வியாழன், 17 மார்ச், 2016

கார்கால மேகங்கள் - மூன்றாவது அத்தியாயம்



புதன், 9 மார்ச், 2016

வெள்ளி, 4 மார்ச், 2016

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அடுத்த கதையோடு வந்திருக்கிறேன் நண்பர்களே! டிடர்மினிஸத்திற்கும், பாசிபிளிஸத்திற்குமான முரண்பாடுகளைக் கொண்ட நாயக நாயகிகளோடு பயணிக்கும் கமர்ஷியல் வகையறாக் கதையென்றாலும், காதல் இரண்டாம்பட்சமாகவே இருக்கும். விவசாயமும், இயற்கையும் முதன்மையானவையாக இருக்கும்.

எழுத வேண்டுமென்ற ஆர்வத்தை வலிய வரவழைத்துக் கொண்டு எழுதுவதால், அடுத்தடுத்த அத்தியாயங்களை உடனடியாக எழுதி முடிப்பேனா என்பது தெரியவில்லை. அதனால், அவ்வப்போது மின்னஞ்சலில் வந்து திட்டிச் செல்பவர்கள், கதை முடிந்த பின்னர் படியுங்கள். 

நிறைகளைவிட குறைகளைச் சுட்டிக் காட்டும்போதுதான் எழுத்தாளரின் எழுத்து மெருகேறுகிறது. அதனால், தொடர்ந்து வாசிப்பவர்கள், தயங்காமல் நிறைகளோடு குறைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

                      கார்கால மேகங்கள் – அத்தியாயம் 1