புதன், 6 ஜூன், 2018


நண்பர்களே

என்னுடைய கதைகளைப் படிக்க விரும்புபவர்கள் அமேசான் கிண்டிலில் படித்துக் கொள்ளுங்கள். இலவசமாகக் கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் தரம் குறைந்ததாகப் பார்க்கப்படுவதை உணர்ந்ததாலும், வெளிநாட்டில் வசிப்பவர்கள் படிப்பதற்கு வழியில்லையென்று சொல்வதாலும், புத்தகங்கள் வெளியிடுவதில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும் தான் இந்த மாற்றம்.

கார் கால மேகங்கள்       : https://www.amazon.in/dp/B07BK556QM
கரை தொடும் அலைகள் : https://www.amazon.in/dp/B07BJMMV8R
மாயத் தூரிகை                 : https://www.amazon.in/dp/B07BJL6RRQ
கலையாத கனவுகள்       : https://www.amazon.in/dp/B07DB5KN71

எஞ்சியிருக்கும் நாவல்களையும், அடுத்து வெளிவரவிருக்கும் அலையாத்தி என்னும் நாவலையும் நேரம் கிடைக்கும் போது பதிவேற்றம் செய்கிறேன்.

மற்றொரு முக்கிய அறிவிப்பு:

     பிடிஎஃப் களைக் கேட்பவர்களுக்குக் கொடுப்பதும் கொடுக்காததும் என்னுடைய சொந்த விருப்பம். அதனால், இணைய தளம் என்ற பெயரில் மற்றவர்களின் உழைப்பின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள், என்னுடைய புத்தகங்களைப் பதிவேற்றம் செய்யும் மிகப் பெரிய சேவையைச் செய்ய வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மீறிச் செய்தால்,

     1.  எவ்வளவு செக்யூரிட்டி இருந்தாலும், உங்களின் தளங்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.

    2. பல ஆயிரங்களைச் செலவழித்து, புதுப்புது தளங்களை உருவாக்கி, நாவல்களைப் பதிவிடுவதை வேலையாக வைத்திருந்தால், உங்களின் தளங்களை முடக்கும் புராக்ராம்கள் எழுதுவதை வேலையாகச் செய்ய முடியும்.

   3. நீங்கள் ஸ்கேன் செய்யும் நேரத்திற்குள் உங்களின் .பி. முகவரி மட்டுமல்ல, ஆதார் எண் வரை மிக எளிதாகக் கண்டறிந்து, உங்களின் புகழைப் பரப்ப முடியும்.

    4. மற்றவர்களின் எழுத்தை வைத்து நீங்கள் சம்பாதிப்பதைப் போல, உங்களின் புகைப்படங்கள் முதற்கொண்டு எதை வேண்டுமானாலும் உங்களிடமிருந்து திருடி எந்தத் தளத்தில் வேண்டுமானாலும் உலவ விட முடியும்.

 இன்னும் என்னென்ன செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவென்று உங்களுக்கே நன்கு தெரியும். வாய் வார்த்தையாக எதையும் நான் சொல்வதில்லை, என்னால் முடியுமென்பதை மட்டும்தான் சொல்வேன்.

 எதையும் செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், உங்களுக்குத் தெரியாத எதிக்ஸ் எனக்குத் தெரியும் என்பதால்...  அதனால், உங்களின் சேவையை இத்துடன் நிறுத்திவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

திங்கள், 1 ஜனவரி, 2018

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

‘மாயத்தூரிகை’ புத்தக வடிவில்...