணிக்கணக்கிலான விவாதத்திற்குப் பின் சென்னை
புக் ஃபேருக்குள் வெளியிடுகிறேன் என்று என் மூலமே சொல்ல வைத்த நண்பர்
சிபிக்கும், எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் பேசி விரைவில் புத்தகம்
வெளியிடத் தூண்டுகோலாக இருந்த தேவிப் பிரபா அக்காவிற்கும் என்
மனமார்ந்த நன்றிகள்!
அறிமுகமானவர்களிடமிருந்தும், குடும்ப
நண்பர்களிடமிருந்தும் கிடைக்கும் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் தாண்டி என்னை ஆன்லைன்
எழுத்தாளராக்கியதில் பெரும் பங்கு வாசகர்களாகிய உங்களைத்தான் சேரும். பல்வேறு
காலகட்டங்களில், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துரையிட்டு ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள்.
ஜாஷ், நிதா, வை ஸ்ரீ, கீதா, ராதா விஷ்வா, ராஜி, தேனு, ரதி, ஸ்வாதி, மாயா
உள்ளிட்டவர்களின் தொடர் விமர்சனங்கள் மூலம்
தான் என் பயணம் தொடங்கியது.அதற்குப் பின் நிறையப் பேர் தொடர் கருத்துரைகள் மூலமும், மின்னஞ்சல்கள் மூலமும் என்னை
எழுதத் தூண்டி வருகிறீர்கள். அனைவரின் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், இந்தச்
சந்தர்ப்பத்தில் அனைவரையும் நினைவுகூர்ந்து, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!
தற்போது அச்சில் உள்ள கரை
தொடும் அலைகளின் அட்டைபடம் உங்களின் பார்வைக்கு….